Category: உலக செய்திகள்

  • ஜப்பானை அச்சுறுத்தும் டொல்பின் சூறாவளி

    பசிபிக் பெருங்கடலில் உருவான ‘டொல்பின்’ தீவிர சூறாவளி ஜப்பானை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருவது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.​ இந்த சூறாவளி மணித்தியாலத்திற்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடியதென ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, பொனின் தீவுகளை ஏற்கனவே கடந்துள்ள இந்த சூறாவளி, வார இறுதியில் ஒகினாவா தீவில் முழுமையாகக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் கடல் அலை…

  • சீனத் தரவு மைய சாதனங்களுக்கு தடை விதிக்க அமெரிக்க அரசு திட்டம்

    சீனாவில் தயாரிக்கப்படும் புதிய தரவுமைய சாதனங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.​ செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அசுர வளர்ச்சியை அடுத்து, நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு அமைப்புகளைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். ​தரவுகளை ஃபைபர்-ஒப்டிக் கேபிள்கள் மூலம் அதிவேகமாக அனுப்ப உதவும் ‘ஒப்டிகல் டிரான்சீவர்ஸ்’ என்ற சீன தரவு மைய சாதனங்களுக்கு தடை விதிக்க அமெரிக்க தகவல் தொடர்பு ஆணைக்குழு (FCC) நடவடிக்கை எடுத்துவருகிறது. அமெரிக்க தரவு…

  • ஆங்கிலக் கால்வாயில் தீப்பற்றி எரிந்த படகு- 157 அகதிகள் மீட்பு

    பிரான்ஸ் நாட்டின் பொலோன்-சுர்-மெர் துறைமுகத்திற்கு அருகில் ஆங்கிலக் கால்வாய் பகுதியில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று செவ்வாய்க்கிழமை எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து உடனடியாகச் செயல்பட்ட பிரான்ஸ் கடற்கரை காவல்படை, மூன்று மீட்புக் கப்பல்களை அனுப்பி படகில் இருந்த 157 பேரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளது. அண்மைக்காலமாக ஆபத்தான இந்த கடல் வழியைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சட்டவிரோத மனித கடத்தல்காரர்கள் தகுதியற்ற சிறிய படகுகளில் அளவுக்கு அதிகமான மக்களை ஏற்றிச் செல்வதால்…

  • சீனாவின் புதிய சாதனை – ஒரே ஏவுதலில் 23 செயற்கைக்கோள்கள்

    சீனா தனது மற்றுமொரு குறைந்த புவிச் சுற்றுப்பாதை இணைய செயற்கைக்கோள் தொகுதியை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. அந்த நாட்டு நேரப்படி நேற்று (04) மாலை 4.52 மணியளவில், ஹைனான் வர்த்தக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து Long March-8A ஏவுகணை மூலம் இந்த செயற்கைக்கோள் தொகுதி விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம், குறைந்த புவிச் சுற்றுப்பாதை இணைய செயற்கைக்கோள்களின் 23ஆவது தொகுதி வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், செயற்கைக்கோள்கள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதையடுத்து, இந்த விண்வெளி நடவடிக்கை…

  • தென்கொரியாவில் தேசிய நெருக்கடிநிலை – வெப்பத்தால் 19 பேர் மரணம்

    தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung) நாட்டில் வீசும் அனல்காற்றைச் சமாளிக்கத் தேசிய நெருக்கடிநிலையை அறிவித்திருக்கிறார். அங்கு கடும் வெப்பத்தால் 19 பேர் மரணமடைந்துள்ளனர். மே மாத நடுப்பகுதி முதல் இம்மாதம் (ஆகஸ்ட்) வரை சுமார் 2,000 பேர் வெப்பம் தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகளால் அவதியுறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. எளிதில் பாதிக்கப்படக்கூடியோரைப் பாதுகாக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்தும்படி லீ அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். மோசமான வானிலை நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுவதால் தேசிய நெருக்கடிநிலை முறையை முழுமையாக மாற்றியமைக்கத்…

  • செங்கடலில் மூழ்கிய இந்தியக் கப்பல்

    செங்கடலில் தாக்கப்பட்ட இந்தியக் கப்பல் மூழ்கியது. கப்பல் ஊழியர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டதாக ஏமனின் கடலோரக் காவற்படை தெரிவித்தது. குறித்த கப்பல் மூழ்குவதற்கு ஏமனைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சிக் குழுவின் தாக்குதலே காரணம் என்று அந்நாட்டு அரசாங்கம் கூறியது. குறித்த Fwpj;j MSV Faize Noore Oliya  கப்பலில், 13 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்,ஒருவர் ஏமனைச் சேர்ந்தவர். ஹொதைதா துறைமுக நகருக்குத் தெற்கே கப்பல் தாக்கப்பட்டதாக ஏமனி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இந்தியக் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் குறித்த…

  • கனடாவிலுள்ள துணைத் தூதரகம் ஒன்றை மூட அமெரிக்கா திட்டம்

    கனடா உட்பட ஐந்து நாடுகளிலுள்ள துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டம் கனடாவிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் ஒன்றை மூட அமெரிக்கா திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டின் துவக்கத்தில் டிரம்ப் நிர்வாகம் பதவியேற்ற முதல் மாதங்களில், ட்ரம்பின், ‘அமெரிக்காவுக்கே முதலிடம்’ என்ற கொள்கைத் திட்டத்துடன், அமெரிக்க அதிகாரத்துவத்தை முழுமையாக ஒருங்கிணைக்கும் வகையில் மாற்றுவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை கிட்டத்தட்ட ஒரு டசின் வெளிநாட்டுத் தூதரகங்களை மூடுவதற்கான திட்டங்களை துவக்கியுள்ளதாக ராய்ச்சர்ஸ் முதலான…

  • தோல்வியடைந்த ட்ரம்பின் போர் நிறுத்த முயற்சிகள்

    உக்ரைன் , ரஷ்யா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா நேற்று மாறிமாறி ஏவுகணை, டிரோன் மூலம் தாக்குதல் நடத்தின. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட உக்ரைன்…

  • மதுவை விட்டு விலகும் தாய்லந்து மக்கள்

    தாய்லந்தில் மில்லியன் கணக்கானோர் மூன்று மாதங்களுக்கு மதுபானம் அருந்துவதை நிறுத்துவதாகச் சபதம் எடுத்துள்ளனர். சாமுட் சக்கோன் (Samut Sakhon) வட்டாரத்தின் பௌத்த ஆலயம் ஒன்றில் மக்கள் கூடி சபதம் எடுத்தனர். கௌ ஃபான்ஸா (Khao Phansa) எனப்படும் பெளத்த தினத்தில் இந்த மது அருந்தா இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது. வாசானா நாக் உம்மா (Wassana Nak-umma) என்ற பெண் மூவாண்டாக அந்த நிகழ்வில் கலந்துகொண்டு வருகிறார். அவருக்கு வயது 42. இல்லத்தரசியான அவர் அதிகமாக மது அருந்தினார்.…

  • பிரான்சில் காட்டுத்தீயால் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள்

    பிரான்சில் போர்டோ (Bordeaux)  நகருக்கு அருகே ஏற்பட்ட பெரிய காட்டுத்தீயில் இரண்டாம் உலகப் போர்க்காலத்து வெடிகுண்டுகளும் வெடிமருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கிராமத்தில் சுமார் 180 வீடுகள் தீக்கு இரையாயின. தீயின்போது வெடிப்புச் சத்தம் கேட்டதாய் அதிகாரிகள் கூறினர். எரிவாயுக் கலன் வெடித்திருக்கக்கூடும் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அது வெடிமருந்தாக இருக்கலாம் என்று தீயணைப்புப் படைத் தளபதி தாமஸ் மிமியாக் பின்னர் கூறினார். ஜெர்மனி, பிரான்சைச் சேர்ந்த  வெடிபொருள்கள் போர்க்காலத்தில்  கைவிடப்பட்டிருக்கலாம் என்று மிமியாக் சொன்னார். கோடைக்காலம்…