Category: உலக செய்திகள்
-
லண்டன் கத்திக்குத்து : பெண்ணொருவர் கைது
லண்டனின் கோவென்ட் கார்டன் பகுதியில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனின் கோவென்ட் கார்டன் பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில் 4 ஆண்களை பெண் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எண்டெல் வீதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு, கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த ஆண்களுக்கு போதுமான முதலுதவி சிகிச்சை வழங்கி மேல் சிகிச்சைக்காக அருகில் இருந்த சிகிச்சை…
-
அவுஸ்திரேலியக் குடியுரிமை வழங்கப்பட்டதில் பெருமிதம் :ஈரான் முன்னாள் கால்பந்து வீராங்கனைகள்.
அவுஸ்திரேலியக் குடியுரிமை வழங்கப்பட்டதில் பெருமிதம் கொள்வதாக ஈரானைச் சேர்ந்த இரண்டு முன்னாள் கால்பந்து வீராங்கனைகள். போட்டிக்கு முன்னதாகத் தேசிய கீதம் பாட மறுத்ததற்காகத் தங்கள் சொந்த நாட்டில் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்றதில் பெருமை கொள்வதாக ஈரானைச் சேர்ந்த இரண்டு முன்னாள் கால்பந்து வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதத்தில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ணம் போட்டியின்போது நிகழ்ந்த பரபரப்பான போராட்டத்தைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பைக் கோரிய ஈரானியக் குழுவின் ஏழு உறுப்பினர்களில்…
-
தாய்லாந்தின் சுங்கை கோலோக் பகுதியில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் பலி –
மின்னல் தாக்கியதில் தாய்லாந்து கால்பந்து வீரர் ஒருவர் மைதானத்திலேயே உயிரிழந்ததாகவும் 12 பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. தென் தாய்லாந்தின் சுங்கை கோலோக் பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 24 வயதான சோஃப்வான் அவா என்ற வீரரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சன்டிபாப் விளையாட்டரங்கில் சொம்கொல்ட்ஸ் மற்றும் அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சொம்கொல்ட்ஸ் அணியின் வீரரான…
-
உக்ரைனுக்கு உதவ தீவிரமாகக் களமிறங்கிய நேட்டோ
ரஷ்யாவின் ஏவுகணை உற்பத்தி அதிகரிப்பு குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா ஏவிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையைக் கூட உக்ரைனால் சுட்டு வீழ்த்த முடியாததை அடுத்து, பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளின் விநியோகத்தை அதிகரிக்குமாறு உக்ரைன் ஜனாதிபதி தனது நட்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளார். புதன்கிழமையன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்ய ஏவுகணை எதையும் சுட்டு வீழ்த்த உக்ரைன் தரப்பு தவறிய நிலையில், உக்ரைனுக்கு அவசரமாகத் தேவைப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெற்றுத் தருவதற்கான பணிகளில் நேட்டோ (NATO)…
-
27 ஆண்டுகள் கூகுளில் வேலை செய்தவர் ராஜினாமா.
சிலிக்கான் வேலியின் வரலாற்றிலேயே மிக முக்கிய வெளியேற்றமாக, கூகுள் டீப்மைண்ட் மற்றும் கூகுள் ரிசர்ச்சின் தலைமை விஞ்ஞானியான ஜெஃப் டீன் 27 ஆண்டு கால பணிக்கு பின் கூகுள் நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 1999-ல் கூகுளின் 30-வது ஊழியராக சேர்ந்த இவர், MapReduce, Bigtable மற்றும் Gemini போன்ற கூகுளின் பல முக்கிய தொழில் நுட்பங்கள் மற்றும் AI அமைப்புகளை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். பணியிலிருந்து ஓய்வுபெறாமல், தனது நீண்டகால சக ஊழியரான இந்திய வம்சாவளி தொழில்நுட்ப…
-
மெக்சிகோவில் டிக்டொக் பிரபலம் நேரலையில் துப்பாக்கிச் சூட்டில் பலி!
மெக்சிகோவில் தனது நண்பர்களுடன் டிக்டொக் நேரலையில் உரையாடிக்கொண்டிருந்த சமூக ஊடகப் பிரபலம் சீசர் காஸ்டெலம் (Cesar Gastelum) துப்பாக்கியால் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடமேற்கு நகரமான குலியாகானில் (Culiacan) உள்ள துரித உணவு விற்பனை நிலையம் ஒன்றுக்கு வெளியே செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நகைச்சுவை காணொளிகள் மூலம் டிக்டொக்கில் சுமார் 600,000 பின்தொடர்பாளர்களைக் கொண்ட காஸ்டெலம், குறித்த உணவகத்துக்கு வெளியே தனது நண்பர்களுடன், நேரலையில் பேசிக்கொண்டிருந்தபோது, உந்துருளிகளில் தலைக்கவசம் அணிந்து வந்த…
-
சொந்த படையின் தாக்குதலை எதிரி என நினைத்து ஏவுகணையை ஏவியது இஸ்ரேல்!
