Author: Six Side Media
-
சிரிய முன்னாள் சர்வாதிகாரி பஷார் அல்-அசாத்திற்கு மரண தண்டனை
சிரிய உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பதவியிழந்த சிரிய சர்வாதிகாரி பஷார் அல்-அசாத்திற்கு (Bashar al-Assad) அந்நாட்டு நீதிமன்றம் இல்லாத நிலையில் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. டிசம்பர் 2024-இல் ஆட்சி கவிழ்ந்த பிறகு, டமாஸ்கஸிலிருந்து மாஸ்கோவிற்குத் தப்பிச் சென்ற அசாத்திற்கு எதிராக வழங்கப்பட்டுள்ள முதல் தண்டனைத் தீர்ப்பு இதுவாகும். இதன் மூலம் அவரது குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி அதிகாரப் பிடி முடிவுக்கு வந்தது. தெற்கு…
-
டிரம்பின் ரகசிய விமான மாற்றமும் ஈரானின் அச்சுறுத்தலும்
ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துருக்கியில் உள்ள நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் பங்கேற்றுத் திரும்பும்போது, உணவு விநியோக லாரி (Catering Truck) மூலம் ரகசியமாக விமானத்தை மாற்றியதாக அமெரிக்க ஊடகங்களை மேற்கோள் காட்டி BBC செய்தி வெளியிட்டுள்ளது. துருக்கியின் அங்காரா விமான நிலையத்தில் டிரம்ப் கேமராக்களுக்கு முன்னால் வழக்கமான ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) Boeing 747 விமானத்தில் ஏறினார். ஆனால், உள்ளே சென்றதும், தொலைக்காட்சி கேமராக்கள் பார்க்க…
-
மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ரவிகரன் எம்.பி முன்வைத்துள்ள கோரிக்கை!
முல்லைத்தீவில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளிமாவட்ட மீனவர்கள் ஊடாகவே முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் ஊடுருவல்கள் இடம்பெறுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வெளிமாவட்ட மீனவர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளர் நாயகம் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பான புகைப்பட ஆதாரங்களை கடற்றொழில்…
-
“ரத்மலான சைமா” 48 மணிநேரம் தடுப்புக் காவலில் விசாரணை
கஞ்சிப்பான இம்ரானின் நண்பரும் திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் “ரத்மலான சைமா” உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களில் ஒருவரை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய கண்டி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மலேசியாவில் கைது செய்யப்பட்ட குறித்த மூன்று சந்தேகநபர்களும் நேற்று மாலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்களில் ஒருவரை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
டாபியின் நினைவிடம் அருகே மின்சார கேபிள் பாதை மாற்றம்
பிரிட்டன் மற்றும் அயர்லாந்தை இணைக்கும் £430 மில்லியன் (சுமார் $CAD 809 மில்லியன்) மதிப்பிலான ‘கிரீன்லிங்க்’ (Greenlink) நிலத்தடி மின்சார கேபிள் திட்டத்தின் பாதை, ‘ஹாரி பாட்டர்’ ரசிகர்களின் எதிர்ப்பை அடுத்து மாற்றப்பட்டுள்ளது. இந்த மின்சார கேபிள், ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் திரைப்படம் படமாக்கப்பட்ட வேல்ஸில் உள்ள ப்ரெஷ்வாட்டர் வெஸ்ட் (Freshwater West) கடற்கரையில் அமைந்துள்ள ‘டாபி’ (Dobby) என்ற கற்பனை கதாபாத்திரத்தின் நினைவிடத்தின் வழியே செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. 2019-இல் இத்திட்டம் குறித்து…
-
தலைப்பாகை அணிந்த மெக்சிகன் இளைஞர்: அமெரிக்காவை ஆச்சரியப்படுத்தும் பஞ்சாபி – ஸ்பானிஷ் இசைப் புரட்சி
