Author: Six Side Media
-
நாமல் ராஜபக்ஷ மீதான வழக்கு ஒத்திவைப்பு
பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். இதனையடுத்து, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஒக்டோபர் 29ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், வழக்கும் அன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
-
ஈழமுரசின் இன்றைய ராசிபலன்- ஜூலை 30, 2026 வியாழன்
பஞ்சாங்கம் நாள் -வியாழக்கிழமை திதி -பிரதமை இரவு 10 வரை பிறகு துவிதியை நட்சத்திரம் – திருவோணம் மாலை 6.52 வரை பிறகு அவிட்டம் யோகம் – சித்தயோகம் ராகுகாலம் – பகல் 1.30 முதல் 3 வரை எமகண்டம் -காலை 6 முதல் 7.30 வரை நல்லநேரம் -பகல் 10.45 முதல் 11.45 வரை சந்திராஷ்டமம் -திருவாதிரை மாலை 6.52 வரை பிறகு புனர்பூசம் சூலம் -மேற்கு பரிகாரம் -தைலம் மேஷராசி அன்பர்களே! தாய்வழி உறவில்…
-
‘கடவுள் படங்களையும் மறைத்தோம்…’ – போர் சூழலில் வளர்ந்த தமிழ் பிள்ளையின் கதை
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் தாக்கம் காரணமாக பெற்றோருடன் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த பிராமி என்ற யுவதியின் உருக்கமான வாழ்க்கைப் பதிவு இது. தமிழர் என்ற காரணத்தால் சிறுவயதிலேயே பல்வேறு அச்சங்களையும் பாகுபாடுகளையும் எதிர்கொண்டதாக பிராமி கூறுகின்றார். அவருடைய குழந்தைப் பருவ நினைவுகள், குடும்பப் பிரிவு, நாட்டை விட்டு வெளியேறிய பயணம் மற்றும் புலம்பெயர்ந்த வாழ்க்கையின் சவால்களை இதில் பகிர்ந்துள்ளார். ‘என் குழந்தைப் பருவத்தின் முதல் இரண்டு ஆண்டுகளை யாழ்ப்பாணத்தில் கழித்தேன். ஆனால் இலங்கையைப் பற்றிய என் சிறுவயது…
-
கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் அமைச்சர் டொராண்டோ மேயர் தேர்தலில் போட்டி
கனடாவின் முன்னாள் கன்சர்வேடிவ் கட்சி அமைச்சரான கிறிஸ் அலெக்சாண்டர் , டொராண்டோ மேயர் தேர்தலில் போட்டியிட அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார். டொராண்டோ மாநகரம் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் தேங்கி நிற்பதாகக் கூறி, அதை மீட்டெடுக்க ஒரு ‘வெளிநாட்டவர்’ (Outsider) தேவை என்ற முழக்கத்துடன் அவர் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பரின் கன்சர்வேடிவ் அரசாங்கத்தில் (2013-2015) குடியுரிமை மற்றும் குடிவரவு அமைச்சராகப் பணியாற்றினார். மேலும், ஆப்கானிஸ்தானுக்கான கனடாவின் தூதராகவும் இருந்துள்ளார்.டொராண்டோ மாநகர…
-
கனடாவில் ‘தரவு கசிவு’ சம்பவங்களால் நிதி இழப்பு :ஐபிஎம் அறிக்கை
கனடாவில் தரவு கசிவு (Data Breach) சம்பவங்களால் நிறுவனங்களுக்கு ஏற்படும் சராசரி நிதி இழப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 7.11 மில்லியன் கனடிய டாலர்களாக (CA$ 7.11 million) உயர்ந்துள்ளதாக IBM Report வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் ஒரு தரவு கசிவு சம்பவத்திற்கு நிறுவனங்கள் சராசரியாக 7.11 மில்லியன் கனடிய டொலர் செலவிட வேண்டியுள்ளது. இது கடந்த 2025-ஆம் ஆண்டில் 6.98 மில்லியன் டொலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு தரவு கசிவின்…
-
டி20 தரவரிசையில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி முன்னேற்றம்
டி20 தரவரிசையில் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளார். ஐ.சி.சி கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுகிறது. அதன்படி, இந்த வாரத்துக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை 29) வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்த வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்து தொடரில் விளையாடவில்லை என்றாலும், இங்கிலாந்து…
-
அசாமில் வெள்ளப் பாதிப்பு தீவிரம் – உயிரிழப்பு 75 ஆக உயர்வு
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளப் பாதிப்பால் இதுவரை சுமார் 3.32 இலட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.9 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
-
24 மணி 24 நிமிடங்கள் தொடர்ச்சிப் பயணம் – குவாண்டஸ் புதிய சாதனை
உலகின் நீண்ட தூர விமான சேவை வழங்கும் முயற்சியாக, தொடர்ந்து 24 மணிநேரம் 24 நிமிடங்கள் எயார்பஸ் விமானத்தை பறக்க விட்டு அவுஸ்திரேலியாவின் குவாண்டஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வணீக ரீதியிலான இந்த எயார்பஸ் ஏ350 ரக விமானம். கடந்த கடந்த 27ஆம் திகதி மாலை 5.27 மணிக்கு மெல்போர்னில் இருந்து புறப்பட்டு. நேற்று (28) மாலை பிரான்சின் டுலூஸ் நகருக்கு சென்றடைந்தது. மெல்போர்னில் இருந்து புறப்பட்டு. பசிபிக் பெருங்கடல். அமெரிக்கா. கனடா மற்றும்…
-
வன்முறையில் ஈடுபட்ட இருவருக்கு பொது வெளியில் தூக்கு தண்டனை
ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு நபர்களுக்கு நேற்று (28) பொதுவெளியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அபோல்ஃபாஸ்ல் செபாஹி மற்றும் அமீர்-ஹொசைன் சபாஹி ஆகிய இருவரும் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி பொலிஸ்அதிகாரிகளை ஆயுதங்களால் தாக்கி, பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து கொலை செய்ததாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பொதுவெளியில் ஆயுதங்களை ஏந்தி அச்சத்தை உண்டாக்கியது, நாட்டின் பொது ஒழுங்கையும் அமைதியையும் சீர்குலைத்தது மற்றும்…
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் – ட்ரம்ப் திட்டவட்டம்
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ம் திகதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலை உயர்ந்தது. இதையடுத்து. இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால். ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு…