Author: Six Side Media

  • 2021 முதல் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ.557 கோடி செலவு: வெளியுறவுத் துறை தகவல்

    2021-ஆம் ஆண்டிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரசு கருவூலத்திலிருந்து குறைந்தபட்சம் ரூ.557.51 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சகம் (MEA) சமர்ப்பித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களான சஞ்சய் சிங் மற்றும் டாக்டர் வி. சிவவாசன் ஆகியோர் எழுப்பிய வினாவுக்கு வெளியுறவு அமைச்சகம் இந்த எழுத்துப்பூர்வ பதிலை வழங்கியுள்ளது. பிரதமரின் வெளிநாட்டுப் பயண விவரங்கள், ஒவ்வொரு பயணத்திற்கும் ஆன செலவுத் தொகை, இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் முதலீட்டு உறுதிமொழிகள் பற்றிய தகவல்கள் இதில் கோரப்பட்டிருந்தன. இந்த…

  • டூரிஸ்ட ஏமாத்துறதே இந்த நாட்டுக்கு பொழப்பு… 2-வது இடத்தை பிடித்த டென்மார்க்; சீனா எந்த இடம் தெரியுமா?

    ஒரு நகரம் மற்றும் அங்குள்ள முக்கிய ஈர்ப்பு மையங்கள் குறித்து சுற்றுலாப் பயணிகள் எவ்வளவு எதிர்மறையான, ஏமாற்றமளிக்கும் விமர்சனங்களை எழுதியுள்ளனர் என்பதைக் கணக்கிட்டே இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் பரபரப்பான சாகசங்கள், கண்கவர் அழகிய இடங்கள் மற்றும் மாயாஜாலமான அனுபவங்களை அள்ளித்தரும் என்று விளம்பரப்படுத்தப்படும் ஒரு நகரத்திற்கு நீங்கள் சென்றதுண்டா? அப்படிச் சென்று, அங்கு உண்மையிலேயே இருந்த சூழலைப் பார்த்து முற்றிலும் ஏமாற்றம் அடைந்தது உண்டா? உலக அளவில் பயணம் செய்யும் பல சுற்றுலாப் பயணிகளுக்கு, சில…

  • கனடாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

    டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை 26ம் திகதி அதிகாலை 5 மணியளவில் டொராண்டா நகரின் மையப்பகுதியான யுனிவர்சிட்டி அவென்யூவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வெள்ளை நிற கார் ஒன்று அங்கிருந்து தப்பிச் செல்வதை தூதரக காவலர் கண்டுள்ளார். இதனையடுத்து தகவலறிந்து வெள்ளை நிற காரை துரத்திய பொலிஸார், ஒருகட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு…

  • குஜராத்தில் அசையும் கிணறு

    இந்தியாவின் குஜராத்தில் கிணறு ஒன்றில் தொடர்ந்து நீர் பயங்கரமாக அசைந்துகொண்டிருக்கும் விடயம் ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்துவருகிறது. இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள வீரபத்ரா கிராமத்தில், மூன்று மாதங்களுக்கு முன், தன் நிலத்தில் பிரம்மாண்ட கிணறு ஒன்றைத் தோண்டியுள்ளார் ப்ரன் ஜீவன் சதாரியா என்னும் விவசாயி. இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 2ஆம் திகதி, கிணற்றுக்குச் சென்ற சதாரியா, வித்தியாசமான காட்சி ஒன்றைக் கண்டுள்ளார். வாளியை அசைக்கும்போது அதிலுள்ள தண்ணீர் அசைவதைப் போல, அந்தக் கிணற்றிலுள்ள நீர் பயங்கரமாக அசைந்துகொண்டே…

  • சவுதி-துருக்கி-பாகிஸ்தான் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து

    சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று முக்கியமான இஸ்லாமிய நாடுகள் இன்று (ஆகஸ்ட் 7) ஜெத்தாவில் கூடி, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன. சவுதி இராணுவம் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய வட்டாரங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த ஒப்பந்தம் நீண்ட காலமாக ஆலோசனையில் இருந்தாலும், சமீபத்திய பிராந்திய சூழ்நிலைகள் காரணமாக விரைவாக முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா-ஈரான் போரின் தாக்கம், ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடலில் கப்பல் போக்குவரத்து பாதிப்பு ஆகியவை இந்த ஒப்பந்தத்தை அவசியமாக்கியுள்ளன.…

  • கனடாவில் இந்தியர் பலி

    கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவரைக் கொன்றதாக கனேடியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள எட்மண்டன் நகரில், கொள்ளை முயற்சி ஒன்றின்போது இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். எட்மண்டனில் மதுபான விடுதி ஒன்றை நடத்திவரும் சுக்ஜீத் சிங் ரந்தாவா (48) என்பவர், புதன்கிழமை இரவு தனது விடுதியை மூடிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சிங் கடையில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவரை சிங் தடுக்க, அந்த நபர் சிங்கை தாக்கியுள்ளார். தகவலறிந்த பொலிசார் சம்பவ…

  • பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்த 97 வயது மூதாட்டி

    97 வயது மூதாட்டி, பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பிரித்தானியாவின் செல்டென்ஹாமைச் சேர்ந்தவர் 97 வயதான பெட்டி ப்ரோமேஜ் என்ற மூதாட்டி. கடந்த ஆண்டு இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, செல்டென்ஹாம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். செல்டென்ஹாம் மருத்துவமனை ஊழியர்கள் தன்னை நன்றாக கவனித்து கொண்டதால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நிதிதிரட்டும் முயற்சியில் இறங்கினார். இதற்காக பறக்கும் விமானம் ஒன்றின் ரெக்கை மேல் நடந்துள்ளார். முன்னதாக 4 ஆண்டுகளுக்கு முன்னரே…

  • லலித் – குகன் காணாமற்போன வழக்கு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொளி ஊடாக சாட்சியமளிக்க உத்தரவு

    2011ஆம் ஆண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமற்போன சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொளி அழைப்பின் ஊடாக சாட்சியமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு காணொளி அழைப்பின் ஊடாக அவர் சாட்சியமளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • கொழும்பு மெகசின் சிறைச்சாலை பதற்றம்: ஒரு கைதி உயிரிழப்பு

    கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மையில் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

  • விஜய் – சங்கீதா வழக்கில் பரபரப்பு: தொடர்பில்லாத நபர்கள் வெளியேற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணையை இன்று பிற்பகல் எடுத்துக்கொள்ள செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமன்ற அமர்வு நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டிய விஜய் தரப்பு, வழக்கின் விசாரணையை வேறு ஒரு திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. எனினும், சங்கீதா காணொளி அழைப்பு ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானார். வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, வழக்குடன் தொடர்பில்லாத நபர்கள் அனைவரும் நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர்…