Author: Six Side Media
-
சர்வதேச மேடைப்பேச்சு போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஒமர் ஹசாரிக்கு முதலிடம்
லண்டனில் நடைபெற்ற சர்வதேச மேடைப்பேச்சு போட்டியில் (International Public Speaking Competition – IPSC 2026) இலங்கையைச் சேர்ந்த ஒமர் ஹசாரி என்ற மாணவர் முதலிடம் பெற்று உலக சாம்பியன் பட்டத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்திய 19 வயதுடைய ஒமர் ஹசாரி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார். பிரித்தானியாவின் The English-Speaking Union UK அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த சர்வதேச…
-
ஏழு நிமிடங்களில் ரூ. 15 கோடி மதிப்பிலான பிட்காயிணைப் பறிகொடுத்த கனேடியர்
கனேடியருக்குச் சொந்தமான 1.6 மில்லியன் டொலர் மதிப்பிலான பிட்காயின் மாயம் கனேடியத் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ரூ 15 கோடி மதிப்பிலான பிட்காயின்கள் ஏழே நிமிடங்களில் கொள்ளைப்போன சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Coldcard வன்பொருள் வாலட்களுடன் (hardware wallets) தொடர்புடைய பாதுகாப்பு மீறல் ஒன்று கிரிப்டோகரன்சி சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமார் 1,367.05 பிட்காயின்கள் (BTC) திருடப்பட்டிருக்கலாம் என்று பிளாக்செயின் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். பாதுகாப்பு மீறல் நடத்தியவர்கள், வாலட்டின் ‘சீட் ஃப்ரரேஸ்’ (seed phrase)…
-
மனிதர்களுக்கான ப்ரிட்ஜ் – ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு
உலகம் முழுவதும் கோடை வெயில் சாதனை அளவை எட்டி வரும் நிலையில், வெளியில் கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களைக் காக்கும் வகையில் ஜப்பான் நிறுவனம் ஒன்று “மனிதர்களுக்கான ஃப்ரிட்ஜ்” என்ற புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடுமையான வெப்பத்தில் வேலை செய்பவர்கள் இந்தச் சிறிய அறை போன்ற சாதனத்திற்குள் சென்ற சில வினாடிகளிலேயே அவர்களின் உடல் வெப்பநிலை கணிசமாகக் குறைந்துவிடுகிறது. கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் வெப்ப பக்கவாதம் போன்ற ஆபத்துகளில் சிக்காமல் இருக்க இது பெரிதும் உதவும் எனத்…
-
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்: திட்டமிட்ட தாக்குதலை இரத்து செய்தார் டொனால்ட் ட்ரம்ப்!
ஈரான் மீது மேற்கொள்ளவிருந்த பிரம்மாண்ட தாக்குதலைக் தற்காலிகமாக இரத்து செய்துள்ளதாக அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் அரசுடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை இன்று (03) திங்கள்கிழமை பிற்பகல் ஆரம்பிக்கும் எனத் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தத்தை எட்டுவதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து, ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை நிறுத்தி…
-
வல்வைப் படுகொலையின் 37வது ஆண்டு நினைவேந்தல்!
வல்வைப் படுகொலையின் 37வது ஆண்டு நினைவேந்தல் நேற்று (2) நடைபெற்றது. வல்வெட்டித்துறை நகரில், தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த் தேசியப் பேரவையினரின் ஏற்பாட்டில் வல்வைப் படுகொலையின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நடத்தப்பட்டது. 1989.08.02 அன்று இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது பொதுமக்களில் 72 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட 72 பேரின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்…
-
மனதை அமைதியாக்கும் கலை – மாபெரும் நிசப்தத்தின் வல்லமை (Stillness is the Key)
. இன்றைய நவீன உலகம் எப்போதும் ஒருவிதமான இரைச்சலிலும், பதற்றத்திலும், வேகத்திலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. “யார் வேகமாக ஓடுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்” என்று சமூகம் நம்புகிறது. ஆனால், உண்மையான அதிகாரம் என்பது வேகத்தில் இல்லை; அது ‘அசைவற்ற அமைதியில்’ (Stillness) இருக்கிறது. . எப்பேர்ப்பட்ட புயல் அடித்தாலும், சலனமே இல்லாமல் ஆழ்ந்த நிசப்தத்தில் இருக்கும் கடலின் அடி ஆழத்தைப் போல, உங்கள் மனதை அசைவற்ற ஒரு கோட்டையாக மாற்றுவதே நமது இந்தப் பயிற்சியின் மாபெரும் நோக்கம்.…
-
செயற்கை நுண்ணறிவும், நீர் பற்றாக்குறை அபாயமும்!
செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பம் இன்று உலகம் முழுவதும் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. மருத்துவம், கல்வி, தொழில்துறை, வங்கிச் சேவை, விவசாயம் மற்றும் போக்குவரத்து என மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் ஏ.ஐ. தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது. இது மனிதர்களின் பணிச்சுமையைக் குறைத்துச் செயல்திறனை அதிகரிக்கும் தொழில்நுட்பமாகப் பார்க்கப்பட்டாலும், இதன் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் குறித்த கவலைகளும் எழுந்துள்ளன. குறிப்பாக, ஏ.ஐ. பயன்பாடு அதிகரிப்பதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு…
-
ஜப்பான் தெற்கே உருவாகும் சூறாவளி – நாட்டில் மீண்டும் கனமழைக்கு எச்சரிக்கை
தற்போது பசிபிக் பெருங்கடலில் ஜப்பானின் தெற்குப் பகுதியில் உருவாகி வரும் சூறாவளி காரணமாக, எதிர்வரும் 6ஆம் திகதிக்குப் பிறகு மீண்டும் மழை நிலைமை தீவிரமடையக்கூடுமெனவும், தற்போது நாட்டில் நிலவும் கடும் மழை நிலைமை நாளை (04) நண்பகலுக்குப் பின்னர் படிப்படியாகக் குறையுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே இந்தத் தகவலை வெளியிட்டார்.…
-
பண்டாரவன்னியன், பால்ராஜ் போன்றோரை நினைவு கூருவது வரலாற்றுக்கடமை – ரவிகரன் எம்.பி.
தமிழர்களின் வீரத்தினைப் பறைசாற்றுகின்றவகையிலான வரலாற்றினையுடைய வன்னி மன்னன் பண்டாரவன்னியன், பால்ராஜ் போன்றவர்களை நினைவுகூருவது தமிழர்களின் வரலாற்றுக் கடமை என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அத்தோடு கடந்த மேமாதம் இலங்கை பாராளுமன்றில் பால்ராஜ்ஜிற்கு தாம் அஞ்சலி செலுத்தியமைக்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், பெரும்பான்மை இனத்தவர்கள் பலரும் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்ததாகச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இவ்வாறான எதிர்ப்புக்களைக் கண்டு தாம் அஞ்சப்போவதில்லை எனவும் இவ்வாறான நினைவுகூரல்களும், அஞ்சலிகளும் தம்மால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவுந் தெரிவித்துள்ளார்.…
-
“ஒவ்வோர் ஊழியரும் AI மூலம் பயனடைவது உறுதிசெய்யப்படும்”
சிங்கப்பூரில் ஒவ்வோர் ஊழியரும் AI தொழில்நுட்பத்தின்வழி பயனடைவதை உறுதிசெய்யவிருப்பதாக தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸின் தேசிய தினச் செய்தியை அதன் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் இன்று வெளியிட்டார். CTC எனும் நிறுவனப் பயிற்சிக் குழு மானியத்தைப் பெற்ற திட்டங்களில் சுமார் 30 விழுக்காடு AI தொடர்பான திட்டங்கள் என்று கூறப்பட்டது. மானியத்தின்மூலம் இதுவரை 15,000 ஊழியர்கள் பயன்பெற்றுள்ளனர். ஊழியர்களின் வயது அல்லது வேலைத் தகுதி எதுவாக இருந்தாலும் AI மூலம் அவர்கள் பலன்பெற…