Category: முக்கிய செய்தி
-
சுவிட்சர்லாந்தில் விமான விபத்து ; 3 பேர் பலி
சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ரோனே வேலி பகுதியில் அமைக்கப்பட்ட சியான் விமான நிலையத்தில் இருந்து சிர்ரஸ் எஸ்.ஆர்.22டி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அது புறப்பட்ட 10 நிமிடங்களில் திடீரென ஸ்விஸ் மலைப்பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விமான விபத்தில், இங்கிலாந்து நாட்டினர் 2 பேர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.…
-
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்.
கனடாவைத் தனது முதல் இணை உறுப்பினராக ஆக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்ததைத் தொடர்ந்து, கடுமையான இறக்குமதி வரிகளை விதிக்கப்போவதாகவும் வர்த்தகத்தை நிறுத்த இருப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அந்த ஒன்றியத்தை அச்சுறுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் அந்தத் திட்டத்துடன் முன்னோக்கிச் சென்றால், அமெரிக்கா மிகக் கடுமையான வரிகளை விதிக்கலாம் அல்லது ஐரோப்பாவுடனான வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ளலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும், அது நல்ல நோக்கத்துடன் இருந்தால் சரி; ஆனால் அது தவறான நோக்கத்துடன் இருந்தால், ஐரோப்பாவின் மீது மிக…
-
பங்களாதேஷில் தட்டம்மை பரவல் – 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு
பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள கடுமையான தட்டம்மை நோய்த் தொற்றால் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், அவசர தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏற்கனவே 19.8 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனினும், நாளாந்தம் சுமார் 1,000 புதிய சந்தேகத்திற்கிடமான நோய்த்தொற்று வழக்குகள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளைச் சென்றடையும் வகையில், தடுப்பூசி திட்டத்தின் தீவிர கட்டத்தை செப்டெம்பர் 26ஆம் திகதி ஆரம்பிக்க பங்களாதேஷ்…
-
மக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சி – சவூதிக்கு ஆதரவாக பாகிஸ்தான் உறுதி
இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து, சவூதி அரேபியா மற்றும் துருக்கி உடன் கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தக் கடமையை நிறைவேற்ற தயார் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீது நேற்று (16) தாக்குதல் நடத்த ஏவப்பட்ட ட்ரோன்களை இடைமறித்து தகர்த்ததாகவும், இதற்கு யேமனின் ஹௌதி அமைப்பினர்கள்தான் காரணம் எனவும் சவூதி பாதுகாப்புப் படை குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஹௌதி படை மறுப்பு…
-
திலீபன் நினைவேந்தலை புறக்கணித்த தவிசாளர் உள்ளிட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்
வலி. வடக்கு பிரதேச சபை வளாகத்தில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில், பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது புறக்கணித்துள்ளனர். வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (17) சபா மண்டபத்தில் நடைபெறவிருந்த நிலையில், கீரிமலை பகுதிகளில் அனுமதியின்றி வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தவிசாளர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கண்டித்து பெரும்பாலான உறுப்பினர்கள் அமர்வை…
-
பீஜியில் தீவிரமடையும் HIV தொற்று: தேசிய நெருக்கடியாக அறிவிப்பு
புதிய HIV தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், பீஜி (Fiji ) நாட்டு அரசு HIV நிலைமையை தேசிய நெருக்கடியாக அறிவித்துள்ளது. பீஜி நாட்டு அரசாங்கத்தின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் 2,016 பேருக்கு புதிதாக HIV தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் வசிக்கும் 60 பேரில் ஒருவர் HIV தொற்றுடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் HIV தொற்றுடன் 59 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அவர்களில் 18 பேர் ஒரு வயதை அடைவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாகவும் பீஜி…
-
இரண்டே நாளில் வேறு பள்ளிக்கு மாறும் இளவரசர் ஹாரியின் பிள்ளைகள்
பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியின் பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்த இரண்டே நாளில் வேறு பள்ளிக்கு மாறுகின்றனர். பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதில் உள்ள பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக அவ்வாறு முடிவெடுக்கப்பட்டது. பள்ளியின் தரமோ அங்குப் பிள்ளைகள் நடத்தப்பட்ட விதமோ முடிவுக்குக் காரணம் இல்லை என்று குறிப்பிட்டப்பட்டது. வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையிலான தூரம், அந்த வட்டாரத்தில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றால் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றிக் கவலை எழுந்துள்ளது. இளவரசர் ஹாரி – மேகன் மார்க்கல் தம்பதியின் பேச்சாளர்…
-
ஈரான், அமைதி உடன்பாட்டிற்கேற்ப செயல்படவேண்டும்: சீனா
ஈரான் சென்ற ஜுன் மாதம் அமெரிக்காவுடன் செய்துகொண்ட இடைக்கால அமைதி உடன்பாட்டின் விதிகளுக்கு ஏற்ப செயல்படவேண்டும் என்று சீனா கூறியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்ச்சியிடம் (Abbas Aragchi) அவ்வாறு கூறியுள்ளார். ஈரானும் அமெரிக்காவும் அமைதி காத்து, அரசதந்திரப் பேச்சுகளைத் தொடரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க, எல்லாத் தரப்பும் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் திரு வாங் யீ வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த…
-
மூவாண்டுகளில் முதல்முறையாக அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் அதிகரிப்பு
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியிருக்கிறது. 2023ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக அவ்வாறு செய்யப்பட்டுள்ளது. 3.75 விழுக்காடாக இருந்த வட்டி விகிதம் தற்போது 4 விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் குறைக்க அது உதவும் என்று கருதப்படுகிறது. வட்டி விகிதங்களைக் குறைக்கும்படி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டதையும் மீறி அவை உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய வங்கித் தலைவர் கெவின் வார்ஷ் (Kevin Warsh) இந்த முடிவு சிரமமான ஒன்று என்றாலும் அவசியமானது என கூறியுள்ளார். வட்டி விகிதம்…
-
அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சி
சர்வதேச மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வருவதைத் தடுக்கவும், தற்காலிக குடியேற்ற விசாக்களை மாற்றுவதற்கான விதிகளை இறுக்கமாக்கவும் அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தற்போது சுமார் 300,000 ஆக இருக்கும் நிகர வெளிநாட்டு குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 2028 ஆம் ஆண்டளவில் 225,000 ஆகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய நிலவரப்படி, சர்வதேச மாணவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் அவுஸ்திரேலியாவில் பணிபுரிய முடியும். இருப்பினும், அவர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படும் மணித்தியாலங்களின்…