Author: Six Side Media
-
அருணாசல பிரதேசத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
இந்தியாவின் மாநிலமான அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தில் நேற்று காலை(05.08.2026) 5.45 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிச்டர் 5.1 அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திற்கு முன்பாக, …
-
ஆன்மீக தலைவர் கொமெய்னியை தொடர்புகொள்வது கடினம் – ஈரான் ஜனாதிபதி
இந்த தருணத்தில் ஈரான் ஆன்மீக தலைவர் கொமெய்னியை தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் கூறியுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் ஆன்மீக தலைவர் அயோதுல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டார். இதனையடுத்து புதிய மதத் தலைவராக அவரது மகன் மொஜ்தபா கொமெய்னி தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இதுவரை அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. தந்தை இறுதிச்சடங்கிலும் அவர் பங்கேற்கவில்லை. மொஜ்தபா கொமெய்னி பெயரில் அறிக்கை மட்டுமே வெளிவந்து கொண்டுள்ளன. அவர்…
-
ரஷ்ய தாக்குதலில் கெய்வ் நகரில் குறைந்தது 20 பேர் உயிரிழப்பு
ரஷ்ய படைகள் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் (Drones) தாக்குதலில் உக்ரைனின் தலைநகரான கெய்வ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பல டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்த பயங்கர தாக்குதலால் பல குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இத்தகைய தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சர்வதேச நாடுகளிடம் இருந்து கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defense Systems) உக்ரைனுக்கு உடனடியாக தேவைப்படுவதாக அதிபர் வோலோடிமிர்…
-
தமிழக முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை மீண்டும் விசாரணை
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை தொடர்பான வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நாளை (07) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தனிப்பட்ட காரணங்களால் இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா, செங்கல்பட்டு…
-
‘உறங்கும் பெண்மணி’ தோற்றம் : உலகைக் கவரும் அபூர்வ இயற்கை மலைத்தொடர்!
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அமைந்துள்ள ‘ஸ்லீப்பிங் லேடி’ (Sleeping Lady) என அழைக்கப்படும் மலை, வான்வழியாக மேலிருந்து பார்க்கும்போது ஓய்வெடுத்து படுத்திருக்கும் பிரம்மாண்டமான பெண்ணின் உருவத்தை ஒத்திருப்பதால் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலிருந்து நோக்கும்போது, இயற்கையாக உருவான மலைத்தொடரின் அமைப்பு, தலை, மார்பு, இடுப்பு மற்றும் கால்கள் உள்ளிட்ட மனித உருவத்தைப் போன்ற தோற்றத்தை மிகத் தெளிவாகப் பிரதிபலிப்பதாகக் காணப்படுகிறது. இந்த அபூர்வமான இயற்கை அமைப்பு காரணமாக, ‘ஸ்லீப்பிங் லேடி’ மலை சமூக வலைத்தளங்களில் வைரலாக…
-
ஆல்பர்ட்டா தனிநாடு ஆதரவுக் குழுவின் பிரிவினைத் திட்டம்: நிபுணர்களின் மதிப்பீட்டைக் கோருகிறது
கனடாவின் ஆல்பர்ட்டா (Alberta) மாகாணத்தைச் சுதந்திர இறையாண்மை கொண்ட தனிநாடாக மாற்றுவதற்கான சட்ட, பொருளாதார மற்றும் நிர்வாக வழிமுறைகளை உள்ளடக்கிய “பிரிவினை வரைபடத்தை” (Separation blueprint) ‘ஃபிரீ ஆல்பர்ட்டா ஸ்ட்ராடஜி’ (Free Alberta Strategy) என்ற சுதந்திர ஆதரவுக் குழு தயாரித்துள்ளது. இந்த தனிநாடு திட்ட அறிக்கையைப் பொதுமக்கள் பார்வைக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன், இதன் நிதி மாதிரிகள் மற்றும் மாற்றத்திற்கான காலக்கெடுவின் நடைமுறைச் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்காகச் சட்ட அறிஞர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அரசியலமைப்பு நிபுணர்களின்…
-
யாழ்ப்பாண வைத்தியத்துறையிலே மிகப்பெரியதொரு ஆளுமைகளில் ஒருவர் ஓய்வு பெறுகின்றார்!
சத்திரசிகிச்சைகளில் தனக்கென ஒரு தனியான வகிபாகத்தை கொண்டு ,மிகப்பெரிய நிபுணராக மக்களுக்கு சிறப்பான சேவையாற்றிய வைத்திய நிபுணர் நா.சிறீஸ்கந்தராஜா அவர்கள் தனது 63 ஆவது வயதுடன் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார். 34 வருட சேவையில் யாழ்ப்பாணம் மக்களுடனேயே நின்று ,எமது மக்கள் முக்கியமாக போர்க்கால விழுப்புண்கள் , அதிலும் குறிப்பாக கண்ணிவெடிகளில் கால்களை வைத்து துன்பப்பட்டபோது அவர்களுக்காக இரவு பகலாக சத்திர சிகிச்சைகளை மிகப்பெரும் நிபுணர்களுக்கு வலது கையாக நின்று சத்தமில்லாமல் செய்தவர். தான்கொண்ட கொள்கையால் துன்பத்தில்…
-
நிலவில் விழுந்து நொறுங்கிய SpaceX ராக்கெட்: 8,690 கி.மீ வேக மோதலால் உருவான புதிய பள்ளம்!
Defunct SpaceX rocket : எலான் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டின் மேல் பகுதி, மணிக்கு சுமார் 8,690 கி.மீ வேகத்தில் நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைராலாகி வருகின்றது. சுமார் 4,000 கிலோ எடையுள்ள இந்த ராக்கெட் பாகம் மோதியதில், நிலவில் 20 முதல் 30 மீட்டர் அகலமுள்ள புதிய பள்ளம் உருவாகியுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2025 ஜனவரியில் நிலவு ஆய்வு விண்கலங்களை…
-
இத்தாலியில் ஆபத்திலிருந்த பெண்ணை காப்பாற்றிய இலங்கையர் மீது தாக்குதல்
இத்தாலியில் ஆபத்தில் இருந்த பெண்ணை காப்பாற்றிய இலங்கையர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிலான் நகரில் கட்டட பராமரிப்பாளராக பணியாற்றி வரும் 52 வயதான இலங்கையர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் 22 வயதான பெண்ணை நபர் ஒருவர் தாக்குவதற்கு துரத்தியுள்ளார். இந்நிலையில் பணியில் இருந்து இலங்கையரிடம் சென்ற பெண் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் விரைந்த செயற்பட்ட இலங்கையர், தாக்க வந்த நபரை விரட்டியுள்ளார். இதனையடுத்து பாதிகப்பட்ட பெண்ணும் அங்கிருந்து சென்ற நிலையில், சிறிது…
-
இலங்கையில் தீவிர பாதுகாப்பில் நீதிபதிகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குடன் தொடர்புடைய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பாதுகாப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல்கள் தொடர்பான அரசுத் தரப்பு வழக்கில் முக்கிய ஆதாரங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றத்தின் நிரந்தர அமர்வின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக…