Category: கனடா செய்திகள்
-
கனடாவில் உயர்ந்த சம்பள வேலையை விட்டு, பெற்றோருக்காக நாடு திரும்பும் இந்திய வம்சாவளி பெண்
அதிக சம்பளத்திற்கு கனடாவில் வேலை பார்த்துவந்த பெண், தனது பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க மீண்டும் இந்தியாவிற்கு வரவுள்ளார். கனடாவில் டெலாய்ட் நிறுவனத்தில் உயர்ந்த சம்பளத்துடன் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளி பெண் ப்ரீதி பிஸ்னிக், தனது பெற்றோரின் வயது காரணமாகவும், தனிப்பட்ட உடல்நலக் காரணங்களாலும், வேலைவிட்டு இந்தியா திரும்புவதாக அறிவித்துள்ளார். ப்ரீதி, ரொறன்ரோவில் சீனியர் கன்சல்டன்டாக பணியாற்றி வந்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்த அவர், “எனது பெற்றோரின் உடல்நிலை தான் இந்த முடிவுக்கான முக்கிய…
-
தொல்லை கொடுக்கும் ட்ரம்ப்… பிரான்சுடன் நெருக்கம் காட்டும் கனடா
பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் நெருக்கமான உறவுகள் வைத்துக்கொள்ள கனடாவும் பிரான்சும் முடிவு செய்துள்ளன. ட்ரம்ப் தொடர்ந்து கனடா முதலான பல நாடுகளுக்கு தொல்லை கொடுத்துவரும் நிலையில், கனடா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் தனது சமூக ஊடகப்பக்கத்தில் உலக வரைபடம் ஒன்றை வெளியிட்டிருந்தார் ட்ரம்ப். கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியிலுள்ள பிரான்சுக்கு சொந்தமான Saint-Pierre மற்றும் Miquelon, மற்றும் சில கடல் கடந்த பிரதேசங்களும்…
-
கனடாவில் சட்டவிரோதமாக மீன் பிடித்த நபர்: நீதிமன்றம் வழங்கிய உச்சபட்ச தண்டனை
கனடாவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நபருக்கு சுமார் 4,500 கனேடிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தண்டர்பே நகரைச் சேர்ந்த பால் ஹர்டில் என்ற நபர் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக சுமார் 4,500 கனேடிய டொலர் அபராதமாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவர் 5 ஆண்டுகளுக்கு ஒன்ராறியோ மாகாணத்தில் மீன்பிடிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. பால் ஹர்டில் மீது அணைக்கு கீழ்நோக்கிய 23 மீட்டருக்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்தது, தூண்டில் பயன்படுத்தாமல் வலையை பயன்படுத்தி ‘ரெயின்போ…
-
கனடாவில் விமானப் பயிற்சியின் போது விபத்து: இரு இந்திய மாணவர்கள் உயிரிழப்பு
இந்தியாவின் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் கனடாவில் விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளனர். கனடாவில் கடந்த 18 ஆம் திகதி அதிகாலை ரெஜினாவில் இருந்து கார்லைல் வழியாக ஸ்டெய்ன்பாக், மனிடோபா வரை இரவு நேர பயிற்சியை மேற்கொண்ட போது சஸ்காட்சுவான் அருகே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமான விபத்தில் பயணம் செய்த இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்துள்ள மாணவர்கள் இந்தியாவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச்…
-
கனடாவில் சிறுவனிடம் மோசமாக நடந்த இலங்கையர் கைது
கனடாவில் சிறுவன் ஒருவனை துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 16 வயது சிறுவனை தகாத முறையில் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 62 வயதான இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வந்த சம்பத் பெரேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மருந்தகத்தில் பணியாற்றிய 16 வயது சிறுவன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக…
-
பியர்சன் விமான நிலைய கொள்ளைச் சம்பவ வழக்கிலிருந்து ஒருவர் விடுதலை
பியர்சன் விமான நிலைய கொள்ளைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர் ஒருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கனடா விமான நிலையமொன்றிலிருந்து 400 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் விலக்கிக்கொண்டுள்ளார்கள். 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டன. கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், தக்க ஆவணங்களுடன்…
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவுக்கு அழைப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக இணைய கனடாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி வரவேற்பு தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக இணைவதற்கு கனடாவுக்கு நேற்று (17) அந்த அமைப்பின் தலைவர் உருசுலா வொன் டெர் லெயன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வரும் கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, முதல் இணை உறுப்பினராக இணையுமாறு…
-
ஏடிஎம் இயந்திரத்தைத் தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: கமெராவில் சிக்கிய காட்சி
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரம் ஒன்றையே கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், கொள்ளையர்கள் இருவர் ஏடிஎம் இயந்திரம் ஒன்றைத் தூக்கிச் சென்றுள்ளனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Ladysmith என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முகமூடியும் கையுறைகளும் அணிந்த இருவர், அந்த ஏடிஎம் இயந்திரத்தை சங்கிலி மூலம் தங்கள் ட்ரக்குடன் இணைத்து, இழுத்துப் பெயர்த்து, தங்கள் ட்ரக்கில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர். கொள்ளைச் சம்பவத்தில்…
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவிற்கு அழைப்பு
கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக அழைக்கப்படவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது 27 உறுப்பினர் நாடுகளுக்குள், கனடாவை முதல் இணை உறுப்பினராக (Associate Member) அழைக்கத் தீர்மானித்துள்ளது. இந்த அறிவிப்பை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லெயன், பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் நடைபெற்ற ‘State of the Union’ உரையில் வெளியிட்டார். கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்த உரையில் கலந்து கொண்டார். அவர், கனடா முழுமையான உறுப்பினராக விரும்பவில்லை என்றாலும், பாதுகாப்பு…
-
ஒன்ராறியோவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவுக்கான இணை அமைச்சர் நியமனம்
ஒன்ராறியோவின் முதலாவது செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுத் துறைக்கான இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டுவினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்புக்கும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான அவரது பங்களிப்பிற்கும் கொடுக்கப்பட்ட அங்கீகாரம் என்றும், இந்தப் புதிய அமைச்சகம், தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகின்றன என்றும் கூறப்படுகின்றது. அத்துடன், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், எதிர்கால சிறந்த வாய்ப்புகளுக்குத் தயாராகவும் ஒன்ராறியோவுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் தலைவர்கள் தேவை…