Category: முக்கிய செய்தி

  • ரஷ்யா – வடகொரியாவை இணைக்கும் புதிய பாலம்

    ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளையும் இணைக்கும் முதலாவது புதிய பாலம் ஒன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் ராணுவக் கூட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் திறப்பு விழா, காணொளி கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இதில் ரஷிய பிரதமர் மிக்ஹைல் மிஷுஸ்டின் மற்றும் வடகொரிய பிரதமர் பாக் தே சோங் ஆகியோர் கலந்துகொண்டனர். துமேன் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள…

  • பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு

    பிலிப்பைன்ஸ் நாட்டின் கொரான் கடற்பரப்பில் ‘எம்.வி. ஜூன் அஸ்டர்’  என்ற பயணிகள் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பிரபல சுற்றுலாத் தலமான பலவான் மாகாணத்தின் கொரான் பகுதிக்கு அருகே, கரையிலிருந்து சுமார் 2.2 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. கப்பலில் மொத்தம் 134 பேர் பயணித்துள்ளனர்.இதுவரை 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 87 பயணிகளின் நிலை குறித்து தகவல் இல்லாததால், அவர்களைத் தேடும் பணிகளை பிலிப்பைன்ஸ் கடலோரக்…

  • எண்ணெய் கப்பல்கள் மீது தீவிர தாக்குதல்

    கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் ஐந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களைத் தாங்கள் அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.​ அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஜோர்தானில் உள்ள ‘அல் அஸ்ராக்’ (Al Azraq) இராணுவத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ளது. ​முன்னதாக, குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து…

  • அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்

    கனடா அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப்போர் மும்முரமாகி வருகிறது. 27.6 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான கனேடியப் பொருட்கள் மீது 50 சதவிகித சுங்க வரியை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதே 27.6 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது 15 முதல் 50 சதவிகித சுங்க வரி விதிக்க கனடா முடிவு செய்துள்ளது. விடயம் என்னவென்றால், இந்த வரிவிதிப்பால் கனேடிய மக்களும்தான் பாதிக்கப்பட உள்ளார்கள். ஏனென்றால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்…

  • சுவிஸ் நகரமொன்றில் பாரிய தீவிபத்து: ஒருவர் பலி

    சுவிட்சர்லாந்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானார். சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்திலுள்ள Bellach என்னுமிடத்தில், காய்கறிகள், பழங்கள் மொத்த விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்று உள்ளது. இந்நிலையில், நேற்று காலை 10.30 மணியளவில் அந்தக் கட்டிடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது. தகவலறிந்து தீயணைப்புக்குழுவினர் அங்கு வரும் முன், தீ கட்டிடத்தை கபளீகரம் செய்துவிட்டிருக்கிறது. கட்டிடம் தீயில் முழுமையாக சேதமடைந்துவிட, பொலிசார் மேற்கொண்ட ஆய்வில், அந்தக் கட்டிடத்துக்குள் ஒருவர் உயிரிழந்துகிடந்தது தெரியவந்துள்ளது. அவர்…

  • கொழும்பை வந்தடைந்த ஐ.என்.எஸ் போர்க்கப்பல்

    இந்திய கடற்படையால் உள்நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த் போர்க்கப்பலான INS உதயகிரி, மூன்று நாள் செயல்பாட்டு இடைநிறுத்தப் பயணத்திற்காக நேற்று (08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் இடம்பெறும் நிலையில், இந்தப் போர்க்கப்பலின் வருகையும் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, இந்திய கடற்படையின் நடமாடும் பயிற்சிக் குழுவினரால் தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் அனுபவப் பகிர்வுகளை வழங்குவதன் மூலம், இலங்கை கடற்படையுடனான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த…

  • இங்கிலாந்தில் வான்வழிப் போக்குவரத்தில் ஏற்பட்ட ஒரு சிக்கல் காரணமாக ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது

    இங்கிலாந்தின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது NATS. நாட்டின் அனைத்து வான்வழிப் போக்குவரத்தையும் கட்டுப்படுத்தக் கூடிய இந்த நிறுவனத்தின் flight data processing system-ல் கண்டறியப்படாத ஒரு கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமானங்களின் புறப்பாடு பாதிக்கப்பட்டது. நாட்டின் பரபரப்பான விமான நிலையங்களில் விமானங்கள் புறப்படாததால், வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டின் சில பகுதிகளில் இருந்து புறப்பட்டு பயணித்து வந்த பல விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. நாட்டின் பரபரப்பான…

  • “ட்ரம்புக்கு மனநல பாதிப்பா?”.. ஒற்றைப் பதிவால் கடும் கோபத்தில் அண்டை நாடுகள்!!

    தங்களின் எல்லைக்கு அப்பாற்பட்ட நாடுகள், பகுதிகளுக்கு படையெடுத்துச் செல்லும் மன்னர்களின் கதையைக் கேட்டிருப்போம். ஆனால், அதிபராக பதவியேற்ற நாள் தொடங்கி, அமெரிக்க மக்களால் ‘மன்னர்’ என விமர்சிக்கப்பட்டு வரும் அதிபர் டொனால்ட், டிஜிட்டல் போரை தூண்டிவிட்டிருக்கிறார். ட்ரம்பின் செயல் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்களையும் கோபமடையச் செய்திருக்கிறது. கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மட்டும் தனது ட்ரூத் சோஷியல் மீடியா பக்கத்தில் சுமார் 100 பதிவுகளை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். ஏஐயால் உருவாக்கப்பட்ட படங்களை…

  • அமெரிக்கா மீதான 9/11 தாக்குதல்.. ட்ரம்ப் கூறியது உண்மையா?

    அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது விமானங்களை மோதி நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட நைன் டெவன் (9/11) பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து, வரும் செப்டம்பர் 11-ம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. இந்தநிலையில் தான், நேற்றைய தினம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் 9/11 தாக்குதலின் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அதிபர் ட்ரம்ப், 2001-ம் ஆண்டு தாக்குதல் நடந்த பின்னர் தனது கட்டுமானப் பணியாளர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு கிரவுண்ட் ஜீரோ (Ground…

  • இஸ்ரேல் – பிரித்தானியா இடையே அதிகரிக்கும் பதற்றம்: தூதரகத்தை மூட உத்தரவு – ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

    கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரித்தானியாவின் துணைத் தூதரகத்தை 30 நாட்களுக்குள் மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், காசா தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பிரித்தானிய அதிகாரிகள் மற்றும் ரமல்லாவில் பணியாற்றும் பிரித்தானிய ஊழியர்கள் 7 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா அண்மையில் விதித்த தடைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் பிரித்தானியா இடையிலான உறவுகளில்…