Category: உலக செய்திகள்

  • மேற்கு நேபாளத்தில் நிலநடுக்கம்

    மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் இன்று (03) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 4.4ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, லும்பினி மாகாணத்தில் உள்ள ரோல்பா மாவட்டத்தின் இரிவாங் கிராமப்புற பகுதியில் அதிகாலை 3.07 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. சல்யான், ருகும் மற்றும் பியூதன் மாவட்டங்கள் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என்று தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும்…

  • மனிதர்களுக்கான ப்ரிட்ஜ் – ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு

    உலகம் முழுவதும் கோடை வெயில் சாதனை அளவை எட்டி வரும் நிலையில், வெளியில் கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களைக் காக்கும் வகையில் ஜப்பான் நிறுவனம் ஒன்று “மனிதர்களுக்கான ஃப்ரிட்ஜ்” என்ற புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடுமையான வெப்பத்தில் வேலை செய்பவர்கள் இந்தச் சிறிய அறை போன்ற சாதனத்திற்குள் சென்ற சில வினாடிகளிலேயே அவர்களின் உடல் வெப்பநிலை கணிசமாகக் குறைந்துவிடுகிறது. கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் வெப்ப பக்கவாதம் போன்ற ஆபத்துகளில் சிக்காமல் இருக்க இது பெரிதும் உதவும் எனத்…

  • அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்: திட்டமிட்ட தாக்குதலை இரத்து செய்தார் டொனால்ட் ட்ரம்ப்!

    ஈரான் மீது மேற்கொள்ளவிருந்த பிரம்மாண்ட தாக்குதலைக் தற்காலிகமாக இரத்து செய்துள்ளதாக அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் அரசுடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை இன்று (03) திங்கள்கிழமை பிற்பகல் ஆரம்பிக்கும் எனத் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தத்தை எட்டுவதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து, ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை நிறுத்தி…

  • “ஒவ்வோர் ஊழியரும் AI மூலம் பயனடைவது உறுதிசெய்யப்படும்”

    சிங்கப்பூரில் ஒவ்வோர் ஊழியரும் AI தொழில்நுட்பத்தின்வழி பயனடைவதை உறுதிசெய்யவிருப்பதாக தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸின் தேசிய தினச் செய்தியை அதன் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் இன்று வெளியிட்டார். CTC எனும் நிறுவனப் பயிற்சிக் குழு மானியத்தைப் பெற்ற திட்டங்களில் சுமார் 30 விழுக்காடு AI தொடர்பான திட்டங்கள் என்று கூறப்பட்டது. மானியத்தின்மூலம் இதுவரை 15,000 ஊழியர்கள் பயன்பெற்றுள்ளனர். ஊழியர்களின் வயது அல்லது வேலைத் தகுதி எதுவாக இருந்தாலும் AI மூலம் அவர்கள் பலன்பெற…

  • “விரும்பியே சென்றேன்”- கம்போடியா சென்ற சிங்கப்பூர்ப் பெண்

    சிங்கப்பூரில் காணாமல்போய்க் கம்போடியாவில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்ட 20 வயதுப் பெண் தானே விருப்பப்பட்டு அங்குச் சென்றதாகக் கூறியுள்ளார். மோசடி அல்லது குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட யாரும் தன்னை வற்புறுத்தவில்லை என்றும் அவர் சொன்னார். சிங்கப்பூரில் ஆயிஷா சிரேகர் (Aishah Siregar) செவ்வாய்க்கிழமை (28 ஜூலை) காணாமல் போனார். பள்ளிக்குச் செல்வதாகக் கூறிய அவர் கம்போடிய விமானத்தில் ஏறினார். மோசடிக்காரர்கள் அவரைக் கம்போடியாவுக்கு அழைத்திருக்கலாம் என்று அஞ்சிய குடும்பத்தார் காவல்துறையிடம் புகார் அளித்தனர். கம்போடிய அதிகாரிகள் பின்னர் ஆயிஷாவைப்…

