Category: உலக செய்திகள்

  • உறவுகளால் ஏமாற்றப்பட்ட நிலையில் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்பெயின் வீராங்கனை அரான்ட்சா சன்செஸ் விகாரியோ

    எண்பது, தொண்ணூறுகளில் ரெனிஸ் ரசிகர்களின் மனதை வென்ற அரான்ட்சா சன்செஸ் விகாரியோவைப் பற்றிய செய்தி ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தபோது மனதில் சின்னதாக ஒரு கவலை வந்தது. ஒரு காலத்தில் ரெனிஸ் மைதானத்தில் வெற்றிகளை மட்டுமே குவித்த அந்த நட்சத்திரம், இன்று வாழ்க்கையின் துயரமான செய்திகளில் இடம்பெற்றிருக்கின்றார். நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்பெயின் வீராங்கனை அரான்ட்சா சன்செஸ் விகாரியோ, தொண்ணூறுகளில் உலக பெண்கள் ரெனிஸின்  முடிசூடா ராணியாக விளங்கிய யேர்மனியின் ஸ்டெபி கிராபுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தவர். இருவரும் ஏழு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் சந்தித்திருக்கின்றார்கள். அரான்ட்சா, அதில் இரண்டு முறை ஸ்டெபி கிராபை வீழ்த்தி சம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கின்றார். அந்தக் காலத்து ரெனிஸ் ரசிகர்களுக்கு, ஸ்டெபி கிராப், அரான்ட்சா மோதல் என்றாலே தனி குதூகலம் இருக்கும். இன்று 54 வயதான அரான்ட்சா வேறு ஒரு காரணத்திற்காக செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார். ரெனிஸ் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் பல மில்லியன் டொலர்கள் சம்பாதித்த அவர், தனது நிதி விவகாரங்களை முழுமையாக தனது முன்னாள் கணவர் ஜோசெப் சாண்டகானாவிடம் ஒப்படைத்திருந்தார். வரி மற்றும் நிதி தொடர்பான சட்டப் பிரச்சினைகள் உருவானபோது, பெரும் குற்றப் பணமும் நிலுவைத் தொகைகளையும் செலுத்த வேண்டிய நிலை அரான்ட்சாவுக்கு ஏற்பட்டது. சிறைத் தண்டனையைத் தவிர்க்க, 36 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை அரசுக்குச் செலுத்திய பின்னர், ஸ்பானிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின்  நேர்லாணலில் கண்ணீருடன்,“என் முழுக் கவனமும் ரெனிஸில்தான் இருந்தது. பணம் சம்பந்தமான எல்லா விஷயங்களையும் என் கணவர்தான் கவனித்தார். நான் அவரை மிகவும் நேசித்தேன். ஆனால் அவர் எனக்கு உண்மையாக இருக்கவில்லை.”என்று தனது முன்னாள் கணவர் மீது குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் புதியதல்ல. 2012ம் ஆண்டிலேயே, தனது பெற்றோர்களும் தன்னைச் சுரண்டி, தனது வருமானத்தை தவறாக நிர்வகித்ததாக அரான்ட்சா குற்றம் சாட்டியிருக்கிறார். ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கைதட்டலுக்கிடையே கோப்பைகளை உயர்த்திப் பிடித்த ஒரு விளையாட்டு வீராங்கனை, இன்று தனது உழைப்பில் சம்பாதித்த பணம் கையில் இல்லாமல், “எல்லாம் போய்விட்டது” என்று கண்ணீர் மல்கப் பேசுவதைப் பார்க்கும்போது மனதில் கவலை வந்து சேர்கிறது.

  • டுபாயில் 20 நிமிடங்களில் 7 இடங்களில் தாக்குதல்

    டுபாயின் ஜெபல் அலி துறைமுகப் பகுதியில் 20 நிமிடங்களில் 7 இடங்களில் சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது. ஈரான் சார்பில் அதன் கூட்டாளி அமைப்பான ஏமன் ஹவுதி அமைப்பினருக்கும், வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், டுபாய் துறைமுகமான ஜெபல் அலி மற்றும் தொழில் மண்டலப் பகுதியில் இன்று அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட இடங்களில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை…

  • மாட்ரிட் காட்டுத் தீ பாதிக்கப்பட்டவர்களுக்கு மெஸ்ஸியின் நிதி உதவி

    ஸ்பெயினின் மாட்ரிட் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி நிதி உதவி வழங்கியுள்ளார். மாட்ரிட் பகுதியில் கடந்த ஜூலை 10-23 முதல் அதிகபட்சமான வெப்ப அலையினால் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. ஜூலை 24இல் 65 கி.மீ/ மணி வேகத்தில் காற்று வீசி இரண்டு தீ முகப்புகள் ஒன்றாக இணைந்து 50 கி.மீ/ மணி வேகத்தில் காட்டுத் தீயாக பரவியது. இந்தக் கடுமையான காட்டுத்தீயினால் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதனால், 84,000…

  • உலக தாய்ப்பால் வாரம் 2026: குழந்தைக்கு முதல் தடுப்பூசியான சீம்பாலின் முக்கியத்துவம்!

