Category: முக்கிய செய்தி
-
தாக்கப்பட்ட இந்திய விமானி Smit Machchhar இப்போது எங்கு இருக்கிறார்? – வெளியுறவுத் துறை விளக்கம்
ஃபிளைதுபாய் விமானம் ஒன்றில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரைச் சக விமானி கத்தியால் குத்தியிருந்தார். இதில் ஸ்மித் மச்சாருக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு, சவூதி அரேபியாவில் விமானம் தரையிறங்கியபோது, அவர் மோசமான நிலையில் இருந்தார் என்று விமானத்தில் ஸ்மித் மச்சாருக்குச் சிகிச்சையளித்த பல் மருத்துவர் ஷோட்டா மூசாயேவ் கூறியிருந்தார். தற்போது ஸ்மித் மச்சார் எப்படி இருக்கிறார் என்பதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம். அந்த அறிக்கையில், “இந்தியக் குடிமகனும், ‘ஃபிளைதுபாய்’ FZ 1073 விமானத்தின்…
-
இராணுவ விதியை மீறிய பிரபல கே-பாப் கலைஞர்: சியோல் நீதிமன்றம் அளித்த அதிரடித் தீர்ப்பு!
தென் கொரியாவின் பிரபல WINNER K-pop இசைக்குழுவின் உறுப்பினரான MINO-வுக்கு, நாட்டின் கட்டாய இராணுவ சேவைச் சட்டத்தை மீறிய வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சியோல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென் கொரியச் சட்டப்படி, குறிப்பிட்ட வயதுடைய ஆண்கள் அனைவரும் கட்டாயமாக இராணுவ சேவை ஆற்றுவது அவசியமாகும். இந்த நிலையில், இராணுவப் பணியில் ஈடுப்பட்டிருந்த MINO, எந்த வித உரிய தகவலும் இன்றி தொடர்ந்து 102 நாட்கள் பணிக்குச் சமூகமளிக்காமல் இருந்துள்ளார். இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கிலேயே அவருக்கு…
-
ஈரானுக்கு அமெரிக்கா புதிய எச்சரிக்கை? – மத்திய கிழக்கு நோக்கி புறப்பட்டது ‘யு.எஸ்.எஸ். தியோடோர் ரூஸ்வெல்ட்’!
ஈரானுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆலோசித்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு மேலும் ஒரு வானூர்தி தாங்கி போர்க்கப்பலை அனுப்ப பென்டகன் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ‘யு.எஸ்.எஸ். தியோடோர் ரூஸ்வெல்ட்’ (USS Theodore Roosevelt) கப்பல் உள்ளடங்கிய தாக்குதல் குழு அமெரிக்காவின் சான் டியாகோ துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதாக ‘வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 9,000 முதல் 10,000 இராணுவ வீரர்களைக் கொண்ட இத்தாக்குதல் குழு, எதிர்வரும் நவம்பர்…
-
கனடா லொட்டரியில் ரூ.217 கோடி வென்ற பஞ்சாபி இளைஞர்
கனடா லொட்டரியில் பஞ்சாபி இளைஞர் ரூ.217 கோடி வென்றுள்ளார். கனடாவில் வசிக்கும் பஞ்சாபி இளைஞர் அம்ரித்பால் சிங், வாழ்க்கையை மாற்றியமைக்கும் அளவுக்கு பெரிய லொட்டரி பரிசை வென்றுள்ளார். அவர் Lotto 6/49 Gold Ball டிராவில் 3.2 மில்லியன் கனேடிய டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.216-217 கோடி) பரிசை பெற்றுள்ளார். அம்ரித்பால், செப்டம்பர் 19, 2026 அன்று சர்ரே நகரில் டிக்கெட் வாங்கியிருந்தார். முதலில் அவர் டிக்கெட்டை சரிபார்த்தபோது, வெறும் 32,000 கனேடிய டொலர் தான்…
-
கனடாவில் தமிழ் நகைக்கடை மீது துப்பாக்கி சூடு
கனடாவில் தமிழருக்கு சொந்தமான நகையகம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்கார்பரோ பகுதியில் அமைந்துள்ள ஜெயசாயி நகைக்கடையை குறிவைத்து நேற்று அதிகாலை வேளையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடையின் சில பகுதிகளில் துப்பாக்கி ரவைகள் தாக்கி, சேதம் அடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால் கடையில் எந்தவொரு பணியாளரும் அங்கு இருக்கவில்லை. இதன் காரணமாக உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை. தாக்குதல் நடத்தவர்களை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு…
-
வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த டீசல் விலை – பரபரப்பில் ஐரோப்பிய ஒன்றிய மக்கள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ள நாடுகளில் டீசல் லீட்டர் ஒன்றின் விலை சராசரி விலையை விட வரலாறு காணத வகையில் உயர்ந்துள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, டீசல் லீட்டர் ஒன்றின் விலை 2.24 யூரோக்களாக (சுமார் 2.53 அமெரிக்க டொலர்கள்) விற்பனை செய்யப்படுகின்றது. அமெரிக்க – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர்ப் பதற்றங்களைத் தொடர்ந்து, எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு விலை அதிகரிப்பு…
-
அமைச்சர் சந்திரசேகரன் கலந்துகொண்ட போட்டியில் வெடித்த மோதல்! துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்
கிளிநொச்சியில் நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியின்போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கிளிநொச்சி – பூநகரி கிராஞ்சி செந்தாரகை விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(27) நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியொன்று நடைபெற்றுள்ளது. குறித்த இறுதிப் போட்டியில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். போட்டியின்போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட குழப்பநிலை பெரிய கலவரமாக மாறியுள்ளது. இதனையடுத்து…
-
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – ஜப்பானின் பதக்க வேட்டை!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒக்டோபர் 1ஆம் திகதி நிலவரப்படி, போட்டியை நடத்தும் ஜப்பான் பதக்கப் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. ஜப்பான் இதுவரை 50 தங்கம், 77 வெள்ளி, 73 வெண்கலம் என மொத்தம் 200 பதக்கங்களை வென்றுள்ளது. முன்னிலையில் உள்ள சீனா 151 தங்கம் உட்பட 277 பதக்கங்களுடன் உள்ளது. ஜப்பானின் 50 தங்கப் பதக்கங்கள் பல்வேறு விளையாட்டுகளில் கிடைத்துள்ளன. மேலும், சொந்த மண்ணில் நடைபெறும் இந்தப் போட்டியில் தனது மொத்த பதக்க எண்ணிக்கையை…
-
200 ஆண்டுகளில் முதல்முறை.. மரண தண்டனை எதிர்கொண்ட முதல் பெண்!
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், கடைசி நேரத்தில் அதிலிருந்து உயிர் தப்பியுள்ளார். இந்த நிகழ்வு அமெரிக்காவைத் தவிர்த்து உலகம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்ற எதிர்கொண்ட முதல் பெண்மணி க்ரிஸ்டா பைக் ஆவார். 1995-ஆம் ஆண்டு டென்னசியின் நாக்ஸ்வில்லில் அமைந்திருந்த ‘ஜோப் கார்ப்ஸ்’ பயிற்சி மையத்தில், க்ரிஸ்டா பைக்வுக்கு 18 வயதாக இருந்தபோது, அவர்…
-
கோட்டாபயவின் ரிட் மனு விசாரணைக்கு முன்பே நிராகரிப்பு
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மனு தொடர்பான சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னர், அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத்…