Category: முக்கிய செய்தி
-
விமானம் மோதி சிதறிய கார்கள்.. மியாமியில் அதிர்ச்சி.. 5 பேர் உயிரிழப்பு!!
அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்துக்காக இயக்கப்பட்ட சரக்கு விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்; மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். Prime Air Flight 7598 என்ற இந்த விமானம், அமேசானுக்காக 21 Air நிறுவனத்தால் இயக்கப்பட்ட Boeing 767-300 ரக சரக்கு விமானமாகும். இது பியூர்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் இருந்து புறப்பட்டு மியாமி விமான நிலையத்தை நோக்கி வந்தது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 2…
-
சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் தொடங்கியது. முன்னதாக, கடந்த வியாழக்கிழமை (செப்டர்ம்பர் 3) நடைபெற்ற சட்டப்பேரவையின் போது பேசிய முதல்வர் விஜய், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு திங்கள் கிழமை பதிலளிக்கப்போவதாகவும், யாரும் எழுந்து வெளியில் போகக்கூடாது எனவும் பேசியிருந்தார். முதல்வரின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தான், இன்று எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளித்துப்…
-
விளக்கமறியலில் உள்ள நாமலுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவை உட்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் வளாகத்தைச் சுற்றி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார். அத்துடன், அவரைச் சந்திப்பதற்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 3 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஸ்ரீலங்கன்…
-
நேபாளப் பேரழிவுக்குப் பிறகும் சீனா பிடிவாதம்.. இந்தியாவுக்கு ஆபத்து!!
நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை ஏரி உடைப்புப் பேரழிவுக்குப் பிறகும், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட நீர்மின் திட்டத்தை அமைப்பதில் சீனா உறுதியுடன் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது எதிர்கால மின்தேவையைப் பூர்த்தி செய்ய சீனா முன்னெடுத்துள்ள திட்டம் இந்தியாவுக்கு எச்சரிக்கை ஒலியை எழுப்பியிருக்கிறது. திபெத் பகுதியில் அருணாச்சல பிரதேச எல்லைக்கு 200 கிலோமீட்டருக்கு முன்பாக 5 பிரம்மாண்ட அணைகளைக் கட்டி 60 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. நேபாளப் பேரழிவைத் தொடர்ந்து இந்த திட்டத்தைச்…
-
போரில் அமெரிக்கா தோற்றுவிட்டது : அதிரவைத்த CIA இயக்குநர்
கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய அரசியல், ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்டனர். எனினும் இந்த இழப்பில் இருந்து மீண்ட ஈரான் அமெரிக்க ராணுவ தளங்கள் இருந்த வளைகுடா நாடுகள் மீது கடுமையாக தாக்குதலை நடத்தியது. அதோடு முக்கிய கச்சா எண்ணெய் வர்த்தக தடமான ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் முடக்கியது.…
-
நிதிப் பற்றாக்குறையால் முடங்கிய சமூக சமையலறைகள்: காஸாவில் தீவிரப் பட்டினி!
காஸாவில் நிதிப் பற்றாக்குறை மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் உயர்வு காரணமாக சமூக சமையலறைகளின் இயக்கம் பெருமளவில் சரிவடைந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குடும்பங்கள் போதிய உணவின்றித் தவிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஒரு உணவை 7 பேர் பங்கிட்டுக்கொள்ளும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று கூறுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஓச்சா அமைப்பின் தரவுகளின்படி கடந்த மார்ச் பாதியில் 165 சமையலறைகள் மூலம் தினமும் வழங்கப்பட்டு வந்த 15 லட்சம் உணவுகள் ஜூலை மாதத்தில் 102…
-
அமெரிக்காவில் விமானத்தில் அட்டகாசம் செய்த பயணி
அமெரிக்காவில், விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட 67 வயதுடைய பயணி ஒருவர் சக பயணிகளால் இருக்கையுடன் டக்ட் டேப் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸின் AA618 விமானம் கடந்த வியாழக்கிழமை டெக்சாஸின் டல்லாஸிலிருந்து நியூவர்க்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, பயணியின் கைகள் ஜிப் டைகளால் கட்டப்பட்டதுடன், அவர் இருக்கையுடன் டக்ட் டேப் மூலம் கட்டுப்படுத்தப்பட்டதாக மேரிலாந்து போக்குவரத்து ஆணைய காவல்துறை தெரிவித்துள்ளது. அரிசோனாவைச் சேர்ந்த 67…
-
கனடாவில் பெண் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற விசித்திர விருந்தினர்
கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த ஜானிஸ் ஆண்டர்சன் என்பவரது வீட்டின் தோட்டத்தில், ஆகஸ்ட் 27 அன்று தாய் காட்டுப்பூனை ஒன்று தனது ஐந்து குட்டிகளுடன் நுழைந்தது. அண்டை வீட்டார் கொடுத்த தகவலையடுத்து, தனது வளர்ப்பு நாயை வீட்டிற்குள் பூட்டிவிட்டு ஆண்டர்சன் உடனடியாகத் தனது கேமரா மற்றும் கைப்பேசியுடன் தோட்டத்திற்கு விரைந்தார். அங்கு காட்டுப்பூனைகள் மிகவும் அமைதியாகத் தோட்டத்திலும், வீட்டின் முன்பக்கப் புல்வெளியிலும் அமர்ந்து ஓய்வெடுத்தன. தாய் காட்டுப்பூனை புல்வெளியில் சாவகாசமாகப் படுத்துக் கொண்டது. சில நிமிடங்களிலேயே அவை…
-
அமெரிக்காவைவிட ஆப்பிரிக்கா பெரிதாக இருக்கும் புதிய உலக வரைபடத்துக்கு ஐ.நா. சபை ஒப்புதல்
புதிய உலக வரைபடம் தொடர்பான தீர்மானம் ஐ.நா. சபையில் நேற்று பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ஆப்பிரிக்க கண்டம் பெரிதாகவும் வடஅமெரிக்கா, ஐரோப்பிய கண்டம் சிறியதாகவும் மாற்றப்பட்டு உள்ளன. கடந்த 1569-ம் ஆண்டில் நெதர்லாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் கெரார்டஸ் மெர்கேட்டர் உலக வரைபடத்தை உருவாக்கினார். இதில் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள பகுதிகள் சிறியதாகவும் துருவப் பகுதிகள் பெரியதாகவும் காட்டப்பட்டன. உதாரணமாக மெர்கேட்டரின் உலக வரைபடத்தில் கிரீன்லாந்து தீவும் ஆப்பிரிக்க கண்டமும் ஒரே அளவாக காட்சியளித்தன.…
-
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவம்: ஒரு வாரத்துக்கு முன்பே எச்சரித்த வெள்ளை மாளிகை அதிகாரி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001-ம் ஆண்டு செப்.11-ம் தேதி, அல்காய்தா தீவிரவாதிகள் 2 பயணிகள் விமானத்தை கடத்திச் சென்று அங்கிருந்த இரட்டை கோபுர கட்டிடங்கள் மீது மோதினர். இதில் அந்தக் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்து இடிந்து தரைமட்டமானது. இந்த சம்பவத்தில், அந்தக் கட்டிடத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாது, 19 தீவிரவாதிகள், 300 தீயணைப்பு வீரர்கள் உட்பட மொத்தம் 2,996 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு,ஒசாமா பின் லேடனின் அல் காய்தா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானில் பதுங்கி…