Author: Six Side Media
-
சீசனிங் பவுடரில் போதைப்பொருள்..! 2 நாடுகள் அதிரடி நடவடிக்கை..
அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிறுவனமான டிரேடர் ஜோஸின் “எவரிதிங் பட் தி பாகல்” என்ற சீசனிங் பவுடருக்கு சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தச் சீசனிங் பவுடரில் சேர்க்கப்பட்டுள்ள பாப்பி விதைகளில் போதைப்பொருளான மார்பின் மற்றும் கோடீன் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பொப்பி விதைகள் இயற்கையிலேயே போதைத்தன்மை கொண்டவை அல்ல என்றாலும், அறுவடைக் காலங்களில் தாவரத்தின் பாலுடன் தொடர்பு ஏற்படுவதால் போதைப்பொருள்களின் வீரியம் அதில் கலக்க வாய்ப்புள்ளது. போதைப்பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ்,…
-
நாட்டில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு : முதலிடத்தில் எந்த மாவட்டம்
இலங்கையில் ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோடு 17,592 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு 277 ரூபாயால் அதிகரித்துள்ளது. ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மாதமொன்றுக்கு தேவையான குறைந்தபட்ச தொகையே உத்தியோகபூர்வ வறுமைக் கோடாக அடையாளப்படுத்தப்படுகிறது. அதன்படி, ஜூன் மாதத்தில் கொழும்பு மாவட்டத்தின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு 18,973 ரூபாயாகவும், கம்பஹா மாவட்டத்தில் 18,876 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. அதேவேளை, குறைந்தபட்ச…
-
செம்மணி மனிதப் புதைகுழியில் புதிய குழிகளைத் தோண்டுவது குறித்து இன்று தீர்மானம்!
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் புதிதாக எந்தப் பகுதியில் குழிகளைத் தோண்ட வேண்டும் என்பது குறித்து இன்று (13) தீர்மானிக்கப்படவுள்ளதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், மீட்கப்பட்ட எலும்புக் குவியல்கள் தொடர்பில் சட்டமருத்துவ அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது புதிதாக 5 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டதுடன்,…
-
“நாட்டின் மிகப்பெரிய தந்தமுடைய யானையை காணவில்லை: யானைகள் அழிந்தால் சுற்றாடல் சமநிலை சீர்குலையும்”
இலங்கையில் யானைகளின் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அவற்றைப் பாதுகாப்பதற்கான உரிய வேலைத்திட்டங்கள் எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைப்பின் செயலாளரும் சூழலியலாளருமான நயனக ரன்வெல்ல கவலை வெளியிட்டுள்ளார். இலங்கையின் மிகப்பெரிய தந்தத்தைக் கொண்ட ‘மஹசென்’ மற்றும் மிகப்பெரிய நெற்றிப் பகுதியை கொண்ட ‘செண்டோ’ உள்ளிட்ட பல முக்கிய யானைகள் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய தரவுகளின்படி, நாட்டில் ஆண்டுக்கு சுமார் 450 யானைகள் உயிரிழப்பதாகப் பதிவாகியுள்ளதுடன், பதிவாகாமல் காடுகளுக்குள் மேலும்…
-
அமெரிக்க சிறைச்சாலையில் மின்னல் தாக்கி 16 கைதிகள் காயம்!
அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் நிலவும் கடும் சீரற்ற வானிலைக்கு மத்தியில், அங்குள்ள சிறைச்சாலை ஒன்றில் மின்னல் தாக்கியதில் 16 கைதிகள் காயமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு உணவுக்குப் பிறகு சிறை வளாகத்தில் உள்ள கட்டடங்களுக்கு இடையே கைதிகள் சென்று கொண்டிருந்தபோதே அனர்த்தம் நேர்ந்துள்ளது. காயமடைந்தவர்களில் ஒருவர் உடனடியாக உலங்குவானூர்தி மூலம் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பெற்ற 9 கைதிகள் மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ள நிலையில் பலத்த காயமடைந்த ஒருவர் உட்பட 7 பேர் தொடர்ந்து…
-
நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பிரித்தானியப் போர்க்கப்பலின் சிதைவுகள்!
கடந்த 1908-ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய அரச கடற்படைக்குச் சொந்தமான ‘ஹெச்.எம்.எஸ் டைகர்’ (HMS Tiger) என்ற போர்க்கப்பலின் சிதைந்த பகுதிகளை சுழியோடிகள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். 1908-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடற்படைப் பயிற்சியின் போது, மற்றொரு போர்க்கப்பல் மீது தற்செயலாக மோதியதில் ‘ஹெச்.எம்.எஸ் டைகர்’ இரண்டாகப் பிளந்து கடலில் மூழ்கியது. இந்தச் சம்பவத்தில் கப்பலில் இருந்த 57 பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தநிலையில், ‘புரோஜெக்ட் எக்ஸ்ப்ளோர்’ என்ற ஆய்வுக் குழுவைச் சேர்ந்த லியோ ஃபீல்டிங்…
-
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். தனது சொத்துக்கள் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணையின் அடிப்படையில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
ஒரே நாளில் 400 திருமணங்கள்: ஆகஸ்ட் 23 இல் குருவாயூரில் அமையவிருக்கும் மெகா திருமணத் திருவிழா!
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், எதிர்வரும் 23 ஆம் திகதி ஒரே நாளில் 377 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அன்றைய தினம் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை 400-ஐத் தாண்டி புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 23 ஆம் திகதி மிகவும் சுபயோக நாளாகக் கருதப்படுவதால், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான தம்பதிகள் இங்கு திருமணம் செய்ய…
-
பயணியின் பையில் குரங்கு மண்டை ஓடு: டெல்லி வானூர்தி நிலையத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை!
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச வானூர்தி நிலையத்தில், ஹைதராபாத் செல்லவிருந்த பயணி ஒருவரின் பையிலிருந்து குரங்கின் மண்டை ஓடு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லி வானூர்தி நிலையத்தில் பயணியின் பையில் குரங்கு மண்டை ஓடு கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அத்துடன், பறிமுதல் செய்யப்பட்ட மண்டை ஓடு பரிசோதனைக்காகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.…
-
ஜப்பானில் 21 வயது இலங்கை இளைஞர் உயிரிழப்பு
ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் கல்வி பயின்று வந்த 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர், கூர்மையான ஆயுதத்தால் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், அவருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த 18 வயதுடைய இலங்கை இளைஞரை அந்த நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 18 வயது இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, தானும் தனது தாயாரும்…