Author: Six Side Media
-
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம்: 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீதிமன்றத்திற்கு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள், ‘ஹீனட்டியன சுபுன்’ எனப்படும் சுபுன் மதுஷங்க, ஷேன் திலான் சில்வா, ‘களு மல்லி’ எனப்படும் அஷான் பெர்னாண்டோ மற்றும் ‘பபா’ எனப்படும் சமீர சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தச் சந்தேகநபர்களை இன்றைய தினம் (27) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஈழமுரசின் இன்றைய தின ராசி பலன் 27.07.2026 திங்கட்கிழமை
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் கூடுதல் பொறுப்புகள் தேடி வந்தாலும், புதிய பணிகளுக்கான நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். அந்நியர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் நிலவும் சிறு பிரச்சனைகளை நிதானமாகப் பேசித் தீர்ப்பது நல்லது. புதிய வீடு அல்லது வாகனம் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அது நிறைவேறும் யோகம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: குங்குமச் சிவப்பு ஃ ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1 ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்குச் சுமாரான பலன்கள்…
-
தீவிரமடையும் எல் நினோ: இலங்கைக்கு கடுமையான வறட்சி அச்சறுத்தல்!
நாட்டில் தற்போது ‘எல் நினோ’ (El-Nino) காலநிலை நிலைமை உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். இது ஒரு வலுவான எல் நினோ நிலைமையாக மாறுவதற்கு முன்னர் 63% ஆக இருந்த சாத்தியக்கூறு, உலகளாவிய கணிப்புகளின்படி தற்போது 80% ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இவ்வாறு மிகவும் தீவிரமான எல் நினோ நிலைமை ஏற்படுமாயின், எதிர்வரும் ஆண்டின் முதலாம் காலாண்டில் நாட்டில் வறட்சி நிலைமை ஏற்படக்கூடும் என்றும் அவர்…
-
அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
அமெரிக்க நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை சியாட்டில் நகரில் உள்ள ஸ்பேஸ் நீடில் அருகே உள்ள அரங்கு ஒன்றில் உணவுத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் உள்ளே புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார். இதில் இரண்டு பேர் பலியாகினர். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில், சிறு குழந்தை ஒருவர் உட்பட மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர் மற்றும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம்…
-
அமெரிக்கா – ஈரான் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியதைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கடந்த வியாழக்கிழமை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்த பிரென்ட் (Brent) ரக மசகு எண்ணெய், தற்போது 92 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளது. இதேவேளை, WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 85 அமெரிக்க டொலர்களுக்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.
-
தெற்கு சீனாவில் ‘நௌல்’ சூறாவளி கனமழை – 10 பேர் உயிரிழப்பு
தெற்கு சீன மாகாணமான குவாங்டாங்கில் சூறாவளியுடன் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய 12ஆவது மற்றும் மிக வலிமையான சூறாவளியான இதுவாகும். குவாங்டொங் மாகாணத்தின் ஹுய்சோ நகரில் நேற்று (26) அதிகாலை 3:50 மணியளவில் பலத்த காற்று மற்றும் கனமழையுடன் கரையைக் கடந்துள்ளது. இதேவேளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவாங்டொங் மாகாணத்தில் மட்டும் 7 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன், அதிவேக ரயில் சேவைகள்…
-
காணி விடுவிப்பு கோரி பலாலியில் 6ஆவது வாரமாக போராட்டம்
வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி, பலாலி சந்தியில் இன்று (27) ஆறாவது வாரமாகவும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 36 ஆண்டுகளாக தமது காணிகளை இழந்த மக்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை முன்னெடுத்து வருவதாகவும், தாங்கள் நீண்டகாலமாக நிலமும், வீடும் இன்றி வாழ்ந்து வருவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில்,…
-
‘கண்ணிருந்தும் குருடர்களாக உள்ள சில அரசியல் தலைவர்கள் – பிரதியமைச்சர்
மலையகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் ‘கண்ணிருந்தும் குருடர்களாக’ உள்ளதாகவும், வீடுகள் எங்கே கட்டப்பட்டுள்ளன என்று கேட்பவர்கள் நேரில் வந்து பார்வையிடுமாறும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். ஹட்டனில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் இன்று (27) பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மலையக இளைஞர்களை தொழில் உலகிற்கு தயார்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின் முழு நிதி ஒதுக்கீட்டில் இயங்கும்…
-
நாளை முதல் மழையுடன் கூடிய வானிலை தீவிரம்
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை (28) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அடிக்கடி மழை பெய்யும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின்…
-
கனடாவில் மீளப்பெறப்படும் பிரபல சாக்லேட்
கனடாவில் பிரபல சாக்லேட் நிறுவனமான கேட்பரியின் ‘டெய்ரி மில்க் ஓரியோ’ (Dairy Milk Oreo) சாக்லேட் பார்கள் நாடு தழுவிய அளவில் சந்தையிலிருந்து அவசரமாக மீளப்பெறப்படுகின்றன. இந்த சாக்லேட் தயாரிப்பில் ‘பிஸ்தா’ பருப்புகள் சேர்க்கப்பட்டிருப்பது அதன் லேபிளில் குறிப்பிடப்படவில்லை. பிஸ்தா அல்லது மரக் கொட்டைகள் (Tree Nuts) ஒவ்வாமை (Allergy) உள்ளவர்களுக்கு இது கடுமையான அல்லது உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சாக்லேட்டைச் சாப்பிட்டதால் சிலருக்கு ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகப்…