Category: பிரதான செய்தி
-
“ஈரானுடனான பேச்சுவார்த்தை சதுரங்கம் போன்றது” – டொனால்ட் ட்ரம்ப்
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் சதுரங்கம் விளையாடுவதை போன்றதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆக்சியோஸ் (Axios) உடனான ஒரு நேர்காணலில், ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதே தமது நோக்கமென அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானிய துறைமுகங்களைத் தடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க கடற்படை நடவடிக்கையால் ஈரானில் நிலைமை மோசமடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஈரானிய ரியால் நாணய அலகின் மதிப்பு மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ட்ரம்ப் வௌியிட்டுள்ள ட்ரூத் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-
செம்மணி புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட குழிக்குள் தலையில்லா முண்டமாக என்புக்கூடு
செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிகளுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் திங்கட்கிழமை (10) முன்னெடுப்பட்டன. முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 524 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 513 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட…
-
தாய்லாந்தில் பாடசாலைகளைத் தொடர்ந்து அரச அலுவலகத்திலும் துப்பாக்கிச்சூடு!
தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அரச அலுவலகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் அவரது ஓட்டுநரும் காயமடைந்துள்ளனர். இன்றைய தினம் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நோந்தபுரி பாடசாலை ஒன்றில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்ட சோகம் தணிவதற்குள், அதே பிராந்தியத்தில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளமை…
-
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன் : வியக்க வைக்கும் தகவல்
பாரம்பரிய மீன் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இனப்பெருக்க முறையைக் கொண்ட கொடுவா மீன்கள் என அழைக்கப்படும் ‘பாராமுண்டி’ (Barramundi) மீன்கள் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பாராமுண்டி மீன்கள் ஆரம்பகால வாழ்க்கையில் ஆண்களாகவே காணப்படுகின்றன. பொதுவாக இவை 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன. உடல் வளர்ச்சி மற்றும் வயது அதிகரிக்கும் நிலையில், இவற்றில் சில மீன்கள் இயற்கையாகவே பெண் மீன்களாக மாறுகின்றன. இந்த பாலின மாற்ற நிகழ்வு அறிவியல் ரீதியாக “புரோட்டாண்ட்ரி” (Protandry) என…
-
உணவுப் பொருட்களின் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு!
போர்கள் மற்றும் மோசமான வானிலை காரணமாக உலகளவில் உணவுப் பொருட்களின் விலை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது. கோதுமை, சமையல் எண்ணெய், சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக, கடந்த ஜூலை மாதத்தில் சர்வதேச உணவு விலைக் குறியீடு (Food Price Index) 131.1 புள்ளிகளாக உயர்ந்துள்ளதாக FAO தெரிவித்துள்ளது.…
-
பூமிக்கு மேலே ஒளிரும் பச்சை, சிவப்பு நிற அதிசயம்
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு மேலே ஒளிரும் ‘அரோரா’ எனப்படும் துருவ ஒளியின் கண்கவர் காட்சியை நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் படம் பிடித்துப் பகிர்ந்துள்ளார். தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருக்கும் அனில் மேனன், இந்த அரிய இயற்கைக் காட்சியை ஐபோன் மூலம் பதிவு செய்ததாகத் தெரிவித்துள்ளார். பூமியின் வளிமண்டலத்திற்கு மேலே பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் ஒளிரும் துருவ ஒளியின் இந்த அழகிய காட்சி, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, அனில்…
-
கோல்டு வாங்குறதா? டீ குடிக்கிறதா? துபாயில் இரண்டுமே ஒரே கப்பில்… விலை மட்டும் இம்புட்டா!
துபாயில் உள்ள ஒரு ஆடம்பர உணவகம், ரூ.1 லட்சம் விலையுள்ள பிரீமியம் பானத்தை அறிமுகப்படுத்தி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கோல்டு காரக் டீ’ (Gold Karak Tea) என்று அழைக்கப்படும் இந்த ஆடம்பர பானம், உணவில் பயன்படுத்தக்கூடிய 24-காரட் தங்கத்தைக் கொண்டும், உண்மையான வெள்ளி கோப்பையில் வைத்தும் வழங்கப்படுகிறது. இது ஒரு சாதாரண தேநீரை அதிநவீன ஆடம்பர அனுபவமாகக் கணநேரத்தில் மாற்றுகிறது. இந்த ‘கோல்டு காரக் டீ’ இவ்வளவு விலை உயர்ந்ததாக இருப்பது ஏன்? ஒரு சாதாரண…
-
நாளை இடம்பெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (9) நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இம்முறை பரீட்சையில் மொத்தம் 294,089 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் 220,366 பேர் சிங்கள மொழியிலும், 73,723 பேர் தமிழ் மொழியிலும் தோற்றவுள்ளனர். குறித்த பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் கடந்த 5ஆம் திகதி நள்ளிரவுடன் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,பரீட்சை முடியும் வரை அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்கள்…
-
2027-ல உலகமே வெப்பத்துல கொதிக்கப் போகுதா?
Super El Nino 2027: சில வானிலை ஆய்வாளர்கள், இது கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வலிமையான எல் நினோவாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால், இந்தக் கூற்றுக்கு தற்போது உறுதியான ஆதாரம் இல்லை என்று விஞ்ஞானிகள் விளக்குகின்றனர். பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Nino) காலநிலை நிகழ்வு, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மிகவும் சக்திவாய்ந்த நிலையை அடையக்கூடும் என்று காலநிலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது நடந்தால், 2027 ஆம்…
-
டூரிஸ்ட ஏமாத்துறதே இந்த நாட்டுக்கு பொழப்பு… 2-வது இடத்தை பிடித்த டென்மார்க்; சீனா எந்த இடம் தெரியுமா?
ஒரு நகரம் மற்றும் அங்குள்ள முக்கிய ஈர்ப்பு மையங்கள் குறித்து சுற்றுலாப் பயணிகள் எவ்வளவு எதிர்மறையான, ஏமாற்றமளிக்கும் விமர்சனங்களை எழுதியுள்ளனர் என்பதைக் கணக்கிட்டே இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் பரபரப்பான சாகசங்கள், கண்கவர் அழகிய இடங்கள் மற்றும் மாயாஜாலமான அனுபவங்களை அள்ளித்தரும் என்று விளம்பரப்படுத்தப்படும் ஒரு நகரத்திற்கு நீங்கள் சென்றதுண்டா? அப்படிச் சென்று, அங்கு உண்மையிலேயே இருந்த சூழலைப் பார்த்து முற்றிலும் ஏமாற்றம் அடைந்தது உண்டா? உலக அளவில் பயணம் செய்யும் பல சுற்றுலாப் பயணிகளுக்கு, சில…