Author: Six Side Media

  • இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, வரி வருவாயை விட அதிகம்: ADIC சுட்டிக்காட்டு!

    இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, மது வரி வருவாயை விடவும் அதிகமாகும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (Alcohol & Drug Information Center – ADIC) தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி, சுங்கத் திணைக்களம், சுகாதார அமைச்சு மற்றும் சர்வதேச நிறுவனங்களான MOVENDI International, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம், உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வுகளின் அறிக்கை தரவுகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,…

  • கல்கிசையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

    கல்கிசை, ஹுலுதாகொட வீதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

  • வடகொரியாவுடனான போரை முறைப்படி முடிவுக்குக் கொண்டுவர தென்கொரியா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

    தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung), வடகொரியாவுடன் அதிகாரப்பூர்வமாக போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையான படைநீக்கப்பட்ட மண்டலத்தில் பதற்றங்களைத் தவிர்க்கவும், வடகொரியாவின் அணுஆயுதத் திட்டங்களை நிறுத்துவதற்கான வழிகளைக் கண்டறியவும் “பன்முகப் பாதுகாப்பு அமைப்பை” உருவாக்க அதிபர் லீ முன்மொழிந்துள்ளார். 1953-ல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானபோதிலும், அமைதி ஒப்பந்தம் எதுவுமில்லை என்பதால் இரு நாடுகளும் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் போரிலேயே உள்ளன.  கொரிய…

  • கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்களின் சராசரி விந்தணு எண்ணிக்கை 50% மேல் கணிசமாகக் குறைந்துள்ளதாகஆய்வு

    “ஸ்பெர்மாகெடான்” என்ற சொல், உலகம் முழுவதும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை மற்றும் ஒட்டுமொத்த கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாகக் கூறப்படுவது குறித்து எழுந்துள்ள பொது மற்றும் அறிவியல் ரீதியான கவலைகளைக் குறிக்கிறது. தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஷானா ஸ்வான் தலைமையிலான ஆய்வுகள் உட்பட பல முக்கிய ஆராய்ச்சிகள், கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்களின் சராசரி விந்தணு எண்ணிக்கை 50% மேல் கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கூறுகின்றன. 2000-ம் ஆண்டிற்குப் பிறகு இந்த சரிவின் வேகம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அன்றாட…

  • மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறை

    கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜநகர் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் வேட்டையில் ஈடுபட்டதாகவும் அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி  தெரிவித்தார். இதில், வனத்துறை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்ததாகவும் கர்நாடக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாஜிஸ்டிரேட் விசாரணைக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

  • கேம்பிரிட்ஜ் பேராசிரியர் உயிரிழப்பு – ‘தொடர் அவதூறுகளை எதிர்கொண்டார்’ என குடும்பத்தினர் ஆதங்கம்

    கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மிக இளைய கருப்பின பேராசிரியரான ஜேசன் ஆர்டே (Jason Arday – 41), லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது கல்விச் சான்றுகள், ஆராய்ச்சிகள் மற்றும் அறக்கட்டளைப் பணிகள் குறித்து முறைகேடு மற்றும் திருட்டு (Plagiarism) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மாதத் தொடக்கத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜேசன் ஆர்டேவின் மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “கேம்பிரிட்ஜ் பேராசிரியராகப் பொறுப்பேற்றது முதல் கடந்த…

  • இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு

    இந்தோனேசியாவின் புளோரஸ் (Flores) தீவுப் பகுதியில் சனிக்கிழமை காலை 6:00 மணியளவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது என்டே (Ende) நகரத்திலிருந்து 68 கி.மீ வடமேற்கே மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை குறைந்தது 47 பேர் உயிரிழந்துள்ளனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.  நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுப் பின்னர் திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும் என்டே பகுதியின் மவ்ரோல் (Maurole) கடற்கரையில்…

  • மேற்குக்கரையில் யூதக் குடியேற்றவாசிகளின் முற்றுகையில் பாலஸ்தீனக் குடும்பங்கள்

    ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள குஸ்ரா (Qusra) கிராமத்தில், பாலஸ்தீனக் குடும்பங்களின் வீடுகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் இஸ்ரேலிய யூதக் குடியேற்றவாசிகள்  குன்றின் மீதிருந்த வீடுகளைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டுள்ளனர். குடியேற்றவாசிகள் கூடாரம் அமைத்து, குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளைத் துண்டித்ததுடன், சாலைகளையும் மறித்துள்ளனர். இதனால் வீடுகளுக்குள் சிக்கியுள்ள குடும்பங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடக்கத்தில் ராணுவ வீரர்கள் குடியேற்றவாசிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பின்னர் அவர்களைக் கலைக்க முயன்றனர். இருப்பினும்,…

  • பிறந்த குழந்தைக்கு சொந்தம் கொண்டாடிய வாடகை தாய்

    அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்த பெற்றோர்கள், ஒரு கட்டத்தில் வாடகை தாயிடம் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதை தொடர்ந்து, குழந்தை பெற்றுக்கொண்ட அவர் குழந்தை தனக்கு தான் சொந்தம் என்று கூறி நீதிமன்றத்தை நாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த தம்பதிகளான ஓமர் அகமது மற்றும் நெளஷீன் கில்கர் ஆகியோர், செவிலியரான மெக்கென்னா வெஸ்ட் என்ற வாடகை தாயை அணுகி, தங்களது குழந்தையை பெற்றுத் தருமாறு கூறியுள்ளனர். அவர்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட…

  • செம்மணி மனித புதைகுழி: மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்

    செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், 53 ஆவது நாளான இன்றைய தினம் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 107 நாள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தமாக 562 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 557 எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.