Category: முக்கிய செய்தி

  • சாவகச்சேரியில் உண்ணாவிரத போராட்டம்

    அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று எதிர்வரும் 12ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12ஆம் திகதி காலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் இன்று நடைபெற்றதுடன், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில்…

  • காஸா முனையில் கடுமையான சுகாதார நெருக்கடி: மேலும் மோசமடையும் என்று எச்சரிக்கை

    காஸா முனையில் நிலவும் கடுமையான பொது சுகாதார நெருக்கடியானது, குளிர்காலம் மற்றும் குளிர்கால மழையின்போது மேலும் மோசமடையும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட தகவல்களின்படி, காஸாவில் நீரின் தரம் கணிசமாக மோசமடைந்துள்ளதாகவும், வயிற்றுப்போக்கு கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச அளவிலான தண்ணீரைக் கூட வழங்கத் தவறியுள்ள சூழ்நிலையில், நீரின் தரம் மற்றும் நீர் மாசுபடுதல் ஆகியவை பெரும் பிரச்சினையாகத் தொடர்வதாக தகவல்கள் கூறுகின்றன. குளிர்கால மழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, கழிவுநீரை…

  • அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும்- ஈரானிய உயர் தலைவர்

    அமெரிக்க எதிரிக்கு ஈரான் மறக்க முடியாத பாடங்களைக் கற்பிக்கும் என ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார்; தமது எக்ஸ் (x) தளத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அத்துடன்,அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்கு கடுமையான மற்றும் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளை மற்றும் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். இந்தநிலையில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.…

  • கனடாவின் மரின்லேண்ட் பொழுதுபோக்குப் பூங்காவிலிருந்து மீதமிருந்த கடைசி திமிங்கிலங்களும் டால்பின்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.

    கனடாவின் நயாகரா வீழ்ச்சிப் பகுதியில் உள்ள மரின்லேண்ட் (Marineland) பொழுதுபோக்குப் பூங்காவிலிருந்து மீதமிருந்த கடைசி திமிங்கிலங்களும் டால்பின்களும் வெளியேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் கனடாவில் விலங்குகளைக் கூண்டில் அடைத்து வளர்க்கும் முறை முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 31 அன்று, கடைசி 6 வெள்ளைத் திமிங்கிலங்கள் (Beluga whales) சிறப்புப் போக்குவரத்து லாரிகளில் ஏற்றப்பட்டு, அமெரிக்காவில் உள்ள ஷிகாகோ ஷெட் அக்வாரியம் (Shedd Aquarium) மற்றும் சான் அன்டோனியோ சீவேர்ல்ட் (SeaWorld San Antonio) போன்றவற்றுக்கு அனுப்பப்பட்டன. கடந்த…

  • ஐரோப்பாவின் மிகப்பெரிய தரைப்படையை உருவாக்கும் முயற்சியில் போலந்து நாடு இறங்கியுள்ளது

    ஐரோப்பாவின் மிகப்பெரிய தரைப்படையை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள போலந்து நாடு, வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்துவிட்டு உள்நாட்டு மற்றும் பிராந்திய பாதுகாப்பு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. உக்ரைன் போர் மற்றும் பாதுகாப்பு தேவைகள் காரணமாக, போலந்து நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புப் பொருள் கொள்முதல் 2022-க்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு மடங்காக அதிகரித்து கடந்த ஆண்டு 30.4 பில்லியன் ஸ்லாட்டுகளாக ($8.15 பில்லியன்) உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் போலந்து தனது பாதுகாப்புச் செலவினங்களுக்காக சுமார் €53 பில்லியன் ($61.45 பில்லியன்)…

  • ஜூன் மாத இடைக்கால ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றினால் அதற்கு தாங்களும் உடன்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது

    ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக அமெரிக்கப் படைகள் ஈரானின் லாராக் தீவு மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரான் ஜோர்டானில் உள்ள அமெரிக்க வான்வெளி தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஜூன் மாத ஒப்பந்தத்தை முழுமையாகப் பின்பற்றினால், இஸ்லாமிய குடியரசான ஈரானும் அதற்கு உடனடியாக ஒத்துழைக்கும் என அதிபர் மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian)…

  • ரஷ்ய தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு – ஜெலென்ஸ்கி அறிவிப்பு

    உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள தொடர் வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (01) தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பமான நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. நேற்று (31) நள்ளிரவு முதல் இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆளில்லா விமானங்கள் மற்றும்…

  • ஒரேநாளில் பல மில்லியன் ரூபா வருமானம் – தெஹிவளை மிருகக்காட்சிசாலை சாதனை

    பாடசாலை விடுமுறைக் காலத்தை முன்னிட்டு கடந்த 26 ஆம் திகதி தெஹிவளை விலங்கியல் பூங்காவைப் (மிருகக்காட்சிசாலை) பார்வையிடுவதற்காக 10,634 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.சி.ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கமைய, அன்றைய தினம் மாத்திரம் 2.5 மில்லியன் ரூபா சாதனை அளவிலான வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார். விலங்கியல் பூங்காவிற்கு வருகை தரும் வழமையான நாளாந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் 2,500 ஆகக் காணப்படும் நிலையில், அன்றைய…

  • பாகிஸ்தானில் 100 ஆண்டு பழமையான இந்து கோயில் இடிப்பு.. மதரஸாவுக்காக இடிக்கப்பட்டதாக சர்ச்சை

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்து கோயில் இடிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோயில் இருந்த இடத்தை அருகில் செயல்படும் மதரஸாவுக்கு பயன்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு இடித்ததாக அங்குள்ள இந்து சிறுபான்மை அமைப்புகளும், உள்ளூர் மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இருப்பினும், கனமழையால் கோயில் இடிந்து விழுந்ததாக பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்து மக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். இருப்பினும், அங்கு இந்து மக்களுக்கு உரிய உரிமைகள் கிடைப்பதில்லை. மேலும், இந்து சொத்துகள், கோயில்கள்…

  • பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்

    கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் என்றழைக்கப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கில், சிவநேசதுரை சந்திரகாந்தன் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த வழக்கில், சிவநேசதுரை சந்திரகாந்தன் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம், வழக்கு விசாரணைக்கு…