Category: முக்கிய செய்தி
-
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கில் புதிய திருப்புமுனை – 10 எம்.பிக்கள் மீது விசாரணை!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு தொடர்பிருப்பதாக பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற சட்ட மா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் பாராளுமன்ற சிறப்புரிமையின் கீழ் பாதுகாக்கப்படுவதால், அவர்களிடம் வாக்குமூலம் பெறுவது அவர்களின் தன்னார்வ சம்மதம் மற்றும்…
-
அமெரிக்கா செல்லும் ஈரான் அதிபர்
இன்னும் ஆறு நாட்களில் ஈரான் போர் தொடங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்துவிடும். ஆனால், இந்தப் போரின் முடிவு குறித்த எந்த நேர்மறையான முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் செல்வது இதுவே முதல்முறை. ஏன்… ஈரானின் அரசியல் பிரதிநிதியே அமெரிக்காவிற்குச் செல்வது இது முதல்முறை. இந்த நேரத்தில், ஃபாக்ஸ்…
-
உக்ரைன் போர் நீடிக்கும் நிலையில் ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேசியுள்ளார்.
2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியது. இன்னும் அது தொடர்ந்துகொண்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை பொருளாதாரத் தடை போன்ற நெருக்கடிகளை ரஷ்யாவிற்குக் கொடுத்தும் இந்தப் போர் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. சமீபத்தில் கூட, இந்தப் போரை நிறுத்த ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்க, அமெரிக்கா ‘ரஷ்ய தடைச் சட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். “நான் அதிபர் ட்ரம்பிடம் பேசினேன். இது ஒரு…
-
கேரளா | திடீர் கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு.. 6 பேர் மரணம், பலர் மாயம்!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பரவலாக பெய்த திடீர் கனமழையால் மூணாறு, வண்டிப்பெரியாறு, வாகமண் உள்ளிட்ட பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாறுகள் ஒன்றிணைந்து ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆற்றங்கரையோர மக்கள் மற்றும் இரவு நேரத்தில் மலைப்பகுதிகளில் வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வட்டவாடாவில் உள்ள கொட்டகம்பூரில்…
-
ஈரானின் 7 நிபந்தனைகள்! ட்ரம்பின் பதிலுக்காக காத்திருக்கும் தெஹ்ரான் போர் முடிவுக்கு வருமா?
மத்திய கிழக்கில் பல மாதங்களாக நீடித்து வரும் அமெரிக்கா–ஈரான் போர், தற்போது சவுதி அரேபியா–ஹவுதி மோதலாலும் மேலும் சிக்கலடைந்துள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு ஈரான் புதிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான 7 நிபந்தனைகளை அமெரிக்காவிடம் ஈரான் தெரிவித்துள்ளது என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி கூறியுள்ளார். ரெசாயி வெளியிட்ட தகவலின்படி, ஈரான் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் முக்கியமாக அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துவது,…
-
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ்
3.30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருந்தும், சொந்த மகளுக்கு தொழில் தொடங்க பணம் தர மறுத்துள்ளார் மெலிண்டா கேட்ஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவரான மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், 34 பில்லியன் டொலர் ( ரூ.3.30 லட்சம் கோடி) சொத்து இருந்தும், தனது மகளின் ஸ்டார்ட்அப்பிற்கு நிதி வழங்க மறுத்துள்ளார். மெலிண்டா, “இது உண்மையான வியாபாரம் என்றால், பிற முதலீட்டாளர்கள்…
-
ரஷ்ய தலைநகர் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
ரஷ்யாவின் பாராளுமன்றத் தேர்தல் இறுதி நாளான இன்று (20), உக்ரைன், மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை நோக்கி மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாஸ்கோ மேயர் செர்கெய் சோபியானின் கூற்றுப்படி, தலைநகரை நோக்கி வந்த நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் மாஸ்கோ பிராந்தியத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலின் போது மாஸ்கோவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் சேதமடைந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள கெர்சன்…
-
கனடாவில் சிறுவனிடம் மோசமாக நடந்த இலங்கையர் கைது
கனடாவில் சிறுவன் ஒருவனை துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 16 வயது சிறுவனை தகாத முறையில் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 62 வயதான இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வந்த சம்பத் பெரேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மருந்தகத்தில் பணியாற்றிய 16 வயது சிறுவன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக…
-
விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்தது நான் தான் : முன்னாள் ஜனாதிபதி ரணில் பகிரங்கம்
விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார். அநுராதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றிய போது தான் ஒரு விடுதலைப் புலி என பகிரங்கமாகக் குறிப்பிட்டமை தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன ரணிலின் கவனத்திற்கு கொண்டுவந்த…
-
விண்வெளியிலும் குப்பை பிரச்சினை: பூமியின் சுற்றுப்பாதையை சுத்தம் செய்யும் முயற்சியில் உலக நாடுகள்!
பூமிக்கு மேலே நம்மால் பார்க்க முடியாத ஒரு மிகப்பெரிய பிரச்சினை உருவாகிக் கொண்டிருக்கிறது! அது விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் குப்பைகள் என எச்சரிக்கப்படுகிறது. செயலிழந்த செயற்கைக்கோள்கள், ராக்கெட் பாகங்கள், சிறிய உலோகத் துண்டுகள், பெயிண்ட் துகள்கள் என பூமியைச் சுற்றி ஏராளமான பொருட்கள் வேகமாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவை எதிர்காலத்தில் விண்வெளிப் பயணங்களுக்கே மிகப்பெரிய சவாலாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்தக் குப்பைகளை எப்படி சுத்தம் செய்யப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. Low Earth Orbit…