Category: உலக செய்திகள்

  • கொங்கோ குடியரசில் எபோலா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    கொங்கோ ஜனநாயக குடியரசில் எபோலா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,200 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,405 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய பரவலுக்கு மனிதர்களைப் பாதிக்கும் எபோலா வகைகளில் மிகவும் அரிதான ‘புந்திபுகியோ’ (Bundibugyo) வகை வைரஸே காரணமாகும். இந்த குறிப்பிட்ட வகைக்கு உலகளாவிய ரீதியில் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேக சிகிச்சைகளோ கண்டறியப்படவில்லை. இது நோய் தடுப்புப் பணிகளில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த வைரஸ் அண்டை நாடான உகாண்டா மற்றும் லைபீரியா போன்ற…

  • ஜப்பானில் 7.1 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    ஜப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கியூஷு தீவின் குமாமோட்டோ  மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடற்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்டிருந்தது. கடலோரப் பகுதிகளில் 1 மீட்டர் (3.28 அடி) உயரத்திற்கு ராட்சத அலைகள் எழக்கூடும் என்பதால் அவசர சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. ஒரு வணிக…

  • ‘தி ஒடிஸி’ படத்தின் தாக்கம்; அதிரடி முடிவெடுத்த கிறிஸ்டோபர் நோலன்!

    புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்குவதில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் இயக்கத்தில் கடந்த 17ஆம் தேதி ‘தி ஒடிஸி’ படம் வெளியாகியிருந்தது. இப்படம் கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய புகழ்பெற்ற காப்பியங்களில் ஒன்றான ‘தி ஒடிஸி’ என்ற புராணக் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த கதை ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முன்பு போருக்குப் பிந்தைய ஒரு வீரனின் நாடு திரும்புதலை மையமாகக் கொண்டது. இப்படம் முதல் முறையாக ஒட்டுமொத்த படம்…

  • பேபி பவுடர் புற்றுநோய் குற்றச்சாட்டு வழக்குகள் : 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கும் ஜொன்சன் ரூ ஜொன்சன்!

    ஜொன்சன் ரூ ஜொன்சன் (Johnson & Johnson) நிறுவனம் தனது பேபி பவுடர் மற்றும் டால்கம் தயாரிப்புகளால் கருப்பை புற்றுநோய் Ovarian Cancer) ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட பல்லாயிரக்கணக்கான வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள சுமார் 69,000 வழக்குகளில், 95 சதவீதத்திற்கும் அதிகமான மனுதாரர்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. J&J நிறுவனத்தின் டால்க் (Talc) அடிப்படையிலான பேபி பவுடர் பயன்பாடு புற்றுநோயுடன் தொடர்புடையதாக பல…

  • ஜப்பானில் இணையத்தில் பிரபலமான ‘மங்கி பஞ்ச்’ தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடியது

    இணையத்தில் பிரபலமடைந்த ஜப்பானிய மக்காக்  இனக் குரங்கான (‘பஞ்ச்’ Punch marked),  ஜூலை 26, 2026 அன்று தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடியது. இதையொட்டி உலகம் முழுவதிலுமிருந்து 2,500-க்கும் மேற்பட்ட பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள் அதற்கு வந்து சேர்ந்தன. டோக்கியோவிற்கு அருகிலுள்ள இச்சிகாவா நகர விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்காவில் வசிக்கும் இந்தக் குரங்கிற்கு வந்த அந்த ஏராளமான கடிதங்கள், அங்கு இதற்கென ஒதுக்கப்பட்ட ஒரு சிறப்புப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பஞ்ச் தனது தாயால் கைவிடப்பட்ட பிறகு…

  • பிரான்சில் உக்கிரமடையும் காட்டுத்தீ

    பிரான்சின் தென்மேற்கு பகுதியிலுள்ள Bordeaux  நகரில் உக்கிரமடைந்து வரும் காட்டுத்தீ தொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவெல் மெக்ரோன் இடர் அமைச்சரவை கூட்டத்தை நடத்தியுள்ளார். அதிக உஷ்ணம் காரணமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் பாரிய சிரமம் ஏற்ப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவின் பல இடங்களில் காட்டுத் தீ அபாயம் அதிகரித்துச் செல்கிறது. இதில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளிலும் அனர்த்தம் காரணமாக இதுவரை 330,000 மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறியுள்ளமை…

  • இங்கிலாந்து அரசு – 3 இந்தியர்களுக்கு அமைச்சர் பதவி!

    இங்கிலாந்து பிரதமராக எண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, இதன் ஒருபகுதியாக, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 3 இந்திய வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் இங்கிலாந்து நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) துறை அமைச்சராக கனிஷ்கா நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களுடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அது தொடர்பான நிர்வாகப் பணிகளைக் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமத்துவத் துறை அமைச்சராக சத்வீர்…

  • கிழக்கு நேபாளத்தில் வன்முறை-ஒருவர் உயிரிழப்பு

    கிழக்கு நேபாளத்தில் நேற்றிரவு (26) இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கடும் மோதல், வன்முறையாக மாறியதையடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் 24 வயது மதிக்கத்தக்க ஓம் பிரகாஷ் மேத்தா என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு இன்று (27) காலை 7 மணி முதல் அப்பகுதியில் காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், மறுஉத்தரவு வரும் வரை இந்த ஊரடங்கு தொடருமென…

  • ஹோர்முஸ் நீரிணை – ஈரான் ஓமன் இடையே பேச்சுவார்த்தை

    ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் அதன் போக்குவரத்து நிர்வாகம் தொடர்பாக ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட இருதரப்பு பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ராணுவ மோதல்களுக்கு மத்தியில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சர்வதேச கடல்வழிப் பாதையின் பாதுகாப்பை உறுதி செய்ய இரு நாடுகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன இந்தப் பேச்சுவார்த்தை முற்றிலும் ஈரான் மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான தனிப்பட்ட விஷயம் என்றும், இதில்…

  • அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

    அமெரிக்க நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை சியாட்டில் நகரில் உள்ள ஸ்பேஸ் நீடில் அருகே உள்ள அரங்கு ஒன்றில் உணவுத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் உள்ளே புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார். இதில் இரண்டு பேர் பலியாகினர். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில், சிறு குழந்தை ஒருவர் உட்பட மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர் மற்றும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம்…