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை உலகம் முழுவதும் ‘உலக தாய்ப்பால் வாரம்’  கடைப்பிடிக்கப்படுகிறது. புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியம், வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதில் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுடன் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த வாரத்தின் முக்கிய நோக்கமாகும். குழந்தை பிறந்த பிறகு தாயின் மார்பகங்களில் இருந்து முதன்முதலாக சுரக்கும் அடர்த்தியான மஞ்சள் நிறப் பால் சீம்பால் எனப்படுகிறது. அளவில் குறைவாக இருந்தாலும், இது…

  • 10 ஆண்டுகள் படுக்கைக்கு அடியில் இருந்த பல கோடி மதிப்புள்ள அரிய முத்து!

    பிலிப்பைன்ஸின் பளவான் தீவைச் சேர்ந்த ஒரு மீனவர், 2006ஆம் ஆண்டு கடலில் கண்டெடுத்த 34 கிலோ எடையுள்ள மிகப்பெரிய இயற்கை முத்தை அதன் உண்மையான மதிப்பு தெரியாமல் சுமார் 10 ஆண்டுகள் தனது வீட்டில் படுக்கைக்கு அடியில் அதிர்ஷ்டப் பொருளாக வைத்திருந்தார்  என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? கடந்த 2006ஆம் ஆண்டு, பளவான் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடல் சிப்பிக்குள் சிக்கியிருந்த இந்தப் பிரம்மாண்ட முத்தை அந்த மீனவர் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. அதன் அரிய தன்மையை அறியாத…

  • எல்-நினோ தாக்கம்: 4.9 கோடி மக்கள் பட்டினியில் வாடலாம்- ஐ.நா.

    எல்-நினோவின் தாக்கத்தால் உலகில் 4.9 கோடி மக்கள் பசிப் பட்டினியில் வாடலாம் என ஐ.நா. எச்சரித்துள்ளது. உலக உணவு திட்டம் (WFP) வெளியிட்ட புதிய அறிக்கையில், வலுவான எல்-நினோ வானிலை நிகழ்வு காரணமாக, உலகில் அதிகமாக பாதிக்கப்படவுள்ள பல பகுதிகளில் கூடுதலாக 4.9 கோடி மக்கள் பசியின் கோரப்பிடியில் சிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, தற்போது 45 நாடுகளில் 22 சதவீதம் அதிகரிப்புடன் மொத்தம் 274 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்ள நேரிடும் அபாயம்…

  • இத்தாலியில் தீவிரமடையும் கடும் வெப்ப அலை: 27 முக்கிய நகரங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை!

    இத்தாலியில் கோடைகாலத்தின் நான்காவது வெப்ப அலை தீவிரமடைந்துள்ள நிலையில், வியாழக்கிழமையன்று நாட்டின் 27 முக்கிய நகரங்களுக்கும் அதிஉயர் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் 25 நகரங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை (Red alert) விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டின் தெற்கே உள்ள மெஸ்சினா (Messina) மற்றும் ரெஜியோ கலாப்ரியா (Reggio Calabria) ஆகிய இரு நகரங்கள் மட்டுமே குறைந்த அளவிலான ‘அம்பர்’ எச்சரிக்கையில் (Amber alert) இருந்தன. நீடித்த அதிக…

  • பிரித்தானிய அரச குடும்பத்தில் புதிய மகிழ்ச்சி – இளவரசி யூஜினிக்கு பெண் குழந்தை

    பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி யூஜினி, போர்த்துகலின் லிஸ்பன் நகரிலுள்ள மருத்துவமனையில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அரச குடும்பம் வெளியிட்ட தகவலின்படி, குழந்தை திங்கட்கிழமை மாலை 6.20 மணிக்கு பிறந்ததுடன், பிறக்கும் போது 6 பவுண்டு 9 அவுன்ஸ் எடை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 வயதான இளவரசி யூஜினிக்கும் அவரது கணவர் ஜாக் புரூக்ஸ்பாங்கிற்கும் இது மூன்றாவது குழந்தையாகும். இவர்களுக்கு ஏற்கனவே 2021ஆம் ஆண்டு பிறந்த ஓகஸ்ட் பிலிப் ஹாக் புரூக்ஸ்பாங்க் மற்றும் 2023ஆம் ஆண்டு…

  • சில நிமிடங்களில் 30,000 பேரைக் கொன்ற கொடிய எரிமலை

    மவுண்ட் பெலி (Mount Pelée) எரிமலை கரீபியன் தீவான மார்டினிக்கில் அமைந்துள்ளது; இது புளோரிடாவிலிருந்து தென்கிழக்கே சுமார் 1,500 மைல் தொலைவிலும், இப்பகுதியை அமெரிக்காவுடன் இணைக்கும் அதிக போக்குவரத்து கொண்ட வான்வழிப் பாதைகளிலும் அமைந்துள்ளது. இந்த எரிமலையின் மிகவும் மோசமான சீற்றம் 1902-இல் நிகழ்ந்தது; அப்போது அதீத வெப்பம் கொண்ட மேகம் ஒன்று செயின்ட்-பியர் (Saint-Pierre) நகரை ஊடுருவிச் சென்று, சில நிமிடங்களிலேயே சுமார் 30,000 பேரின் உயிரைப் பறித்தது; மேலும் சமீபத்தில் 1929 மற்றும் 1932-க்கு…

  • ஈரான் – ஓமன் பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்றம்

    ஈரான் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானிய ராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரான் மற்றும் ஓமன் இடையே உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஓமனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். சில கருத்து வேறுபாடுகள் இன்னும் நீடித்த போதிலும், பேச்சுவார்த்தை நேர்மறையான பாதையில் செல்வதாக ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர்…