  • ஈரானில் கடந்த ஆண்டில் 1,600 பேருக்குத் தூக்கு

    இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகச் சொல்லி இரண்டு ஆடவர்களை ஈரான் தூக்கிலிட்டுள்ளது. அவர்கள் ஒமீத் பெஹ்சாத் (Omid Behzad); பௌரியா சஃப்வத் (Pouria Safvat) ஆவர். ஈரானின் முக்கிய ராணுவத் தளங்கள் எங்கு இருக்கின்றன என்ற தகவல்களை அவர்கள் மொஸாட் (Mossad) உளவுச்சேவை அதிகாரிகளுக்கு அனுப்பியதாகச் சொல்லப்பட்டது. அமெரிக்கா – ஈரான் போர் பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கியது. அதிலிருந்து ஈரானில் தூக்கிலிடப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் குறைந்தது 1,639 பேருக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 1989ஆம்…

  • தென் கொரியாவில் வரலாறு காணாத வெப்பம்

    தென்கொரியாவில் நூற்றாண்டுக்கும் அதிகமான வானிலை வரலாற்றுப் பதிவுகளில் இதுவரை இல்லாத அளவாகப் புதிய உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் அரசு வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. தென்கொரியாவின் தென்கிழக்கு நகரமான யாங்சானில் அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 1.26 மணியளவில் 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகத் தென்கொரிய வானிலை ஆய்வு மையம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. தீவிரமடைந்துவரும் அனல் காற்றின் முக்கிய மையப் பகுதியாகத் திகழும் யாங்சானில், ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 2) தொடர்ந்து ஐந்தாவது நாளாக…

  • அமைதி பேரணியில் தற்கொலை தாக்குதல்; 14 பேர் படுகொலை: பாகிஸ்தானில் சோகம்.

    பாகிஸ்தானில் அமைதி பேரணியில் நடந்த தற்கொலை தாக்குதலில் 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஸ்வாட் மாவட்டத்தில் காபல் நகரில், நேற்று அமைதி பேரணி ஒன்று நடந்தது. இந்த பகுதியில் அமைதிவேண்டும் என வலியுறுத்தியும், சில மாதங்களாக போலீசார், பாதுகாப்பு விசயத்தில் செயல்பாடற்ற நிலையில் உள்ளனர் என குற்றம்சாட்டியும் இந்த பேரணி நடந்தது. ஸ்வாட் அமன் ஜிர்கா என்ற உள்ளூர் பழங்குடியின கவுன்சில் சார்பில் கோஷங்களை எழுப்பியும், வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும்…

  • விண்வெளியில் இருந்து ஐபோன் மூலம் படம் பிடிக்கப்பட்ட பசிபிக் பெருங்கடல்!…

    டிஜிட்டல் கேமராக்களுக்கு இணையாக இந்த ஸ்மார்ட்போன் புகைப்படம் அமைந்துள்ளதாக விண்வெளி ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எவ்வித டிஜிட்டல் கேமராக்களும் இன்றி, சாதாரண ஸ்மார்ட்போன் மூலம் எடுக்கப்பட்ட பசிபிக் பெருங்கடலின் பிரமாண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாசாவின் இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான அனில் மேனன், விண்வெளி நிலையத்தின் கப்போலா கண்காணிப்பு பகுதியில் இருந்து பசிபிக் பெருங்கடலின் வியத்தகு காட்சியைத் தனது ஐபோன் மூலம் படம் பிடித்தார். அந்த புகைப்படத்தை நேற்று…

  • ராணுவத்தில் ஏ.ஐ. பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் – சீன அதிபர் ஜின்பிங் உத்தரவு.

    சீன அதிபர் ஜின்பிங், மக்கள் விடுதலை ராணுவம் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆளில்லா தொழில்நுட்பங்களை ராணுவத்தில் விரைவாகப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார். ராணுவத்தின் 99-வது ஆண்டு விழாவை முன்னிட்டுபோர்க்களத் திறனே தேசிய பாதுகாப்பு நவீனமயமாக்கலின் அளவுகோல் என அவர் வலியுறுத்தினார். 2027-ம் ஆண்டு ராணுவத்தின் 100-வது ஆண்டு விழாவிற்குள் நவீனமயமாக்கலில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைய இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆளில்லா விமானங்கள், ரோபோக்கள் மற்றும் தானியங்கி கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன.வுகானில் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது. ராணுவ தொழில்நுட்பத் திட்டங்களில் வெளிப்படைத் தன்மையை…