கலிபோர்னியாவில் வாழும் மெக்சிகன் வம்சாவளி பாடகர் தாலிபெலிகோ (Talibelico) மற்றும் பஞ்சாபி லாரி ஓட்டுநரான ஹர்வீர் சிங் இணைந்து, பஞ்சாபி மற்றும் ஸ்பானிஷ் இசையைக் கலந்து புதிய இசை வடிவத்தை உருவாக்கி வருகின்றனர். கலிபோர்னியாவின் மோடெஸ்டோ நகரில், 28 வயதான தாலிபெலிகோ தலைப்பாகை, கேஷுவல் ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து வெளியே வரும்போது, அவர் குர்த்வாராவிற்குச் செல்கிறார் என்றே வழியில் காண்பவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இந்த பாடகர் வழக்கமாக லோஸ் ஏஞ்சலஸில் நடைபெறும் இசை நிகழ்ச்சிக்குச் சென்று…
-
10 நோயாளிகளைக் கொன்ற செவிலியர்: நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கலாம் என அச்சம்
ஜேர்மனியில் செவிலியர் ஒருவர் 10 நோயாளிகளைக் கொன்றதாக சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கலாம் என அச்சம் உருவாகியுள்ளது. செவிலியர் ஒருவர் ஒருவர் 10 நோயாளிகளைக் கொன்றதாக கடந்த நவம்பர் மாதம் சிறையிலடைக்கப்பட்டார். இந்நிலையில், சுமார் 139 நோயாளிகள் வழக்குகளுடன் அந்த செவிலியருக்கு தொடர்பிருக்கலாம் என அச்சம் உருவாகியுள்ளது. தனக்கு வேலைப்பளு அதிகமாக இருந்ததால், தன் கண்காணிப்பின் கீழிருக்கும், மிகவும் வயதான நோயாளிகளைக் கொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார் செவிலியர் ஒருவர். Aachen நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில்…
-
சித்தி எய்தாத தமக்கு பட்டம் ஏன் வழங்கப்பட்டது என கோரி பல்கலைக்கழக மாணவன் வழக்கு
பரீட்சையில் சித்தி எய்தாத தமக்கு உயர் டிப்ளோமா பட்டம் எவ்வாறு வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பி கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீதிமன்றில் நட்டஈடு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் பீடாதிபதி உள்ளிட்ட குழுவினரிடமிருந்து 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு பெற்றுத் தருமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சஹான் குமார் அத்துகோரல என்ற மாணவன் நுகேகொடை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர்…
-
காத்திருக்கவைக்கும் பிரித்தானிய மருத்துவமனைகள்:
துபாயில் வாழும் பெண்ணொருவர், பிரித்தானிய மருத்துவமனைகளுக்கும் துபாய் மருத்துவமனைகளுக்கும் உள்ள வித்தியாசம் குறித்த ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார். மிருதுளா சிவகுமார் துபாயில் வாழ்ந்துவரும் இந்திய இளம்பெண். சமீபத்தில் தன் காலில் அடிபட்டதால் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் அவர். அங்கு தான் சந்தித்த அனுபவம், முன்னொருமுறை பிரித்தானியாவில் சந்தித்த ஒரு அனுபவத்தை நினைவுக்குக் கொண்டுவந்ததாக தெரிவிக்கிறார் மிருதுளா. காலில் அடிபட்டதால் துபாயிலுள்ள மருத்துவமனைக்குச் சென்ற மிருதுளா, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது, காலில் கட்டுப்போடுவது, மருந்துகள் வாங்குவது வரை, அனைத்துமே ஒரே…
-
ஆவிகளுடன் பேசுபவர் எனக்கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த இந்தியர்
கனடாவில் ஆவிகளுடன் பேசுபவர் எனக்கூறி மோசடி செய்த இந்தியரை பொலிசார் தேடிவருகிறார்கள். கனடாவில், ஆவிகளுடன் பேசுபவர் எனக்கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த இந்தியர் இந்தியாவுக்கு தப்பிவிட்டதாக கருதப்படுகிறது. கனடாவின் ரொரன்றோவில், ஆவிகளுடன் பேசுபவர், ஜோதிடர், அசாதாரண முறையில் நோய்களை குணமாக்குபவர் என்று கூறி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார் கங்காதர் பாபு (29) என்னும் இந்தியர். இந்த கங்காதர், 2024 ஏப்ரலுக்கும் 2025 செப்டம்பருக்கும் இடையே, ஒரு குறிப்பிட்ட நபருக்கு மரண கண்டம் இருப்பதாகக் கூறி, தான் அவருக்கு ஆவிகள்…