Category: முக்கிய செய்தி
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் – ட்ரம்ப் திட்டவட்டம்
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ம் திகதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலை உயர்ந்தது. இதையடுத்து. இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால். ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு…
-
ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு
ஜப்பானில் கியூஷு தீவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (28) அதிகாலை ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் அந்நாட்டில் பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்போது 10 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பூமிக்கு…
-
கனடா எட்மண்டனில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!
கனடாவின் எட்மண்டன் (Edmonton) நகரின் மேற்குப் பகுதியில் பட்டப்பகலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 39 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 28 ஜூலை 2026 அன்று முற்பகல் 11:35 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. எட்மண்டன் நகரின் 112 அவென்யூ மற்றும் 149 ஸ்ட்ரீட் (112 Avenue and 149 Street) பகுதிக்கு அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 39 வயது நபரை மீட்ட அவசர…
-
சர்வதேச மாணவர்கள் வேலை செய்வது தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள அறிவிப்பு
கனடாவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள் வேலை செய்வது தொடர்பாக, அந்நாட்டின் குடியேற்றத் துறை (IRCC) புதிய மற்றும் இறுக்கமான வழிகாட்டுதல் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. போர்டேஜ் கல்லூரி (Portage College) உள்ளிட்ட சில கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சர்வதேச மாணவர்களின் வேலை அனுமதி (Work Permit) விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உங்களுடைய கல்வி அனுமதிப் பத்திரத்தில் (Study Permit) ‘வேலை செய்யலாம்’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தால்…
-
”X Money’ ‘ சேவையை அறிமுகப்படுத்தியது ‘X’ நிறுவனம்
அமெரிக்காவில் எலான் மஸ்கின் ‘X’ நிறுவனம் தனது புதிய டிஜிட்டல் வங்கிச் சேவையான ‘X Money’யை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சேவையின் மூலம், பயனர்கள் ‘X’ செயலியிலேயே நேரடியாக பணம் அனுப்பவும், மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பில்களைச் செலுத்தவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகத் தளமாக மட்டுமல்லாமல், அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் ‘Everything App ஆக ‘X’ செயலியை மாற்றும் நோக்கில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
முன்னாள் காதலிக்கு 860 கோடி சொத்து எழுதிய எப்ஸ்டீன்!
அமெரிக்க பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தனது உயிலில், அவரது கடைசி காதலியான கரினா ஷூலியாக் என்ற பல் மருத்துவருக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை எழுதி வைத்துள்ளதாக புதிய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீனின் வழக்குப் பதிவுகள் மற்றும் உயில் ஆவணங்கள் (Epstein Files) மூலம் இந்த விபரங்கள் அம்பலமாகியுள்ளன. சொத்துக்களுடன் சேர்த்து, திருமண ஒப்பந்தத்தின் அடையாளமாக 33 காரட் வைர மோதிரம் ஒன்றையும் கரினாவுக்கு எப்ஸ்டீன் வழங்கியுள்ளார்.…
-
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்தது!
ஜனவரி மாத ஆரம்பம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்துள்ளது. இதற்கமைய, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூலை 26 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,313,974 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதேவேளை, ஜூலை 01 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 167,401 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அவ்…
-
நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து: மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழப்பு!
இலங்கை: நேற்று காலை வேளையில் ஹுரிகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்நேவ – தம்புத்தேகம வீதியின் 30 ஆம் கல் தூண் அருகே உள்ள கிளை வீதியில் நாமல்கமுவ திசையை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் குறுக்கே பாய்ந்த நாயைக் காப்பாற்ற முயன்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி மீகலேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கலாங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர்…
-
இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், டெங்கு நோய் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 17,779 ஆகும். இரண்டாவது அதிகளவான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 16,665 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, அதிகளவான…
-
அமெரிக்க படைகள் மீது ஈரான் திடீர் ஏவுகணைத் தாக்குதல்
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைகள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டதாக, அமெரிக்க மத்தியப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. ஈரான் போர் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. முன்னதாக வெள்ளை மாளிகை வந்த நெதன்யாகுவை டிரம்ப் வரவேற்றார். இந்த சந்திப்பு நடந்த சில மணி நேரத்தில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை…