Category: பிரதான செய்தி

  • மட்டக்குளி விபத்து – கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி

    மட்டக்குளியில் மூன்று பேர் உயிரிழப்பதற்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கஞ்சா போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இந்த விடயம் உறுதியாகியுள்ளது. மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர்…

  • மக்காவை நோக்கி ட்ரோன், ஏவுகணை தாக்குதல் முயற்சி – சவூதி எச்சரிக்கை

    சவூதியின் புனித நகரமான மக்காவை நோக்கி ஹவுதி அமைப்பினர்கள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முயன்றதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. மக்காவை நோக்கி வந்த ட்ரோனை, அது மக்கா வான் எல்லைக்குள் நுழைவதற்கு முன்னதாகவே சவூதி வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக சவூதி தரப்பு கூறியுள்ளது. மக்காவை நோக்கி ஹவுதி படையினரால் ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக சவூதி வான் பாதுகாப்புப்…

  • வடமேற்கு நேபாளத்தில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்

    வடமேற்கு நேபாளத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய நில அதிர்வு திணைக்களத்தின் தகவலின்படி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.51 மணியளவில் 4.5 ரிச்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 4.28 மணியளவில் 4.2 ரிச்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மையப்புள்ளி முகு மாவட்டத்தின் கலாய் பகுதிக்கு அருகில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க அதிர்வுகள் அண்டை மாவட்டங்களான டோல்பா மற்றும் ஜும்லா ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன.…

  • காண்டாமிருகங்களைக் கொல்ல குறிவைத்த வேட்டைக்காரர்கள்

    காண்டாமிருகங்களைக் கொல்ல வேட்டைக்காரர்கள் குறிவைத்த நிலையில், திடீரென யானைகள் அவர்களை தாக்கிய ஆச்சரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் வனவிலங்குகள் பூங்கா ஒன்றில் நுழைந்த சட்டவிரோத வேட்டைக்காரர்கள் இருவர், காண்டாமிருகங்களை அவற்றின் கொம்புகளுக்காக கொல்ல திட்டமிட்டுள்ளார்கள். தென்னாப்பிரிக்காவிலுள்ள Kruger வனவிலங்குகள் பூங்காவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்ணீர் குடிப்பதற்காக குட்டை ஒன்றில் காண்டாமிருகங்கள் திரண்டிருக்க, வேட்டைக்காரர்கள் அந்த காண்டாமிருகங்களை தங்கள் துப்பாக்கியால் குறிவைத்துள்ளார்கள். விடயம் என்னவென்றால், தங்களுக்குப் பின்னால் யானைக் கூட்டம் ஒன்று மரங்களுக்கு நடுவே மறைந்திருப்பதைக்…

  • சர்வதேச எல்லையில் இந்திய கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதல்

    சர்வதேச எல்லையில் இந்திய போர் கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை வடக்கு அரபிக்கடலில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் முன்னணிப் போர்க்கப்பல் ஒன்றின் மீது பாகிஸ்தான் கடற்படை கப்பல் ஒன்று மோதலில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் நடந்த இந்த மோதல் சம்பவத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தூதர்…

  • விண்வெளியிலும் ஆயுதங்களை குவித்த அமெரிக்கா

    விண்வெளியை மையமாகக் கொண்டு அமெரிக்கா, சீனா, ரஷ்யா இடையே போட்டி தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக அமெரிக்காவின் விமானப்படை செயலாளர் ட்ராய் மெய்ன்க் (Air Force Secretary Troy Meink) தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேரிலாந்தில் நடைபெற்ற Air, Space and Cyber Conference மாநாட்டில் பேசிய ட்ராய் மெய்ன்க், அமெரிக்கா தற்போது விண்வெளியில் இருந்து செயல்படும் ஆயுதத் திறன்களை பெற்றுள்ளதாக தெரிவித்தார். எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து அமெரிக்காவின்…

  • சீ.வீ.கே.சிவஞானம், சுமந்திரன் உட்பட 5 தரப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

    இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக, தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட 5 தரப்பினருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (16) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியின் விதிகளை மீறி நீக்கியமைக்கு எதிராக, தற்போதைய கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர்…

  • குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணி மீண்டும் ஒத்திவைப்பு

    குருக்கள்மடம் பகுதியில் விடுதலைப் புலிகளால் முஸ்லீம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதியானது மீண்டும் மண் படிவ மாதிரி பரிசோதனைகளுக்காக அகழ்வாய்வு நடவடிக்கை மேற்கொள்ளும் முகமாக நேற்று (15) தொடக்கம் ஒரு வாரம் ஒதுக்கப்பட்ட நிலையில் ஆய்வினை மேற்கொள்ளும் நிபுனர்களின் வேண்டுகோளுக்கமைவாக குறித்த அகழ்வாய்வுப் பணிகள் எதிர்வரும் ஐப்பசி மாதம் 06 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னமே கடந்த பங்குனி 30 ஆம் திகதி தொடக்கம் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு எந்தவித தடயங்களும்…

  • தமிழக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு சொந்தமான இடங்களில் சோதனை

    தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பாடசாலை நிர்வாகிகளிடமிருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக பணம் பெற்று ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளது. அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திருச்சி…

  • தென் கொரியாவில் இலங்கையர்கள் குழுவொன்று கைது!

    தென் கொரியாவில், இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த இலங்கையர்கள் குழுவினர், கஞ்சா பயன்படுத்தி ஹாஷிஷ் போதைப்பொருளை தயாரித்து தென் கொரியாவில் விற்பனை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.