Author: Six Side Media

  • பூட்டான் உயர்நீதிமன்றத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சிறப்புரை

    இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தலைமையிலான பிரதிநிதிகள் குழு பூட்டானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது. இந்த விஜயத்தின் முக்கிய அம்சமாக, பூட்டான் நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் சிறப்புரை ஆற்றியுள்ளனர். பூட்டான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட எட்டு நீதிபதிகள் அடங்கிய குழுவினர், இலங்கை பிரதிநிதிகளை உற்சாகமாக வரவேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான சட்ட மற்றும் நீதித்துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும்…

  • புதிய பொருளாதாரத் தடை – ட்ரம்பின் வியூகத்தை விமர்சித்த ஈரான்

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய பொருளாதாரத் தடை பிரசாரத்தை ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) நிராகரித்துள்ளார். “பொருளாதார டி-டே” (Economic D-Day) என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கம் கொண்டது என்று அவர் விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், வாஷிங்டனின் முன்னெப்போதும் இல்லாத கடன் மற்றும் அதிகரித்து வரும் வட்டிச் செலவுகள் மீதான கவனத்தை திசைதிருப்பவே இந்த நகர்வு…

  • வவுனியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயைக் கட்டுப்படுத்திய இலங்கை விமானப்படையினர்

    வவுனியா பூவரசன் குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயை இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளனர். பூவரசன் குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீ வேகமாகப் பரவுவதை உடனடியாகப் கட்டுப்படுத்தும் நோக்குடன் இலங்கை விமானப்படை, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், பூவரசன் குளம் பகுதியை விரைவாக அடைந்து தீயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். விமானப்படையின் இந்த உடனடித் நடவடிக்கை காரணமாக, அருகிலுள்ள வனக்காப்பகத்திற்கும் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கும் ஏற்பட…

  • முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் குறித்து ரவிகரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

    இலங்கையிலேயே பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களே காணப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இந்நிலையில், குறித்த இரு மாவட்டங்களுக்கும் தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் நிறுவப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,”முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கென தனியான பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர்…

  • பிரபல டிக்டாக்கர், மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

    பாகிஸ்தானில் மிகவும் பிரபல டிக்டாக்கராக இருந்தவர் ஆயிஷா கிலாமானா (சம்ஸூ பீபி). 28 வயதான இவரை, டிக்டாக்கில் சுமார் 1.3 மில்லியன் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில்தான், கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தக்சிலா (Taxila) பகுதியில் தனது சகோதரி மற்றும் சகோதரருடன் காரில் சென்றுகொண்டிருந்தார், ஆயிஷா. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஆயிஷாவின் கழுத்தில் தோட்டா பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச்…

  • அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் எனக்கூறி போலி இனிப்பு விற்பனை: அமேசன் நிறுவனத்துக்கு அபராதம்!

    இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் பிரசாதம் எனப் பொய்யாகக் கூறி இணையவழியில் இனிப்புகளை விற்பனை செய்தமைக்காக, பிரபல அமேசன் (Amazon) நிறுவனத்துக்கு இந்திய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை 1 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ‘சந்து டிரேடிங் கம்பனி’ எனும் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘பீகாரி பிரதர்ஸ்’ என்ற பெயரில் அமேசான் தளத்தின் ஊடாக இந்த இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நெய் லட்டு, கோயா லட்டு, பூந்தி லட்டு மற்றும்…

  • மெட்ரோ தொடருந்தில் பாம்புகள் – சீனாவில் பரபரப்பு

    சீனாவின் நான்ஜிங் நகரில் பயணித்துக் கொண்டிருந்த மெட்ரோ தொடருந்தில், பயணி ஒருவர் கொண்டு வந்த வாளி கவிழ்ந்ததில் உயிருள்ள பாம்புகள் தொடருந்துக்குள் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாளியில் இருந்து வெளியேறிய பாம்புகள் தொடருந்துப் பெட்டி முழுவதும் ஊர்ந்து சென்ற போதிலும், பயணிகள் பதற்றமடையாமல் அமைதியாக இருந்துள்ளனர். சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்குள், சக பயணிகள் இணைந்து பாம்புகளை கைகளால் பிடித்து மீண்டும் வாளிக்குள் போட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள…

  • இலங்கை சுங்கத்தின் பாரிய மோசடி – நண்பரை பாதுகாக்கிறாரா ஜனாதிபதி?

    “இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மற்றுமொரு பெருவாரியான மோசடி இதுவாகும். சுங்கத் திணைக்களத்திற்குள் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்திய 123 கொள்கலன்களுக்குப் (Containers) புறம்பாகவே இந்த மோசடி இடம்பெற்றுள்ளது” எனக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க நேற்று (19) நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். இது தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி தெளிவான அறிக்கையொன்றை வெளியிட வேண்டும் என வலியுறுத்திய அவர், குறித்த விசாரணை அறிக்கையை அரசாங்கம் மறைப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். இது குறித்து மேலும் கருத்து…

  • ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்திற்கு வருகை

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெறும் இன்றைய அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

  • ட்ரம்ப் அறிவிப்பு: ஈரான் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான பொருளாதாரத் நடவடிக்கை

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் உதவி வழங்கி, உயிர்நாடியாகச் செயற்படும் எந்தவொரு நாடும் அமெரிக்காவின் மிகக் கடுமையான பொருளாதார விளைவுகளையும் தடைகளையும் சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். ஈரானை முழுமையாகத் தனிமைப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.