தெற்கு லெபனானில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது, தமது சொந்தப் படையினரின் தாக்குதலை எதிரிகளின் தாக்குதல் எனத் தவறாகக் கணித்து, இஸ்ரேலிய இராணுவம் தவறுதலாக இடைமறிப்பு ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளது. இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லெபனான் எல்லையில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கையின் போது ஏற்பட்ட இந்தத் தவறான கணிப்பு காரணமாகவே இடைமறிப்பு ஏவுகணை செலுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்தத் தவறான ஏவுகணை வீச்சினால் எவருக்கும் காயங்களோ அல்லது பாதிப்புகளோ ஏற்படவில்லை எனத்…
-
உறவுகளால் ஏமாற்றப்பட்ட நிலையில் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்பெயின் வீராங்கனை அரான்ட்சா சன்செஸ் விகாரியோ
எண்பது, தொண்ணூறுகளில் ரெனிஸ் ரசிகர்களின் மனதை வென்ற அரான்ட்சா சன்செஸ் விகாரியோவைப் பற்றிய செய்தி ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தபோது மனதில் சின்னதாக ஒரு கவலை வந்தது. ஒரு காலத்தில் ரெனிஸ் மைதானத்தில் வெற்றிகளை மட்டுமே குவித்த அந்த நட்சத்திரம், இன்று வாழ்க்கையின் துயரமான செய்திகளில் இடம்பெற்றிருக்கின்றார். நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்பெயின் வீராங்கனை அரான்ட்சா சன்செஸ் விகாரியோ, தொண்ணூறுகளில் உலக பெண்கள் ரெனிஸின் முடிசூடா ராணியாக விளங்கிய யேர்மனியின் ஸ்டெபி கிராபுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தவர். இருவரும் ஏழு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் சந்தித்திருக்கின்றார்கள். அரான்ட்சா, அதில் இரண்டு முறை ஸ்டெபி கிராபை வீழ்த்தி சம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கின்றார். அந்தக் காலத்து ரெனிஸ் ரசிகர்களுக்கு, ஸ்டெபி கிராப், அரான்ட்சா மோதல் என்றாலே தனி குதூகலம் இருக்கும். இன்று 54 வயதான அரான்ட்சா வேறு ஒரு காரணத்திற்காக செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார். ரெனிஸ் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் பல மில்லியன் டொலர்கள் சம்பாதித்த அவர், தனது நிதி விவகாரங்களை முழுமையாக தனது முன்னாள் கணவர் ஜோசெப் சாண்டகானாவிடம் ஒப்படைத்திருந்தார். வரி மற்றும் நிதி தொடர்பான சட்டப் பிரச்சினைகள் உருவானபோது, பெரும் குற்றப் பணமும் நிலுவைத் தொகைகளையும் செலுத்த வேண்டிய நிலை அரான்ட்சாவுக்கு ஏற்பட்டது. சிறைத் தண்டனையைத் தவிர்க்க, 36 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை அரசுக்குச் செலுத்திய பின்னர், ஸ்பானிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் நேர்லாணலில் கண்ணீருடன்,“என் முழுக் கவனமும் ரெனிஸில்தான் இருந்தது. பணம் சம்பந்தமான எல்லா விஷயங்களையும் என் கணவர்தான் கவனித்தார். நான் அவரை மிகவும் நேசித்தேன். ஆனால் அவர் எனக்கு உண்மையாக இருக்கவில்லை.”என்று தனது முன்னாள் கணவர் மீது குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் புதியதல்ல. 2012ம் ஆண்டிலேயே, தனது பெற்றோர்களும் தன்னைச் சுரண்டி, தனது வருமானத்தை தவறாக நிர்வகித்ததாக அரான்ட்சா குற்றம் சாட்டியிருக்கிறார். ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கைதட்டலுக்கிடையே கோப்பைகளை உயர்த்திப் பிடித்த ஒரு விளையாட்டு வீராங்கனை, இன்று தனது உழைப்பில் சம்பாதித்த பணம் கையில் இல்லாமல், “எல்லாம் போய்விட்டது” என்று கண்ணீர் மல்கப் பேசுவதைப் பார்க்கும்போது மனதில் கவலை வந்து சேர்கிறது.
-
டுபாயில் 20 நிமிடங்களில் 7 இடங்களில் தாக்குதல்
டுபாயின் ஜெபல் அலி துறைமுகப் பகுதியில் 20 நிமிடங்களில் 7 இடங்களில் சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது. ஈரான் சார்பில் அதன் கூட்டாளி அமைப்பான ஏமன் ஹவுதி அமைப்பினருக்கும், வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், டுபாய் துறைமுகமான ஜெபல் அலி மற்றும் தொழில் மண்டலப் பகுதியில் இன்று அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட இடங்களில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை…
-
மாட்ரிட் காட்டுத் தீ பாதிக்கப்பட்டவர்களுக்கு மெஸ்ஸியின் நிதி உதவி
ஸ்பெயினின் மாட்ரிட் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி நிதி உதவி வழங்கியுள்ளார். மாட்ரிட் பகுதியில் கடந்த ஜூலை 10-23 முதல் அதிகபட்சமான வெப்ப அலையினால் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. ஜூலை 24இல் 65 கி.மீ/ மணி வேகத்தில் காற்று வீசி இரண்டு தீ முகப்புகள் ஒன்றாக இணைந்து 50 கி.மீ/ மணி வேகத்தில் காட்டுத் தீயாக பரவியது. இந்தக் கடுமையான காட்டுத்தீயினால் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதனால், 84,000…