Category: உலக செய்திகள்
-
தன்னை கொலை செய்ய பணம் கொடுத்த பெண்
பொதுவாக தனக்கு பிடிக்காத ஒருவரை கொலை செய்வதற்கு ஒருவர் மற்றொரு கூலிப்படை வைப்பது பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கிலாந்தில் வசித்து வந்த ஒரு பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்வதற்கு அவரே பணம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தை சேர்ந்த 32 வயது பெண் சோனியா. இவர் ஒரு பள்ளியில் இசை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களில் ஆன்லைன் வழியாக 53 வயது நபர் ஒருவர் பழக்கமாகியிருக்கிறார்.…
-
மகள் தேர்ந்தெடுத்த எண் – லொட்டரியை வென்ற அப்பா
சென்னையைச் சேர்ந்த 44 வயதான கஜினிமுகமது பஹருதீன், கடந்த 24 ஆண்டுகளாக குடும்பத்துடன் ஷார்ஜாவில் வசித்து வருகிறார். இவர் 2019 முதல், கடந்த 7 ஆண்டுகளாக பிக் டிக்கெட் லொட்டரி வாங்கி வருகிறார். பொதுவாக லொட்டரி எண்களைத் தாமாகத் தேர்ந்தெடுக்கும் கஜினிமுகமது, இந்த ஜூலை மாத குலுக்கலுக்காகத் தனது 2 வயது மகள் தேர்ந்தெடுத்த எண்களைக் கொண்டு லொட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். மகளின் அதிர்ஷ்ட எண்ணே இவருக்கு இந்த பெரிய பரிசுத் தொகையைப் பெற்றுத் தந்துள்ளது.இந்த எதிர்பாராத…
-
இந்தியா, சீனா மீது 100 சதவீத வரி!.. அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது!..
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பொறுப்பேற்ற பின் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு அதிக அளவு இறக்குமதி வரிகளை விதித்தார். ஒருகட்டத்தில் வரிகளை ஏற்றிக்கொண்டே போனார். ஆனால், டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் கண்டித்தது. அதன்பின் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இந்தியாவுக்கான இறக்குமதி வரியை டிரம்ப் குறைத்தார். இந்நிலையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்…
-
ஆகஸ்ட் 12 முழு சூரிய கிரகணம்: நேரலை செய்கிறது நாசா!
பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே தென்படவுள்ள அபூர்வ முழு சூரிய கிரகண நிகழ்வைஇ உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்க்கும் வகையில் நாசா நேரலை செய்யவுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 12-ஆம் திகதி இந்த முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இந்த முழு சூரிய கிரகணத்தை நேரடியாகப் பார்வையிட முடியும். எனவே, இந்த விண்வெளி நிகழ்வை நேரடியாகப் பார்க்க முடியாத உலகெங்கிலும் உள்ள மக்கள்…
-
ஹவாயில் தீவிரமடையும் இயற்கைச் சீற்றம்!
அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் அமைந்துள்ள, உலகின் மிகவும் செயலில் உள்ள எரிமலைகளில் ஒன்றான கிலாவுவே (Kīlauea) மீண்டும் சீற்றமடைந்துள்ளது. எரிமலையின் துளையிலிருந்து சுமார் 500 அடி உயரம் வரை எரிமலைக் குழம்பு (லாவா) பீறிட்டு வெளியேறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிமலைச் செயல்பாடு தொடர்ந்து நீடித்து வருவதால், அப்பகுதியில் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், எரிமலையின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து…
-
இஸ்ரேல் -காஸா போரில் 60,000 குழந்தைகளின் பெற்றோர்கள் உயிரிழப்பு
காஸா மீதான இஸ்ரேலின் போரில், இதுவரை சுமார் 60,000 பலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில், கடந்த 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, காஸா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை 73,000-க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 2023 ஒக்டோபர் முதல் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 60,737 குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாக,…
-
ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் மீது சக்திவாய்ந்த தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஜோர்டானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த கப்பல்கள் மீது செவ்வாய்க்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா இணைந்து நடத்தியதாக அறிவிக்கப்பட்ட முதல் வெளிப்படையான கூட்டுத் தாக்குதல்களின் பின்னர்,…
-
24 மணி 24 நிமிடங்கள் தொடர்ச்சிப் பயணம் – குவாண்டஸ் புதிய சாதனை
உலகின் நீண்ட தூர விமான சேவை வழங்கும் முயற்சியாக, தொடர்ந்து 24 மணிநேரம் 24 நிமிடங்கள் எயார்பஸ் விமானத்தை பறக்க விட்டு அவுஸ்திரேலியாவின் குவாண்டஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வணீக ரீதியிலான இந்த எயார்பஸ் ஏ350 ரக விமானம். கடந்த கடந்த 27ஆம் திகதி மாலை 5.27 மணிக்கு மெல்போர்னில் இருந்து புறப்பட்டு. நேற்று (28) மாலை பிரான்சின் டுலூஸ் நகருக்கு சென்றடைந்தது. மெல்போர்னில் இருந்து புறப்பட்டு. பசிபிக் பெருங்கடல். அமெரிக்கா. கனடா மற்றும்…
-
வன்முறையில் ஈடுபட்ட இருவருக்கு பொது வெளியில் தூக்கு தண்டனை
ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு நபர்களுக்கு நேற்று (28) பொதுவெளியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அபோல்ஃபாஸ்ல் செபாஹி மற்றும் அமீர்-ஹொசைன் சபாஹி ஆகிய இருவரும் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி பொலிஸ்அதிகாரிகளை ஆயுதங்களால் தாக்கி, பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து கொலை செய்ததாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பொதுவெளியில் ஆயுதங்களை ஏந்தி அச்சத்தை உண்டாக்கியது, நாட்டின் பொது ஒழுங்கையும் அமைதியையும் சீர்குலைத்தது மற்றும்…
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் – ட்ரம்ப் திட்டவட்டம்
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ம் திகதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலை உயர்ந்தது. இதையடுத்து. இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால். ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு…