Author: Six Side Media

  • ஐரோப்பாவில் வறட்சி அதிகரிப்பு

    ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள கடும் வெப்ப அலை மற்றும் தீவிர வறட்சி காரணமாக டெனுப் (Danube) நதியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், இரண்டாம் உலகப் போரின் போது மூழ்கடிக்கப்பட்ட நாஜி ஜெர்மனியின் போர்க்கப்பல்கள் மீண்டும் வெளியே தெரியத் தொடங்கியுள்ளதாக CBC News செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 1944-இல் சோவியத் படைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக, செர்பியாவின் பிராஹோவோ (Prahovo) நகருக்கு அருகே நாஜிக்கள் சுமார் 200 போர்க்கப்பல்களை டெனுப் நதியில் மூழ்கடித்தனர். வழக்கமாக கோடைகாலத்தில் ஒன்று அல்லது இரண்டு கப்பல்களின்…

  • பள்ளியின் முதல் நாளில் அம்மாவுக்குப் படம் எடுக்க மறுத்த 5 ஆம் வகுப்பு மாணவர் விளையாட்டாக ‘கைது’: கொலராடோவில் சுவாரசிய சம்பவம்

    அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள கீன்ஸ்பர்க் (Keenesburg) பகுதியில், 5-ஆம் வகுப்பு சேரும் தனது மகன் கோல்டன் ஸ்டோல்ட்ஸ் (Colton Stolz), பள்ளிக்குச் செல்லும் முதல் நாளில் புகைப்படம் எடுக்க மறுத்து அடம்பிடித்ததால், அவரது தாய் காவல்துறையின் உதவியுடன் அவரை விளையாட்டாக ‘கைது’ செய்ய வைத்த சம்பவம் நெகிழ்ச்சியையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் செல்லும் வழியில், தாய் அமண்டா ஸ்டோல்ட்ஸ் (Amanda Stolz) தனது மகனைப் படம் எடுக்க விரும்பினார். ஆனால் கோல்டன் அதற்குச்…

  • 40 ஆண்டுகளா தீர்க்கப்படாத இளம் தாயின் கொலை வழக்கு: ஒப்புக்கொண்ட நபரால் திடுக்கிடும் திருப்பம்

    1987-ஆம் ஆண்டு புளோரிடாவில் நடந்த 20 வயது இளம் தாயான மெலிசா “மிஸ்ஸி” டெய்லர் எலிசன் (Melissa “Missy” Taylor Ellison) என்பவரின் கொலை வழக்கு, சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கொலையாளியின் ஒப்புதல் வாக்குமூலத்தால் தீர்க்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28, 1987 அன்று, மெலிசா தனது வீட்டில் படுக்கையறையில் பலத்த காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அப்போது அவரது 13 மாத பெண் குழந்தை கேசி (Casie) எதுவும் அறியாமல் பக்கத்து அறையில் அழுதுகொண்டிருந்தது.பல ஆண்டுகளாகக் காவல்துறையினரால் கொலையாளியைக்…

  • கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் காட்டுத்தீ

    காட்டுத்தீ அச்சுறுத்தல் காரணமாக 21,400-க்கும் மேற்பட்ட மக்களுக்கு உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது மேலும் 11,000 பேர் வெளியேற்ற எச்சரிக்கை அறிவிப்பின் கீழ்  வைக்கப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்களுக்காகப் மாகாண அரசு சுமார் 1,000 ஹோட்டல் அறைகளைப் பாதுகாப்பாக ஒதுக்கியுள்ளது. சம்மர்லேண்ட் (Summerland) அருகே தீவிரமடைந்து வரும் ‘பால்ட் ரேஞ்ச்’ (Bald Range) காட்டுத்தீயிலிருந்து குடும்பத்துடன் தப்பிக்க முயன்ற 80 வயதுப் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த மெக்சிகோவிலிருந்து 100 தீயணைப்பு வீரர்கள் செவ்வாய்க்கிழமை வந்து சேர்ந்துள்ளனர். மேலும் கனடிய…

  • ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்த வடகொரிய ஏவுகணைகளைப் பயன்படுத்துகிறது – ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

