Author: Six Side Media

  • நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பிரித்தானியப் போர்க்கப்பலின் சிதைவுகள்!

    கடந்த 1908-ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய அரச கடற்படைக்குச் சொந்தமான ‘ஹெச்.எம்.எஸ் டைகர்’ (HMS Tiger) என்ற போர்க்கப்பலின் சிதைந்த பகுதிகளை சுழியோடிகள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். 1908-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடற்படைப் பயிற்சியின் போது, மற்றொரு போர்க்கப்பல் மீது தற்செயலாக மோதியதில் ‘ஹெச்.எம்.எஸ் டைகர்’ இரண்டாகப் பிளந்து கடலில் மூழ்கியது. இந்தச் சம்பவத்தில் கப்பலில் இருந்த 57 பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தநிலையில், ‘புரோஜெக்ட் எக்ஸ்ப்ளோர்’ என்ற ஆய்வுக் குழுவைச் சேர்ந்த லியோ ஃபீல்டிங்…

  • நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

    நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். தனது சொத்துக்கள் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணையின் அடிப்படையில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

  • ஒரே நாளில் 400 திருமணங்கள்: ஆகஸ்ட் 23 இல் குருவாயூரில் அமையவிருக்கும் மெகா திருமணத் திருவிழா!

    கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், எதிர்வரும் 23 ஆம் திகதி ஒரே நாளில் 377 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அன்றைய தினம் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை 400-ஐத் தாண்டி புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 23 ஆம் திகதி மிகவும் சுபயோக நாளாகக் கருதப்படுவதால், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான தம்பதிகள் இங்கு திருமணம் செய்ய…

  • பயணியின் பையில் குரங்கு மண்டை ஓடு: டெல்லி வானூர்தி நிலையத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை!

    டெல்லி இந்திரா காந்தி சர்வதேச வானூர்தி நிலையத்தில், ஹைதராபாத் செல்லவிருந்த பயணி ஒருவரின் பையிலிருந்து குரங்கின் மண்டை ஓடு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லி வானூர்தி நிலையத்தில் பயணியின் பையில் குரங்கு மண்டை ஓடு கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அத்துடன், பறிமுதல் செய்யப்பட்ட மண்டை ஓடு பரிசோதனைக்காகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.…

  • ஜப்பானில் 21 வயது இலங்கை இளைஞர் உயிரிழப்பு

    ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் கல்வி பயின்று வந்த 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர், கூர்மையான ஆயுதத்தால் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், அவருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த 18 வயதுடைய இலங்கை இளைஞரை அந்த நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 18 வயது இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, தானும் தனது தாயாரும்…

  • ஈழமுரசின் இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 13, 2026 வியாழன்

    பஞ்சாங்கம் நாள் வியாழக்கிழமை திதி பிரதமை இரவு 10.38 வரை பிறகு துவிதியை நட்சத்திரம் ஆயில்யம் காலை 8.06 வரை பிறகு மகம் யோகம் சித்தயோகம் காலை 8.06 வரை பிறகு அமிர்தயோகம் ராகுகாலம் பகல் 1.30 முதல் 3 வரை எமகண்டம் காலை 6 முதல் 7.30 வரை நல்லநேரம் பகல் 10.45 முதல் 11.45 வரை சந்திராஷ்டமம் பூராடம் காலை 8.06 வரை பிறகு உத்திராடம் சூலம் மேற்கு பரிகாரம் தைலம் மேஷராசி அன்பர்களே!…

  • நிலவில் நிரந்தர மையம்: இஸ்ரோவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்புவிடுத்த நாசா!

    நிலவில் மனிதர்களைத் தரையிறக்கி, அங்கு நிரந்தர குடியிருப்பு அமைக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் ‘மூன் பேஸ்’ (Moon Base) திட்டத்தில் இணையுமாறு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு (ISRO) அமெரிக்காவின் நாசா (NASA) அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இந்தியா – அமெரிக்க சிவில் ஸ்பேஸ் கூட்டுக் பணிக்குழுவின் 9 ஆவது கூட்டத்தில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆர்டெமிஸ்…

  • விஜய் மல்லையா வழக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் கடன் நிலுவைத் தொகையை வசூலிப்பது தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவுகட்டப்பட வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சமரசப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டதா என்பது குறித்து அமுலாக்கத்துறை தெளிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதேவேளையில் இது மல்லையா மீதான குற்றவியல் வழக்கைப் பாதிக்காமல் முறைப்படி முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஐ.டி.பி.ஐ வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் பெற்ற கடன்களைத் திருப்பிச்…

  • இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர் பதவியேற்பு!

    இலங்கைக்கான அடுத்த அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார். வோஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இப்பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

  • பாலியல் லஞ்சப் புகாரால் கொந்தளிக்கும் தென் கொரிய கால்பந்து சம்மேளனம்: KFA பகிரங்க மன்னிப்பு

    தென் கொரிய கால்பந்து சம்மேளனம் (KFA) வெளிநாட்டு நடுவர்களுக்குப் பாலியல் லஞ்சம் (Sexual favours) கொடுத்ததாக எழுந்த புகார்கள் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்குப் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. 2016-ஆம் ஆண்டு கலாச்சார, விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தால் தொகுக்கப்பட்ட அறிக்கை ஒன்று JTBC ஊடகம் மூலம் வெளியானது. 2010-களின் தொடக்கத்தில், 2014 உலகக்கோப்பை மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக் தகுதிப்போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு நடுவர்களுக்கு மசாஜ் நிலையங்களில் பாலியல் உபசரிப்பு அளிக்க KFA கடன் அட்டைகளைப் பயன்படுத்தி…