Author: Six Side Media

  • ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் பிரதமர் இரகசிய பயணம்?

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) இரகசிய பயணம் மேற்கொண்டு அந்நாட்டு ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை அபுதாபியில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதை மூத்த இஸ்ரேலிய அதிகாரிகளும் ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. 2023 அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலுக்கு முன்பாக அமீரகத் தலைவர் தனக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெளியான செய்தி குறித்து விவாதிக்கவே அவர் இந்த திடீர் பயணத்தை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து…

  • உலக இதய தினம் இன்று

    செப்டம்பர் 29-ஆம் திகதியான இன்று, உலகம் முழுவதும் ‘உலக இதய தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இதய நோய்கள் (CVD) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனால் ஏற்படும் முன்கூட்டிய உயிரிழப்புகளைத் தடுக்கவும் உலக இதயக் கூட்டமைப்பு இந்த உலகளாவிய முன்னெடுப்பை மேற்கொண்டு வருகிறது. திடீரென ஏற்படும் இதய நோய்களால், எண்ணற்ற மக்கள் தங்களின் அன்பிற்குரியவர்களுடன் செலவிட வேண்டிய பொன்னான நேரத்தையும் வாழ்க்கையையும் இழந்து தவிக்கின்றனர். எனவே, இந்நாள் வெறும் ஒரு சுகாதார விழிப்புணர்வு நாள் மட்டுமல்ல; ஒவ்வொருவரும் தங்களின் மற்றும்…

  • நெதர்லாந்தில் கருணைக்கொலை செய்யப்பட்ட இரண்டு வயதுக் குழந்தை

    நெதர்லாந்து நாட்டில், இரண்டு வயதுக் குழந்தை ஒன்று கருணைக்கொலை செய்யப்பட்ட விடயம் பேசுபொருளாகியுள்ளது. குறைப் பிரசவத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு மூளையில் பயங்கர பாதிப்பு உள்ளதுடன், முகப்பக்கவாதம் மற்றும் கண் பார்வைக் கோளாறுடனும் அவதியுற்று வந்துள்ளது அந்தக் குழந்தை. அத்துடன், அதற்கு அவ்வப்போது வலிப்பு (epileptic seizures) நோயும் இருந்துள்ளது. ஆகவே, அந்தக் குழந்தை குறித்து பல்வேறு மருத்துவர்களின் கருத்தைக் கேட்டறிந்த அதன் மருத்துவர், அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்தாலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அறிந்துகொண்டதுடன்,…

  • ஹமாஸ் தலைவருக்கு தூக்கு தண்டனை? வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்

    இஸ்ரேலின் தலைநகரமான ஜெருசலேமில், பேருந்துகளைக் குறிவைத்து கடந்த 1996-ம் ஆண்டு பாலஸ்தீனம் நாட்டைச் சேர்ந்த ஆயுதக் குழுவான ஹமாஸ் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில், பொதுமக்கள் 45 பேர் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹசன் சலாமே (Hassan Salameh), கடந்த 1996ஆம் ஆண்டு ஜெருசலேமில் நடைபெற்ற பேருந்து குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பானவர் என இஸ்ரேல் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டார். இஸ்ரேலிய நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை…

  • பிரிட்டனுக்குக் குறி..? தாக்குதல் நடத்தத் திட்டம்..? விரிவடையும் ஈரான் போர்?

    இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள RAF Fairford விமானப்படைத் தளத்திற்கு அருகே, பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் தயாராக இருந்தனர் என்ற சந்தேகத்தின்பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க விமானப்படை பயன்படுத்தி வரும் RAF Fairford தளம், ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருப்பதால், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஈரான் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், ரஷ்யா அல்லது இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் தொடர்பு ஏதேனும் இருக்கிறதா…

  • ஆஸ்திரேலியா அடுத்து அமெரிக்கா.. AI மாடல்களால் வெடித்த அதிர்ச்சி சர்ச்சை!

    ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் AI ஏஜென்ட்களின் அதிர்ச்சி நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. OpenAI-யின் AI ஏஜென்ட் ஒன்று ஆஸ்திரேலிய அரசின் Medicare புள்ளிவிவர இணையதளத்தை அனுமதியின்றி அணுகியதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அமெரிக்க அரசின் இணையதளங்களிலும் OpenAI மாடல்கள் எதிர்பாராத வகையில் செயல்பட்டது தெரியவந்துள்ளது. அமெரிக்க கல்வித்துறை இணையதளத்தை ஊடுருவ முயற்சி நடந்ததாகவும், SEC மற்றும் Census Bureau தொடர்பான தரவுகளை AI ஏஜென்ட்கள் அணுகியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. AI ஏஜென்ட்கள் அமெரிக்க கூட்டாட்சி அரசின்…

  • ஐ.நா மேடையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் பத்திரிகையாளரை நோக்கி பாகிஸ்தான் அமைச்சர் செய்த செய்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் 81-வது பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளனர். அந்த வகையில் இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்பும் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர் அவரிடம், “ஆப்கானிஸ்தான் பெண்களுக்கான தலிபான்களின் கடுமையான கொள்கைகள் குறித்து பாகிஸ்தானின் தற்போதைய…

  • பசிபிக் கடலில் மட்டும் ஒரே நேரத்தில் 5 புயல்கள் உருவாகியுள்ளது ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    இயற்கையின் மிகப்பெரும் அழிவு சக்திகளில் ஒன்றாக புயல்கள் இருந்து வருகின்றன. ராட்சச அலைகளை உருவாக்கி, மழை, பெருவெள்ளம், அதி தீவிர காற்று என இந்த புயல்கள் ஆயிரக்கணக்கான உயிர்களை பழிவாங்கி வருகிறது. அதிலும் கடற்கரையோர பகுதிகள் புயல்களால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இப்படி கடலில் உருவாகும் ஒரு புயலே பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது உலகில் 5 புயல்கள் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது அரிதான மற்றும் ஆபத்தான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதாவது பசிபிக்…

  • நிறைவேறுமா பிரதமர் கனவு.. தேசிய அரசியலை நோக்கி விஜய்..? வடக்கிலும் கால்பதித்த தவெக!

    முதல்வர் விஜய் தலைமையிலானதமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)தேசிய அளவில் தனது அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, வடமாநிலங்களில் த.வெ.க காலடி எடுத்து வைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக, மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்த்வான் மாவட்டம் பகுபூர் பகுதியில் த.வெ.க தனது முதல் மாநிலக் கட்சி அலுவலகத்தைத் திறந்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. கட்சி ஆரம்பித்த இரண்டே வருடங்களில் அவர் முதல்வரானதைத் தொடர்ந்து, இந்தியா…

  • பாலஸ்தீனக் கைதியைக் கொல்லுமாறு மிரட்டல் – ஹமாஸ் கடும் கண்டனம்

    பாலஸ்தீனக் கைதியான ஹசன் சலாமேவைக் (Hassan Salameh) கொன்றுவிடுவதாக மிரட்டும் காணொளியை வெளியிட்ட இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்விரை ஹமாஸ் அமைப்பு கண்டித்துள்ளது. இச்செயல் அனைத்துலகச் சட்டங்களின் அப்பட்டமான மீறல் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்தக் காணொளி அவரது உறுதியையோ அல்லது எங்கள் மற்ற கைதிகளின் உறுதியையோ பலவீனப்படுத்தாது என்றும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்தது. இதேவேளை, ஆக்கிரமிப்பாளர்களின் சிறைகளிலிருந்து எங்கள் கைதிகளை விடுவிக்க, அனைத்து நிலைகளிலும் மற்றும் அனைத்து…