    உக்ரைன் மீது நடத்தப்பட்ட இரவு நேரத் தாக்குதல்களில் ரஷ்யா வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் (Ballistic Missiles) பயன்படுத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சாடியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. உக்ரைனின் ஜபோரிஜியா (Zaporizhzhia) நகரின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் வழிகாட்டப்பட்ட குண்டு வீச்சுத் தாக்குதல்களில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்; 19 பேர் காயமடைந்தனர். இதில் வடகொரிய ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.  வரலாற்றிலேயே “முதல்முறையாக” வடகொரியாவின் ராணுவ உதவி இல்லாமல் ரஷ்யாவால் போரைத் தொடர…

  • பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட 2 சிறுமிகள்: தந்தை எடுத்த விபரீத முடிவு

    பெங்களூருவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 2 குழந்தைகளை கொன்று விட்டு தந்தை தானும் உயிரை  மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் அறையில் இரண்டு சிறுமிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதே அறையில் அந்த குழந்தைகளின் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொலை மற்றும் தன் உயிரை தானே மாய்த்துக் கொள்ளும் முயற்சியாக இருக்கலாம் என்று காவல்துறையினர்…

  • படுகொலையின் பிரதான சூத்திரதாரி செவ்வந்தியா..! சட்ட ரீதியாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

    பாதாள உலக குழுவின் தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சந்தேக நபராக இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த பெண் உண்மையில் தேடும் செவ்வந்தியா என்பது தொடர்பில் சந்தேகம் நீடித்து வரும் நிலையில், முகத்தை அடையாளம் காணும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறான நிலையில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் மூலம் செவ்வந்தியை அடையாளம் காண பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு குற்றப்பிரிவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த வழக்கு…

  • கெபெக் நகரம் (Quebec City) 2026-ஆம் ஆண்டின் கனடாவின் சிறந்த நகரமாகத் தேர்வு

    Travel + Leisure இதழின் 2026-ஆம் ஆண்டிற்கான ‘உலகின் சிறந்த விருதுகள்’ (World’s Best Awards) வாக்கெடுப்பில், கனடாவின் தலைநகரான ஒட்டாவா மற்றும் முக்கிய நகரமான வான்கூவரைப் பின்னுக்குத் தள்ளி, செயிண்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள கெபெக் நகரம் (Quebec City) கனடாவின் சிறந்த நகரமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  2,07,000-க்கும் மேற்பட்ட வாசகர்கள் அளித்த 6,61,000 வாக்குகள் அடிப்படையில், கெபெக் நகரம் 86.99 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐரோப்பிய பாணி பழமை மாறாத கட்டடங்கள், புகழ்பெற்ற…

  • தன்னை ஆதரித்த மனிதரின் கடைசி ஊர்வலத்தில் கலந்து கொண்ட யானைகள்.

    தென்னாப்பிரிக்காவில் “துலா துலா” (Thula Thula) சரணாலயத்தின் பெயர் கேட்டவுடன், நம் நினைவுக்கு வருவது வெறும் அடர்ந்த காடு மட்டுமல்ல. அந்தக் காட்டில் ஆட்சி செய்த, ஆனால் மனிதர்களின் செயல்களால் உயிரையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட காட்டு யானைக் கூட்டமும்தான். அந்த யானைக் கூட்டம் எந்த அளவுக்கு முரட்டுத்தனமாக இருந்தது என்றால், மனிதர்களைக் கண்டவுடன் தாக்குவது, வேலிகளை உடைத்துக்கொண்டு கிராமங்களுக்குள் நுழைவது என மிகவும் ஆபத்தானதாக இருந்தது. அதிகாரிகளாலும் அந்த யானைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டபோது,…

  • கனடா விமானப்படை அதிகாரிக்கு வழங்கிய விருதினால் விவாதங்கள் கிளம்பியுள்ளன.

    கனடாவின் அரச விமானப் படையைச் (Royal Canadian Air Force) சேர்ந்த உயர் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க ராணுவ விருது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளில் கனடாவின் பங்களிப்பு குறித்துக் கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது.  முன்னாள் CF-18 போர் விமானப் படைப் பிரிவைச் சேர்ந்த கர்னல் டேவிட் கே. டூரேன் (Col. David K. Turenne) என்பவருக்குக் கனடா அரசாங்கத்தின் உயரிய ‘மெரிட்டோரியஸ் சர்வீஸ் க்ராஸ்’ (Meritorious Service Cross) விருது வழங்க ஒப்புதல்…