Author: Six Side Media
-
ஹேலிஃபேக்ஸ் பிராந்திய நகராட்சியில் (Halifax Regional Municipality – HRM) விடுக்கப்பட்டிருந்த அவசர எச்சரிக்கை,திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஹேலிஃபேக்ஸ் பிராந்திய நகராட்சியில் (Halifax Regional Municipality – HRM) விடுக்கப்பட்டிருந்த அவசர எச்சரிக்கை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. நோவா ஸ்கோடியாவின் (N.S.) சவுத் ஃபார்மிங்டன் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஆயுதம் ஏந்திய நபர், பெட்ஃபோர்டு பகுதியில் உள்ள ‘சன்னிசைடு மால்’ (Sunnyside Mall) பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் இருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதனால் முதலில்…
-
ஈழமுரசின் இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 9, 2026 ஞாயிறு
பஞ்சாங்கம் நாள் ஞாயிற்றுக்கிழமை திதி சதுர்த்தி இரவு 10.08 பிறகு பஞ்சமி நட்சத்திரம் பூரட்டாதி இரவு 9.14 வரை பிறகு உத்திரட்டாதி யோகம் சித்தயோகம் இரவு 9.14 வரை பிறகு அமிர்தயோகம் ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 வரை எமகண்டம் பகல் 12.00 முதல் 1.30 வரை நல்லநேரம் காலை 7.45 முதல் 8.45 வரை / பகல் 3.15 முதல் 4.15 வரை சந்திராஷ்டமம் ஆயில்யம் இரவு 9.14 வரை பிறகு மகம் சூலம்…
-
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதால், அம்மாநிலப் பிரதமர் டேவிட் ஈபி (David Eby) மாகாணம் முழுமைக்குமான அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார். ‘பால்ட் ரேஞ்ச்’ (Bald Range) என்ற காட்டுத்தீ மிக வேகமாகப் பரவி வருவதால், சம்மர்லேண்ட் (Summerland) பகுதியின் 12,000 மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மாகாணம் முழுவதும் 22,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய இந்த காட்டுத்தீ, சில மணி…
-
ஜப்பானைத் தாக்கிய ‘டொல்பின்’ புயல்
தெற்கு ஜப்பானின் ஒகினாவா, ககோஷிமா மாகாணங்களை ‘டொல்பின்’ புயல் சனிக்கிழமை பலத்த காற்றுடன் தாக்கியது. அப்போது, மணிக்கு 216 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால் ஏற்பட்ட விபத்துகளில் 6 போ் காயமடைந்தனா். பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்ததால், 50,000-க்கும் மேற்பட்ட கட்டடங்களில் மின் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒகினாவாவுக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இப்புயல் ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கள்கிழமை அதிகாலைக்குள் சீனாவின் கிழக்குக் கரையைக் கடக்கும் என…
-
இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!
தமிழர்களின் தொன்மைமிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் நோக்குடன், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’ இடைநிறுத்தப்பட்டுள்ளது. பிரமாண்டமானமுறையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த உணவுத் திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நாளையும், நாளை மறுதினமும் நடைபெற இருந்த நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது. “உணவே மருந்து – மருந்தே உணவு” என்ற ஆரோக்கிய தத்துவத்தின்படி, 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளுடன் இந்த மாபெரும் திருவிழா அண்மையில் கோலாகலமாகத்…
-
11 கோடி ரூபாயை குப்பையில் வீசிய பெண்
உலகமெங்கும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு லாட்டரி சீட் வாங்கும் பழக்கம் இருக்கிறது. ஏனெனில் அதிர்ஷ்டம் நமக்கு அடித்து நாம் லட்சாதிபதியாகவோ, கோடீஸ்வரனாகவோ மாறிவிடமாட்டோமோ என்கிற ஆசையும் எதிர்பார்ப்புமே இதற்கு காரணம். இந்நிலையில்தான், தெற்கு இத்தாலியில் 11 கோடி விழுந்த லாட்டரி சீட்டை ஒரு பெண் தெரியாமல் குப்பையில் விசிய சம்பவம் நடந்திருக்கிறது. சமீபத்தில் ஒரு பெண் லாட்டரி சீட்டை வாங்கியிருக்கிறார். அதன்பின் தெரியாமல் அந்த லாட்டர் சீட்டை குப்பையில் போட்டுவிட்டார். தினமும் வீட்டின் முன்பு குப்பை எடுத்து…
-
ஆர்க்டிக் பகுதியில் சீனாவுக்கு எதிராக கனடா, அமெரிக்கா கண்காணிப்பு தீவிரமாக்கம்
அலாஸ்கா அருகே உள்ள ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் சீன ஆராய்ச்சி பனிமுறிப்புக் கப்பல்களான ‘ஸ்னோ டிராகன்’ (Xue Long) மற்றும் ‘ஸ்னோ டிராகன் 2’ (Xue Long 2) ஆகிய இரண்டு கப்பல்களும் பயணித்து வரும் நிலையில், கனடா மற்றும் அமெரிக்கப் படைகள் அவற்றைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. கனடா ராணுவத்தின் CP-140 கண்காணிப்பு விமானம், கனடா கடற்படைக் கப்பல்கள் (HMCS Ottawa, HMCS Max Bernays, HMCS Robert Hampton Gray), கடலோரக் காவல்படை…
-
கோல்டு வாங்குறதா? டீ குடிக்கிறதா? துபாயில் இரண்டுமே ஒரே கப்பில்… விலை மட்டும் இம்புட்டா!
துபாயில் உள்ள ஒரு ஆடம்பர உணவகம், ரூ.1 லட்சம் விலையுள்ள பிரீமியம் பானத்தை அறிமுகப்படுத்தி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கோல்டு காரக் டீ’ (Gold Karak Tea) என்று அழைக்கப்படும் இந்த ஆடம்பர பானம், உணவில் பயன்படுத்தக்கூடிய 24-காரட் தங்கத்தைக் கொண்டும், உண்மையான வெள்ளி கோப்பையில் வைத்தும் வழங்கப்படுகிறது. இது ஒரு சாதாரண தேநீரை அதிநவீன ஆடம்பர அனுபவமாகக் கணநேரத்தில் மாற்றுகிறது. இந்த ‘கோல்டு காரக் டீ’ இவ்வளவு விலை உயர்ந்ததாக இருப்பது ஏன்? ஒரு சாதாரண…
-
கொண்டைக்கடலைக்கு தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லி வாயுவை சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழப்பு
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், பூச்சி கொல்லி தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவைச் சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. விவசாயியான மல்லேஷ், அறுவடை செய்து வீட்டிற்குள் வைத்திருந்த கொண்டைக்கடலையில் பூச்சிகள் வராமல் இருப்பதற்காகப் பகல் நேரத்தில் பூச்சி கொல்லி தெளித்துள்ளார். அன்று இரவு, வீட்டின் அறைக்குள் காற்று புக முடியாத சூழலில் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது, கொண்டைக்கடலையில் தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லியிலிருந்து நச்சு வாயு மெதுவாக வெளியேறியுள்ளது. அறையிலிருந்த நச்சு வாயுவை…
-
பாகிஸ்தானில் கடுமையாக உயரும் பொருட்கள் விலை: அரசாங்கத்துக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் மீதான கூடுதல் வரி மற்றும் பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக பாகிஸ்தான் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் முன்னணி கட்சியான ஜமாஅத்-ஏ-இஸ்லாமி (Jamaat-e-Islami) விடுத்த அழைப்பையேற்று கராச்சி, லாகூர், பெஷாவர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாரிய பேரணிகளும் வீதி மறியல்களும் முன்னெடுக்கப்பட்டன. இதனால் நாட்டின் பிரதான வீதிகளின் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டது. அமெரிக்க-ஈரான் போர் மற்றும் சர்வதேச சந்தை சீர்குலைவு காரணமாக பாகிஸ்தானில்…