Author: Six Side Media
-
ஐரோப்பாவில் வீசும் கடும் வெப்ப அலை.. 16 ஆயிரமாக உயர்ந்த உயிரிழப்பு
ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஜூன் மாத இறுதியில் வீசிய வரலாறு காணாத கடும் வெப்ப அலையால், வழக்கமான உயிரிழப்பு எண்ணிக்கையை விட சுமார் 16,000 பேர் கூடுதலாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட வடக்கு ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய இறப்பு கண்காணிப்பு வலையமைப்பு (European Mortality Monitoring Network) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வெப்ப அலையின் தாக்கத்தால் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கமான அளவைவிட பல…
-
ஜிம்பாப்வே படகு விபத்தில் 18 குழந்தைகள் உட்பட 72 பேர் உயிரிழப்பு.
ஜிம்பாப்வேயின் கரிபா ஏரியில் அதிக அளவு பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70-க்கும் மேலாக உயர்ந்துள்ளதாகவும், அதில் 18 குழந்தைகளும் அடங்குவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை பலத்த அலையின் காரணமாக இந்தப் படகு கவிழ்ந்தது. அதன்பிறகு மேலும் 26 சடலங்கள் மீட்கப்பட்டு, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பழமையான அந்தப் படகு, கரிபா நகரத்திலிருந்து நாட்டின் வடமேற்கில் உள்ள கிராமப்புற மற்றும் மீன்பிடி சமூகங்களை நோக்கிச்…
-
ருமேனிய வான் வெளியை மீறிய ட்ரோனை நேட்டோ போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.
நேட்டோ வான்வழி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஸ்பானிஷ் எஃப்-18 (F-18) போர் விமானத்தின் பைலட் ஒருவர், ருமேனியாவின் தேசிய வான்வெளியை சட்டவிரோதமாக மீறிய ட்ரோன் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாக ருமேனிய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் அந்நாடு சுட்டு வீழ்த்திய நான்காவது ஆளில்லா விமானம் இதுவாகும். நேட்டோ உறுப்பு நாடான ருமேனியா, உக்ரைனுடன் 614 கிலோமீட்டர் (382 மைல்) நீளமுள்ள நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் ரஷ்ய ட்ரோன்கள் பலமுறை…
-
ஸ்பெயின் நோக்கிச் சென்ற 111 புலம்பெயர்ந்தோரை மொராக்கோ பொலிஸார் கைது செய்துள்ளனர்
ஸ்பெயினின் செவுட்டாவை நோக்கிச் சென்ற 111 புலம்பெயர்ந்தோரை மொராக்கோ கைது செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஒருமுறை பெருந்திரளான புலம்பெயர்ந்தோர் எல்லையைக் கடக்க அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, எல்லையின் இருபுறமும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செவுட்டாவிற்குள் நுழைய முயன்ற 111 பேரை மொராக்கோ பொலிஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 72,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் செவுட்டாவிற்குள் அலை அலையாகப் புகுந்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, உலகம் முழுவதிலும் உள்ள தீவிர…
-
மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் பெரிய விமானம் சோதனை வெற்றி
முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் மிகப்பெரிய விமானமான ‘எக்ஸ்1’-யை வெற்றிகரமாக பறக்கவிட்டு அமெரிக்காவின் ஹார்ட் எயாரோஸ்பேஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. நியூயோர்க் விமான நிலையத்தில் நடந்த சோதனையின்போது அந்த விமானம் 1,100 அடி உயரம் வரை சென்று 27 நிமிடங்கள் பறந்து தரை இறங்கியது. இதற்கு வெறும் ரூ.477 மதிப்புள்ள மின்சாரம் மட்டுமே செலவானதாக அந்த நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவே தற்போது உலகின் மிகப்பெரிய மின்கலத்தில் இயங்கக்கூடிய மின்சார விமானம் என்ற சாதனையை பெற்றுள்ளது.…
-
இலங்கையின் முதலாவது பெண் மார்ஷல் பனங்காட்டு மண்ணில் இருந்து
விமானநிலையம் மற்றும் விமானச் சேவைகள் தனியார் நிறுவனத்தின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புத் துறையில் இதுவரை ஆண்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் முறையாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவரது இந்த நியமனமானது இலங்கையின் சிவில் விமானப் பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதுடன், இந்த துறையில் சிறப்புமிக்க பதவிகளை நோக்கிச் செல்ல எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில்…
-
இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 16, 2026 ஞாயிறு
மேஷம்: எண்ணம்போல ஏற்றம் வரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்க திறமை பேசப்படும். சிலருக்கு பணிசார்ந்த அயல்நாட்டுப் பயண வாய்ப்பு வரலாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் விலகி இருந்த நிலை மாறும். இளம் வயதினர் பெற்றோர், பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். சுபகாரியங்களில் சுயமுடிவைத் தவிருங்கள். ஆடை, ஆபரணம் சேரும். வீடு, வாகனம் மாற்ற சந்தர்ப்பம் வரலாம். ரியல் எஸ்டேட் தொழில் செழிக்கும். தலைவலி, வயிறு உபாதை வரலாம். துர்க்கையைத் துதியுங்கள். வாழ்க்கை செழிக்கும். ரிஷபம்: முயற்சிகள்…
-
பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் எங்களுடனேயே வாழ விரும்புகிறார்கள்” – பாகிஸ்தான் ஜனாதிபதி பேச்சு!
பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்துக்கள் இந்தியாவுக்குச் செல்வதை விட, பாகிஸ்தானிலேயே தொடர்ந்து வசிப்பதற்கு விரும்புவதாக அந்த நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றிய அவர் “இந்தியர்கள் ‘அகண்ட பாரதம்’ என்ற எண்ணத்தை நம்புகிறார்கள். ஆனால் நாங்கள் சகிப்புத்தன்மை கொண்ட மனப்பான்மையைக் கொண்டவர்கள். பாகிஸ்தானில் 4 சதவீதம் இந்துக்கள் வாழ்கின்றனர்.உலகளாவிய ரீதியில் மற்ற இடங்களில் இருப்பதைப் போலவே அவர்களும்…
-
தாய் மற்றும் தம்பியின் உயிரை பறித்த 17 வயதுச் சிறுவன்: ‘ChatGPT’ செயலியைக் கொண்டு திட்டம் தீட்டியமை அம்பலம்!
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் தனது தாயார் மற்றும் சகோதரின் உயிரை பறித்த குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுச் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அர்ஜுன் அரவிந்த் என்ற 17 வயதுடைய சிறுவன் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்த விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவன் இந்த குற்றத்தை புரிவதற்கு முன்னதாக ‘ChatGPT’ செயற்கை நுண்ணறிவுச் செயலியைப் பயன்படுத்தித் தனது குடும்பத்தினரை மரணிக்க செய்வது தொடர்பான கதைகள் மற்றும் கற்பனைக் காட்சிகளை உருவாக்கியுள்ளதாக மாவட்ட அரச…
-
இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, வரி வருவாயை விட அதிகம்: ADIC சுட்டிக்காட்டு!
இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, மது வரி வருவாயை விடவும் அதிகமாகும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (Alcohol & Drug Information Center – ADIC) தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி, சுங்கத் திணைக்களம், சுகாதார அமைச்சு மற்றும் சர்வதேச நிறுவனங்களான MOVENDI International, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம், உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வுகளின் அறிக்கை தரவுகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,…