Category: உலக செய்திகள்
-
நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 34 பேர் பலி…
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் நிலக்கரி சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால், தொழிலாளர்கள் அனைவரும் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த சுரங்க வெடி விபத்தில் சிக்கி 34 பேர்…
-
மகாராஷ்டிரா விபத்து – 9 பேர் உயிரிழப்பு – தொடரும் மீட்புப் பணி!
மகாராஷ்டிரா மாநிலம் ( தானே) மாவட்டத்தில் உள்ள பிவண்டியில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (30) இரவு 11:00 மணி முதல் 11:30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், பிவண்டியில் அமைந்துள்ள ‘கோஹினூர்’ கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. 48 அறைகளைக் கொண்ட இந்த 4 மாடிக் கட்டிடம் ஏற்கனவே மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால், இதனைப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தக் கூடாது (குடியிருப்புக்குத் தகுதியற்றது)…
-
பாக்கிஸ்தான் பனிச்சரிவு – பிரபல மலையேற்ற வீரர் நிம்ஸ் டாய் உட்பட 10 பேர் மாயம்!
வட பாக்கிஸ்தானில் உள்ள காரகோரம் மலைத்தொடரில், உலகின் 12ஆவது மிக உயர்ந்த சிகரமான ‘பிராட் பீக்’ (8,047 மீட்டர் உயரம்) மலையில் நேற்று ( 30) ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா (நிம்ஸ் டாய்) தலைமையிலான 10 பேர் கொண்ட சர்வதேச மலையேற்றக் குழு மாயமாகியுள்ளது. ஆல்பைன் கிளப் ஆஃப் பாகிஸ்தான் அமைப்பின் துணைத் தலைவர் கர்ரார் ஹைதரி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காணாமல் போன குழுவில் பின்வருவோர்…
-
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் வடகொரிய ஏவுகணை!
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் வடகொரியா தயாரித்த பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஷ்யா மீண்டும் வடகொரிய ஆயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா ஒரே நாளில் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் 280-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைனின் 10 பிராந்தியங்களில் இந்தத் தீவிரத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த…
-
போரினால் முடங்கிய காசா வைத்தியசாலைகள் – ஆபத்தான நிலையில் நோயாளிகள்
காசாவில் தொடர்ந்து நீடிக்கும் போர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் பற்றாக்குறை காரணமாக, அங்குள்ள சுகாதார அமைப்பு முற்றிலும் சீர்குலைந்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளன. இதனால் டயாலிசிஸ் நோயாளிகள், உறுப்பிழந்தவர்கள் மற்றும் காயங்களிலிருந்து மீண்டு வருபவர்கள் உயிர்காக்கும் வைத்தியக் கவனிப்பு இன்றி தவித்து வருகின்றனர். காசா நகரத்தில் உள்ள அல்-ஷிஃபா வைத்தியசாலையின் டயாலிசிஸ் பிரிவில், நோயாளிகள் வரிசையாக அமர்ந்து பல மணிநேர சிகிச்சையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். வடக்கு காசாவின் ஜபாலியாவைச் சேர்ந்த 14 வயது…
-
செயற்கை சூரியனை தயாரித்து சோதித்து பார்த்த சீனா.. வரலாற்று சாதனை..
செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீனா ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது. சுத்தமான மற்றும் எல்லையற்ற ஆற்றலை உருவாக்கும் அணுக்கரு இணைவு திட்டத்திற்காக உலகின் மிகப்பெரிய அதிவிம்மின் கடத்துத்திறன் கொண்ட காந்தத்தை சீனா வெற்றிகரமாக தயாரித்து சோதித்துள்ளது. சுமார் 2030 ஆம் ஆண்டுக்குள் இணைவு ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் இலக்கை நோக்கி சீனா உறுதியாக முன்னேறி வருகிறது. சீன அறிவியல் அகாடமியின் பிளாஸ்மா இயற்பியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான டி- வடிவ காந்தம், 21…
-
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் – சிறுமிகள் இருவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு!
ரஷ்யா ஒரு ‘பெரும் தாக்குதலுக்கு’ தயாராகி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று (29) எச்சரித்திருந்த நிலையில், இன்று (30) அதிகாலை இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனிலேயே தயாரிக்க அனுமதி பெறுவதற்காக, இந்த வாரம் வொஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஜெலென்ஸ்கி நேரில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இத்தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய சக்திவாய்ந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள்…
-
ஒரு எறும்பு 21 ஆயிரம்!.. கென்யாவிலிருந்து கடத்திய சீனருக்கு சிறை தண்டனை!…
விமானம் மூலம் ஆமைகள் உள்ளிட்ட உயிரினங்கள் கடத்துவது தொடர்பான பல செய்திகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் கென்யாவிலிருந்து சீனாவுக்கு எறும்புகளை கடத்திய ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த மார்ச் 10ஆம் தேதி கென்யாவின் நைரோபியின் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குயின் கார்டன் என அழைக்கப்படும் ராணி எறும்புகளை கடத்திய ஜான் என்கிற நபர் பிடிபட்டார்.எறும்புகளை கடத்திய ஜானுக்கு 8000 அமெரிக்க டாலர் அபராதமாக விதிக்கப்பட்டதோடு ஒரு வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.. கென்யாவை…
-
8000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் உலகப்புகழ் பெற்ற BMW கார் நிறுவனம்
உலகப் புகழ்பெற்ற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபுள்யூ, வரும் 2027ம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் தனது சுமார் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. மின்சார வாகன தயாரிப்புக்கான தாங்க முடியாத செலவுகள், சீன நிறுவனங்களிடமிருந்து எழும் கடுமையான போட்டி மற்றும் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஜெர்மனியின் வாகனத்துறை தற்போது வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஏற்கனவே வோக்ஸ்வேகன் மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும்…
-
ஈரானை பாராட்டும் புதின்!…
ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதத்தில் போரை தொடங்கின. நான்கு மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில் அமெரிக்காவுக்கு ஈரானுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் ஹார்மூஸ் நீரிணை வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை ஈரான் தாக்கியதால் கோபமடைந்த அமெரிக்கா ஈரானின் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியது. ஆனால், கடந்த 2 வாரங்களுக்கும் மேல்…