Author: Six Side Media
-
கியூபெக் முதல்வர் அமெரிக்க ஒயின்களை மீண்டும் விற்க நிபந்தனையுடன் சம்மதம்
கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette), அமெரிக்க ஒயின்களை மாகாண மதுபானக் கடைகளின் அலமாரிகளுக்கு மீண்டும் கொண்டு வரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அது “எந்த விலையிலும் சாத்தியமில்லை” எனத் தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்க ஒயின்கள் மீதான தடையை நீக்க வேண்டுமானால், வர்த்தக ரீதியில் கியூபெக் பல நன்மைகளைப் பெற வேண்டும் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக வனத்துறை (forestry), அலுமினியம் (aluminum) மற்றும் உற்பத்தித் துறைகள் (manufacturing) மீதான அமெரிக்க வரிக் தடைகளை…
-
மேற்கு கொலம்பியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 73 பேர் பலி
ஆகஸ்ட் 10, 2026 அன்று மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 73 பேர் உயிரிழந்துள்ளனர். சொகோ (Chocó) பிராந்தியத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் (San José del Palmar) பகுதிக்கு அருகே 107 கி.மீ (66 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிசாரால்டா (Risaralda) பிராந்தியத்தில் 40 பேரும், வாலே டெல் காவ்கா (Valle del Cauca) பிராந்தியத்தில் 27 பேரும், சொகோவில் 4 பேரும்,…
-
“ஈரானுடனான பேச்சுவார்த்தை சதுரங்கம் போன்றது” – டொனால்ட் ட்ரம்ப்
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் சதுரங்கம் விளையாடுவதை போன்றதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆக்சியோஸ் (Axios) உடனான ஒரு நேர்காணலில், ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதே தமது நோக்கமென அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானிய துறைமுகங்களைத் தடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க கடற்படை நடவடிக்கையால் ஈரானில் நிலைமை மோசமடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஈரானிய ரியால் நாணய அலகின் மதிப்பு மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ட்ரம்ப் வௌியிட்டுள்ள ட்ரூத் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-
50 ஆண்டுகளுக்குப் பின் ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ மீண்டும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் அடுத்த மாநாடு வருகின்ற ஆண்டு இலங்கையில் -யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளர் ( ஐக்கிய அமெரிக்கா ) இந்த அறிவிப்பை விடுத்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும்,யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், தமிழி அமைப்பும் இணைந்து இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நடாத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கத்தில் கலந்து கொண்டு தொடக்கவுரை ஆற்றுகையிலேயே இந்த அறிவிப்பை அவர் விடுத்தார். முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு 1966ஆம் ஆண்டு கோலாலம்பூர்,…
-
செம்மணி புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட குழிக்குள் தலையில்லா முண்டமாக என்புக்கூடு
செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிகளுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் திங்கட்கிழமை (10) முன்னெடுப்பட்டன. முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 524 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 513 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட…
-
மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்ட பாதாள உலக குற்றவாளி உட்பட மூவர் இலங்கை அழைத்து வரப்பட்டனர்!
மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட சர்வதேச பொலிஸின் ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Notice) விடுக்கப்பட்டிருந்த பிரதான பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் உட்பட மேலும் இரு சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (10) மாலை விமான மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பொலிஸ் குழுவினர், மலேசிய பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸ் அமைப்பின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பிரதான…
-
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட அனர்த்தங்களில் 12 பேர் உயிரிழப்பு
தென்மேற்கு பருவக்காற்று , ‘குஜிரா’ மற்றும் ‘டொல்பின்’ ஆகிய சூறாவளிகளின் தாக்கம் காரணமாக பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிமைப் பாதுகாப்பு அலுவலகத்தின் உதவிச் செயலாளர் லாரன்ஸ் மீனா, இச்சம்பவங்களில் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் ஒன்பது பிராந்தியங்கள் மற்றும் 33 மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 586,000 பேர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சில பிராந்தியங்களை சேர்ந்த 4,866 பேர்…
-
கொலம்பியாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல நகரங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதுடன் 107 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போகோட்டாவிலிருந்து சுமார் 280 கிலோமீட்டர் மேற்கே, சொக்கோ திணைக்களத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மாரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள் குறித்து இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை.
-
காணி விடுவிப்பு தொடர்பில் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத NPP அரசு : எழுந்துள்ள குற்றச்சாட்டு
காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு வருடத்திற்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கமும் ஜனாதிபதியும் உறுதியளித்திருந்த போதிலும், இரண்டு ஆண்டுகள் கடந்தும் தேர்தல் நடத்தப்படவில்லை. அடுத்த ஆண்டிலாவது…
-
அலாஸ்காவில் ஆபத்து உதவி அழைப்பிற்கு மார்க் ஜுக்கர்பெர்க்கின் படகு பதிலளிக்காததால் சர்ச்சை
மெட்டா (Meta) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குச் சொந்தமான படகு, அலாஸ்கா கடலோரப் பகுதியில் ஆபத்திலிருந்த மற்றொரு படகின் உதவி அழைப்பிற்குப் பதிலளிக்காதது குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன. ஆகஸ்ட் 3 அன்று அலாஸ்காவின் தென்கிழக்குக் கடற்பகுதியில் எரிபொருள் தீர்ந்துபோன ஒரு சிறிய படகு, உதவி கோரி அமெரிக்கக் கடலோரக் காவல் படை (U.S. Coast Guard) மூலம் ரேடியோ வழியில் அவசர உதவி அழைப்பு விடுத்தது. அருகில் இருந்த ‘லாஞ்ச்பேட்’ (Launchpad) என்ற மார்க்…