Category: முக்கிய செய்தி
-
காஸாவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து 20 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேலின் போர்த் தாக்குதல்களால் சேதமடைந்த 7 மாடிக் குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், 5 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (16) அதிகாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காஸாவின் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள்…
-
சூடானில் தங்கச் சுரங்க விபத்து – 60 பேர் உயிரிழப்பு
ஆபிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 60 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு கோர்டோபன் மாகாணத்தில் எல்-நஹூத் நகருக்கு அருகில் அமைந்துள்ள அல்-சாரா தங்கச் சுரங்கமே நேற்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தைத் தொடர்ந்து சக தொழிலாளர்கள் தங்களிடமிருந்த கருவிகளைப் பயன்படுத்தி, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டுள்ளனர். எனினும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாறைகள் மற்றும் மண்ணை அகற்றுவதற்கு…
-
ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்காது… ட்ரம்ப்
சவுதி அரேபியா ஹவுதிகளுக்கு எதிராக உதவி கோரியிருந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளதுடன், ஹவுதிகள் கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு குழாய்வழியை முடக்கிய வான்வழித் தாக்குதலுக்கு ஈரானே காரணமாக இருக்கலாம் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து, கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கான சவுதி அரேபியாவின் முக்கிய வழித்தடங்களில் ஒன்று இந்தக் கிழக்கு-மேற்கு குழாய்வழி. முக்கியமான எண்ணெய் குழாய் வழித்தடத்தின் மீதான தாக்குதலுக்கு…
-
சீன கோடீஸ்வரரின் வாடகைத் தாயாக கலிபோர்னியப் பெண்
சீன கோடீஸ்வரருக்கு வாடகைத் தாயாக இருப்பதை கலிபோர்னியா பெண் கண்டறிந்தார். சுமார் 300 குழந்தைகளுக்குத் தந்தையாகக் கருதப்படும் சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர் ஒருவரின் குழந்தையைத் தான் சுமந்து கொண்டிருப்பதை கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கண்டறிந்துள்ளார். தொடர்புடைய பெரும் கோடீஸ்வரர் குறித்து கசிந்துள்ள ஆவணங்களை சிபிஎஸ் செய்தி நிறுவனம் ஆய்வு செய்து, அந்தக் கலிபோர்னியா பெண்ணின் கர்ப்பத்தை சீன தொழிலதிபர் சூ போவுடன் தொடர்புபடுத்தியபோதுதான் குழந்தையின் தந்தை பற்றித் தெரிந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார். 100-க்கும் மேற்பட்ட…
-
பிரபலத்துக்கு உயிர் பயத்தைக் காட்டிய கொள்ளைச் சம்பவம்: ஒரு யூரோ இழப்பீடு வழங்கிய நீதிமன்றம்
கிம் கார்டாஷியன் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் சிக்கிய வழக்கில் அவருக்கு பாரீஸ் நீதிமன்றம் ஒன்று இழப்பீடு வழங்கியுள்ளது. அமெரிக்கத் தொலைக்காட்சிப் பிரபலமான கிம் கார்டாஷியன் என்பவர் 2016ஆம் ஆண்டு பாரீஸில் ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். 2016ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2ஆம் திகதி, முகமூடி அணிந்த எட்டு பேர் கிம் தங்கியிருந்த ஹொட்டல் அறைக்குள் நுழைந்தார்கள். அவர்கள் கிம்மைக் கட்டிப்போட்டு, அவரது வாயில் துணியை அடைத்து அவரிடமிருந்த 6 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய நகைகளை கொள்ளையடித்துச் சென்றார்கள்.…
-
ஏடிஎம் இயந்திரத்தைத் தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: கமெராவில் சிக்கிய காட்சி
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரம் ஒன்றையே கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், கொள்ளையர்கள் இருவர் ஏடிஎம் இயந்திரம் ஒன்றைத் தூக்கிச் சென்றுள்ளனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Ladysmith என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முகமூடியும் கையுறைகளும் அணிந்த இருவர், அந்த ஏடிஎம் இயந்திரத்தை சங்கிலி மூலம் தங்கள் ட்ரக்குடன் இணைத்து, இழுத்துப் பெயர்த்து, தங்கள் ட்ரக்கில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர். கொள்ளைச் சம்பவத்தில்…
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவிற்கு அழைப்பு
கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக அழைக்கப்படவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது 27 உறுப்பினர் நாடுகளுக்குள், கனடாவை முதல் இணை உறுப்பினராக (Associate Member) அழைக்கத் தீர்மானித்துள்ளது. இந்த அறிவிப்பை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லெயன், பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் நடைபெற்ற ‘State of the Union’ உரையில் வெளியிட்டார். கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்த உரையில் கலந்து கொண்டார். அவர், கனடா முழுமையான உறுப்பினராக விரும்பவில்லை என்றாலும், பாதுகாப்பு…
-
ரூபாய் 5000 கோடி சொத்து இருந்தாலும் தெருவில் பிச்சை எடுத்த எம்.எல்.ஏ
மும்பையில் 5000 கோடி மதிப்பு கொண்ட கோடீஸ்வர பாஜக எம்எல்ஏ ஒருவர் திடீரென ஒரு கிழிந்த ஆடைகளுடன் தெருவில் இறங்கி பிச்சை எடுத்த அந்த விசித்திரமான நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலத்தின் மிக முக்கிய கோடீஸ்வர அரசியல்வாதிகளில் ஒருவரான பராக் ஷா இவர் மும்பை காட்கோபர் கிழக்கு தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். தொழிலதிபரான இவருக்கு பல ஆயிரம் கோடிகள் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறது. இவ்வளவு ஆடம்பர வசதிகள் இருந்தாலும் அவர் ஏன்…
-
‘நாட்டில் இருந்து வெளியே போங்க..’ ஜெர்மனியில் வெடித்த புதிய சர்ச்சை
2022-ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் இடையே போர், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரு மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்களுக்கு ஜெர்மனி தற்காலிக பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் உக்ரைனுக்கான ஜெர்மனியின் ஆதரவு குறித்து அந்நாட்டில் அரசியல் விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஜெர்மனியின் வலதுசாரி கட்சியான AfD-இன் இணைத் தலைவர் Alice Weidel, ’ஜெர்மனியில் வசிக்கும் உக்ரைனியர்கள், குறிப்பாக ராணுவ வயதில்…
-
சவுதி மண்ணுக்குள் புதைந்திருந்த பிரம்மாண்ட புதையல்.. உலகமே உற்றுநோக்கும் பின்னணி!
எண்ணெய் வளத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தில் இருந்து பல்வேறு துறைகளில் விரிவடைய சவுதி அரேபியா முயற்சித்து வரும் நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய அளவில் யுரேனியம் தாது இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், சுமார் 11 கோடி டன் யுரேனியம் தாது இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று சவுதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார். வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) 70-வது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சவுதி அரேபியா தொடர்ந்து…