Category: கனடா செய்திகள்

  • கனடாவை தண்டிக்கப் போவதாக எச்சரித்த ட்ரம்ப்

    காட்டுத்தீ விவகாரத்தில் கனடாவை தண்டிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, அமெரிக்காவின் வடக்கு பகுதிகள் புகை மூட்டத்தில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கனடாவிற்கு எதிராக “தண்டனை நடவடிக்கை” எடுக்கப் போவதாக மீண்டும் எச்சரித்துள்ளார். Air Force One விமானத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “நான் முடிவு செய்துவிட்டேன். நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள். கனடா கட்டாயம் விலை செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். ட்ரம்ப், கடந்த…

  • உலக நாடுகள் பலவற்றின் கவனம் ஈர்த்துவரும் ஜேர்மன் கப்பல்

    ஜேர்மன் போர்ப்பயிற்சிக் கப்பல் ஒன்று உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துவருகிறது. ஜேர்மன் போர்ப்பயிற்சிக் கப்பல் ஒன்று உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துவரும் நிலையில், தற்போது அந்தக் கப்பல் கனடா வந்தடைந்துள்ளது. கனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்திலுள்ள ஹாலிஃபாக்ஸ் நகரம் நிறுவப்பட்டதன் நினைவாக, ஒவ்வோராண்டும், ஆகத்து மாதத்தின் முதல் திங்கட்கிழமையில், Natal Day என்னும் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அன்று விடுமுறை தினம் என்பதால் வார இறுதியில் மக்கள் ஹாலிஃபாக்ஸ் துறைமுகத்தில் குவிந்துள்ளார்கள். அவர்களுக்கு சுவாரஸ்யம்…

  • கனடாவில் காணாமல் போகும் பூச்சி வகைகள்

    கனடாவில் ஆயிரக்கணக்கான பூச்சி வகைகள் உள்ளன, அவற்றில் சில மனிதர்களுக்குப் பயனுள்ளவையாகவும், சில தொல்லை தருபவையாகவும், மற்றவை சுற்றுச்சூழல் சமநிலைக்கு அவசியமானவையாகவும் இருக்கின்றன. கனடாவின் யார்க் பல்கலையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் ஹடில் எல்சயத் (Hadil Elsayed) என்னும் மாணவி, பாதுகாக்கப்பட்ட இரண்டு இடங்களில் பூச்சிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டுவருகிறார். அப்போது, 1990களில் இருந்ததைவிட, பூச்சிகளின் எண்ணிக்கை தற்போது பாதியாகக் குறைந்துள்ளதை அவர் கண்டறிந்துள்ளார். இந்த கண்டுபிடிப்பு கனடாவில் மட்டுமல்ல, பிரித்தானியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து…

  • ஏழு நிமிடங்களில் ரூ. 15 கோடி மதிப்பிலான பிட்காயிணைப் பறிகொடுத்த கனேடியர்

    கனேடியருக்குச் சொந்தமான 1.6 மில்லியன் டொலர் மதிப்பிலான பிட்காயின் மாயம் கனேடியத் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ரூ 15 கோடி மதிப்பிலான பிட்காயின்கள் ஏழே நிமிடங்களில் கொள்ளைப்போன சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Coldcard வன்பொருள் வாலட்களுடன் (hardware wallets) தொடர்புடைய பாதுகாப்பு மீறல் ஒன்று கிரிப்டோகரன்சி சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமார் 1,367.05 பிட்காயின்கள் (BTC) திருடப்பட்டிருக்கலாம் என்று பிளாக்செயின் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். பாதுகாப்பு மீறல் நடத்தியவர்கள், வாலட்டின் ‘சீட் ஃப்ரரேஸ்’ (seed phrase)…

  • கனடா டிம்மின்ஸ் நகரில் 1 நாளில் இரு கொலைகள் !

    கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள டிம்மின்ஸ் நகரில், சுமார் 24 மணி நேர இடைவெளியில் இரண்டு வெவ்வேறான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரு சம்பவங்களும் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்றும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதல்களே காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜூலை 31-ஆம் திகதி அதிகாலை 1:00 மணியளவில், ‘பால்சம் வீதி வடக்கு’ பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தீவிர…

  • நாய்க் குட்டிகளை மீட்கச் சென்ற தன்னார்வலர் நாய்களால் கடியுண்டு பலி

    தெருவில் தவிக்கும் விலங்குகளின் துயரம் கண்டு உருகும் நெஞ்சங்களும், அவற்றைக் காக்கத் துடிக்கும் கரங்களும் தான் இந்த உலகை இன்னும் மனிதநேயத்துடன் இயங்க வைக்கின்றன. ஆனால், அதே ஜீவன்களைக் காப்பாற்றச் சென்ற ஒரு இளம் பெண்ணின் உயிர், அதே மிருகத்தனமான தாக்குதலுக்குப் பலியாகிப்போன சோகம் கனடாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதான அமண்டா நோபிஸ் விலங்குகள் மீது அளவில்லா அன்பு கொண்ட ஒரு தீரமிக்க ஆர்வலர். ‘K9 அட்வகேசி மணிட்டோபா’ அமைப்பில் தன்னார்வலராகச் செயல்பட்டு வந்த அமண்டா,…

  • கனடாவில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் பாதிப்பு!

    கனடாவில் தொடர்ச்சியாக நிலவி வரும் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பணவீக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து வருகிறது. இந்நிலையில், ‘நாரடிவ் ரிசர்ச்’ அமைப்பினால் நடத்தப்பட்ட புதிய தேசிய அளவிலான ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 76 சதவீதத்தினர், உணவு மற்றும் மளிகைப் பொருட்களின் அதிகப்படியான விலையேற்றமே தங்களது குடும்பப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 47 சதவீதத்தினர் எரிபொருள் விலையேற்றத்தை இரண்டாவது பெரிய நிதி நெருக்கடியாகக் குறிப்பிட்டுள்ளனர்.…

  • படகு விபத்தில் காணாமல் போன ரொறன்ரோ தம்பதியின் உடல்கள் மீட்பு!

    கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு மோதல் விபத்தொன்றில் காணாமல் போயிருந்த இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ரொறன்ரோவைச் சேர்ந்த 32 வயது ஆண் மற்றும் 30 வயது பெண் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு 10:40 மணியளவில், பேக்கன்ரிக் பே பகுதிக்கு அருகிலுள்ள ரொசோ ஏரியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்தபோது, பலத்த சேதமடைந்த நிலையிலிருந்த படகு ஒன்று பாறை…

  • அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்கு சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை

    அமெரிக்க மாகாணமொன்றிற்குப் பயணிக்கும் கனேடியர்களுக்கு கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் ஒட்டுண்ணித் தொற்று பயங்கரமாக பரவி வருகிறது. ஜுலை 30 வரையிலான காலகட்டத்தில், மிச்சிகன் மாகாணத்தில், 10,700க்கும் அதிகமானவர்களுக்கு இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சைக்ளோஸ்போரியாசிஸ் கிருமித் தொற்றை ஏற்படுத்தக்கூடியது சைக்ளோஸ்போரா என்னும் கிருமி ஆகும். உணவு மற்றும் குடிநீர் வழியாக மட்டுமே பரவும் இந்த சைக்ளோஸ்போரா என்னும் கிருமி, வயிற்றுப்போக்கு, வயிறு வீக்கம்,…

  • கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு இடம்மாற்றப்பட்ட பாரிய திமிங்கிலங்கள்

    கனடாவின் ஒன்டாரியோவில் நயாகரா அருவிப் பகுதியில் உள்ள மரைன்லேண்ட் கடல் பூங்காவில் இருந்து நான்கு பெலூகா திமிங்கிலங்கள், அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள மீன் காட்சியகத்துக்கு பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டன. மேலும் இரண்டு திமிங்கிலங்கள் டெக்சாசில் உள்ள சான் ஆன்டோனியோ கடல் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. மரைன்லேண்ட் கடல் பூங்கா மூடப்பட்டதையடுத்து, அங்கிருந்த 30 பெலூகா திமிங்கிலங்களை மீட்கும் சர்வதேச முயற்சியின் முதல்கட்டமாக ஆறு திமிங்கிலங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. மீதமுள்ள திமிங்கிலங்கள், ஜோர்ஜியா, சான் டியாகோ, ஸ்பெயின் ஆகிய இடங்களில்…