Category: உலக செய்திகள்
-
ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு
ஜப்பானில் கியூஷு தீவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (28) அதிகாலை ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் அந்நாட்டில் பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்போது 10 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பூமிக்கு…
-
”X Money’ ‘ சேவையை அறிமுகப்படுத்தியது ‘X’ நிறுவனம்
அமெரிக்காவில் எலான் மஸ்கின் ‘X’ நிறுவனம் தனது புதிய டிஜிட்டல் வங்கிச் சேவையான ‘X Money’யை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சேவையின் மூலம், பயனர்கள் ‘X’ செயலியிலேயே நேரடியாக பணம் அனுப்பவும், மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பில்களைச் செலுத்தவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகத் தளமாக மட்டுமல்லாமல், அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் ‘Everything App ஆக ‘X’ செயலியை மாற்றும் நோக்கில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
முன்னாள் காதலிக்கு 860 கோடி சொத்து எழுதிய எப்ஸ்டீன்!
அமெரிக்க பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தனது உயிலில், அவரது கடைசி காதலியான கரினா ஷூலியாக் என்ற பல் மருத்துவருக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை எழுதி வைத்துள்ளதாக புதிய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீனின் வழக்குப் பதிவுகள் மற்றும் உயில் ஆவணங்கள் (Epstein Files) மூலம் இந்த விபரங்கள் அம்பலமாகியுள்ளன. சொத்துக்களுடன் சேர்த்து, திருமண ஒப்பந்தத்தின் அடையாளமாக 33 காரட் வைர மோதிரம் ஒன்றையும் கரினாவுக்கு எப்ஸ்டீன் வழங்கியுள்ளார்.…
-
அமெரிக்க படைகள் மீது ஈரான் திடீர் ஏவுகணைத் தாக்குதல்
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைகள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டதாக, அமெரிக்க மத்தியப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. ஈரான் போர் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. முன்னதாக வெள்ளை மாளிகை வந்த நெதன்யாகுவை டிரம்ப் வரவேற்றார். இந்த சந்திப்பு நடந்த சில மணி நேரத்தில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை…
-
ட்ரம்ப்பும்- ஸெலென்ஸிகியும் நடத்திய சந்திப்பு
யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு மிகவும் நல்ல சந்திப்பாக அமைந்ததாக ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இரண்டு தலைவர்களுக்கும் இடையே முன்னர் சுமுகமாக இல்லாதிருந்த உறவு, அண்மைய மாதங்களில் கணிசமாக மேம்பட்டுள்ளது என்பதை இந்தச் சந்திப்பு வெளிப்படுத்தியுள்ளது. யுக்ரைனில் பேட்ரியாட் வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணைகளை உற்பத்தி செய்வதற்கான உரிமங்கள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து…
-
ஈரானின் அணுசக்தி நிலையம் தொடர்பில் கலந்துரையாடிய ட்ரம்ப்-நெதன்யாகு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். வழக்கம் போல் ஊடகங்கள் முன்பாக அல்லாமல், மூத்த அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு நேர்மறையானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதிகாரிகள் இன்றி இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் புதிய இரகசிய அணுசக்தி நிலையம் பிகாக்ஸ் மலை பகுதியில் அமைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுவது குறித்து இரண்டு தலைவர்களும் கலந்துரையாடினர். இந்தநிலையில்…
-
சீன ரொபோக்களுக்கு தடையை விதித்த ட்ரம்ப்
அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், முக்கிய தொழில்களை உள்நாட்டிலேயே வளர்ப்பதை இலக்காகக் கொண்டும், புதிய சீன ரோபோக்கள் மற்றும் பவர் இன்வெர்ட்டர்களின் இறக்குமதியை ட்ரம்ப் நிர்வாகம் தடை செய்துள்ளது. இதன்படி, புதிய மனித வடிவிலான மற்றும் நான்கு கால் ரோபோக்கள் அத்துடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்கலங்களை மின் கட்டமைப்புடன் இணைக்கும் இணைக்கப்பட்ட பவர் இன்வெர்ட்டர்களின் இறக்குமதியை மத்திய தொலைத்தொடர்பு ஆணைக்குழு தடை செய்துள்ளது. இந்தச் சாதனங்கள் மூலம் தரவு திருட்டு, சைபர் தாக்குதல்கள் மற்றும்…
-
கென்யாவில் ஒரே இடத்தில் 14 யானைகளின் உடல்கள்: விசாரணைகள் ஆரம்பம்!
தெற்கு கென்யாவில் உள்ள அம்போசெலி தேசியப் பூங்காவிற்கு அருகில் 14 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்தமை குறித்து அவசர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இறப்புகளுக்கு நோய், விஷம் அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க, நிபுணர்கள் யானைகளின் உடல்களை ஆய்வு செய்து வருவதாகவும், திசு மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கென்யா வனவிலங்கு சேவை தெரிவித்துள்ளது. இந்தப் பூங்காவும் அதன் சுற்றுப்புறங்களும் ‘அம்போசெலி சுற்றுச்சூழல் அமைப்பு’ என்று அழைக்கப்படுகின்றன. இது தான்சானியாவுடனான எல்லையை ஒட்டியுள்ள ஒரு…
-
இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை அதிகரித்துள்ள ஜேர்மனி
ஜேர்மனி, 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதி அனுமதியை சுமார் 800 மில்லியன் யூரோக்களாக கணிசமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 20 மாதங்களில் வழங்கப்பட்ட மொத்த அனுமதிகளை விட அதிகமாகும் என்று ஜேர்மன் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஏற்றுமதி அனுமதிகளில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பு, ஒரு பெரிய கடற்படை கப்பல் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது TKMS நிறுவனம் தயாரித்த, அணு திறன் கொண்ட INS Drakon வகை நீர்மூழ்கிக்…
-
அமெரிக்க-இஸ்ரேல் போரில் 350 அரசு ஊழியர்கள் பலி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுடன் நடந்து வரும் போரில், ஈரானைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரான் அரசாங்கத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் பாத்திமா மொஹாஜிரானி ((Fatemeh Mohajerani)) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், தென்மேற்கு ஈரானில் உள்ள புஷெர் (Bushehr) விமான நிலையம் அமெரிக்கத் தாக்குதலால் செயலிழக்கச் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டு புதிதாக வாங்கப்பட்ட விமானம்…