Category: உலக செய்திகள்
-
இளம் வயதிலேயே நிரந்தர கருத்தடையைத் தெரிவுசெய்யும் ஆண்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
குழந்தைப் பிறப்பு மற்றும் குடும்பத் திட்டமிடல் தொடர்பான தனிப்பட்ட அனுபவங்களின் பின்னணியில், ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சையான Vasectomy முறையைத் தெரிவுசெய்யும் ஆண்களின் எண்ணிக்கை சில நாடுகளில் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை தரவுகளின்படி, 2024-2025ஆம் ஆண்டில் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் 26,385 Vasectomy அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது 2023-2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 16 சதவீத அதிகரிப்பாகும். அதிக எண்ணிக்கையில் இந்தச்…
-
இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை!
பிரித்தானியாவில் குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய ஐந்து முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலான உள்ளூர் பேருந்து சேவைகளில் இலவசமாகப் பயணிக்கலாம். கோடை விடுமுறையில் குடும்பங்கள் மீதான நிதிச் சுமையை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, குடும்பங்களின் வாழ்க்கைச் செலவுகளுக்கு உதவுகிறது என்று போக்குவரத்துத் துறைக்கான மாநிலச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டர் தெரிவித்தார்.
-
காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி செஞ்சிலுவை சங்க பிரதிநிதியுடன் சந்திப்பு
பாங்காங்: கடந்த 2021ம் ஆண்டு மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து முன்னாள் தலைவர் ஆங் சாங் சூகி காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், ஆங் சாங் சூகி சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதியை சந்தித்ததாக அரசு தெரிவித்துள்ளது.அது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு “ஒப்பந்தம் (Deal) அல்லது முழுமையான சரணடைவு (Total Surrender)” என்ற இரண்டு வழிகளே உள்ளதாக கடுமையாக எச்சரித்துள்ளார். தனது சமூக வலைதளமான Truth Social-இல் வெளியிட்ட பதிவில், ஈரான் பேச்சுவார்த்தைக்காக மறைமுகமாக முயற்சி செய்தபோதும், பொதுவெளியில் அதை மறுப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். “ஈரான் ஒப்புக்கொண்டாலும் இல்லையென்றாலும், பல தசாப்தங்களாக அவர்கள் உருவாக்கிய பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், உலகின் முக்கிய கடல் வர்த்தகப்…
-
புலம்பெயர்வோரை பிரான்ஸ் திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும்: பிரித்தானிய அரசியல்வாதி
தாங்கள் ஆட்சிக்கு வந்தால், புலம்பெயர்வோரை தூக்கிக்கொண்டு போய் பிரான்சில் விட்டுவிடுவோம் என்றும், பிரான்ஸ் அவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார் பிரித்தானிய அரசியல்வாதி ஒருவர். சமீபத்தில், மொராக்கோ நாட்டிலிருந்து புலம்பெயர்வோர் சுமார் 60,000 பேர் ஸ்பெயினுக்கு சொந்தமான சியூட்டா என்னும் நகருக்குள் நுழைந்தது நினைவிருக்கலாம். அப்போது ஸ்பெயின் அவர்களைக் கையாண்ட விதத்தைப் பார்த்து, தங்களுக்கும் ஒரு திட்டம் உருவாகியுள்ளது என பிரித்தானிய அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார். ஸ்பெயின், புலம்பெயர்வோர் விடயத்தில் கிட்டத்தட்ட ஒரு ராணுவ நடவடிக்கை எடுப்பது போல…
-
வொஷிங்டன் காட்டுத்தீ: 60,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஸ்போக்கேன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக இதுவரை 60,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. வொஷிங்டன் மாநிலம் முழுவதும் சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தீ பரவியுள்ள நிலையில், ஸ்போக்கேன் பகுதியில் மட்டுமே 21 சதுர கிலோமீட்டர் பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில…
-
சிட்னியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் படுகாயம்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மத்திய பகுதியில் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவமானது இன்று(03.08.2026) இடம்பெற்றுள்ளது. சிட்னியின் மத்திய வணிகப் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்டிமோ என்ற பகுதியில் காலை 11 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால மீட்புப் படையினர், அங்கிருந்த 7 பேருக்கு முதலுதவி சிகிச்சைகளை வழங்கியுள்ளனர். அவர்களில் பலத்த காயமடைந்த இருவர்…
-
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 600 பில்லியன் டொலர் குறைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த ஒரு மாதத்தில் தனது சொத்து மதிப்பில் 600 பில்லியன் அமெரிக்க டொலரை இழந்துள்ளார். SpaceX மற்றும் Tesla நிறுவனங்களின் பங்குகளில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியே இதற்கு காரணம். ஜூன் 16 அன்று SpaceX பங்குகள் IPO-வில் மிகப்பெரிய வரலாற்றை படைத்தன. IPO விலை 135 டொலராக இருந்த நிலையில், பங்குகள் 150 டொலருக்கு பட்டியலிடப்பட்டன. முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் பங்குகள் 202 டொலர் வரை உயர்ந்தன. இதனால், மஸ்க்…
-
மேற்கு நேபாளத்தில் நிலநடுக்கம்
மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் இன்று (03) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 4.4ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, லும்பினி மாகாணத்தில் உள்ள ரோல்பா மாவட்டத்தின் இரிவாங் கிராமப்புற பகுதியில் அதிகாலை 3.07 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. சல்யான், ருகும் மற்றும் பியூதன் மாவட்டங்கள் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என்று தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும்…
-
மனிதர்களுக்கான ப்ரிட்ஜ் – ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு
உலகம் முழுவதும் கோடை வெயில் சாதனை அளவை எட்டி வரும் நிலையில், வெளியில் கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களைக் காக்கும் வகையில் ஜப்பான் நிறுவனம் ஒன்று “மனிதர்களுக்கான ஃப்ரிட்ஜ்” என்ற புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடுமையான வெப்பத்தில் வேலை செய்பவர்கள் இந்தச் சிறிய அறை போன்ற சாதனத்திற்குள் சென்ற சில வினாடிகளிலேயே அவர்களின் உடல் வெப்பநிலை கணிசமாகக் குறைந்துவிடுகிறது. கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் வெப்ப பக்கவாதம் போன்ற ஆபத்துகளில் சிக்காமல் இருக்க இது பெரிதும் உதவும் எனத்…