Category: உலக செய்திகள்
-
ஐக்கிய அரபு அமீரகக் கப்பல் மீது தாக்குதல்
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே சென்று கொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தேசிய எண்ணெய் நிறுவனமான ADNOC-க்குச் சொந்தமான கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையே (IRGC) காரணம் என்றும், இது சர்வதேச கடலோடி விதிகளுக்கு எதிரான “கடற்கொள்ளை” செயல் என்றும் அமீரக வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. கப்பலில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஈரானை தோற்கடித்த பிறகு, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ்…
-
ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு வெளிநாடு செல்லத் தடை
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் மனைவி பெகோனா கோமஸ் ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிபதி ஜுவான் கார்போஸ் பெய்னாடோ (Juan Carlos Peinado) அவரது கடவுச்சீட்டை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மாதத்திற்கு இருமுறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாட்ரிட் பல்கலைக்கழகத்தில் தனது பதவியைப் பயன்படுத்திப் பொதுப் பணிகளைப் பெற்றுக் கொடுத்தது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது (Influence Peddling), நிதி முறைகேடு…
-
வெர்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் காயம்
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள வெர்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் (Virginia State University) சனிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டாளர்கள் (Multiple shooters) ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். பல்கலைக்கழகத்தின் ‘குவாட் அனெக்சஸ்’ (Quad Annexes) விடுதிப் பகுதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்தது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை மிகவும்…
-
இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு; பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்
இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 38 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (BNPB) கூற்றுப்படி, இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர்.2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் மற்றும் 11 பேர் லேசான காயமடைந்துள்ளனர்.மொமுரே (Maumere) துறைமுக நகரில் மட்டும் 20 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை…
-
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – உயிரிழப்பு 38 ஆக அதிகரிப்பு
கிழக்கு இந்தோனேசியாவில் இன்நு காலை ஏற்பட்ட 7.7 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து டஜன் கணக்கான பின்அதிர்வுகளும் பதிவாகியுள்ள நிலையில், மீட்புப் பணியாளர்கள் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளை சென்றடைய தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவின் பல பகுதிகளில் ஒரு மீற்றருக்கும் குறைவான உயரத்தில் சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஓமன் கடற்பகுதியில் பரவும் பிரம்மாண்ட எண்ணெய் கசிவு
ஓமன் கடற்பகுதியில் கப்பலில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய், அரபிக்கடலில் சுமார் 500 முதல் 770+ சதுர மைல் (1,300 – 2,000+ சதுர கிலோமீட்டர்) பரப்பளவிற்குப் பல்வேறு பகுதிகளாகப் பிரிந்து பரவியுள்ளது. கப்பல் தரைதட்டிய இடத்தில் இருந்து 120 மைல்களுக்கும் அதிகமான தூரம் பயணித்து, ஓமனின் ராஸ் மத்ரகா கடற்கரையில் சுமார் 25 மைல் தூரத்திற்குப் பரவியுள்ளது. மேலும் இது மசீரா தீவையும் அச்சுறுத்தி வருகிறது. சுமார் 8,000,000 பேரல் கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற…
-
ஈரானியப் படைகளைத் தோற்கடித்த பின் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பிராந்தியமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு
இடைவிடாது தொடரும் ஈரான் மீதான மோதலுக்கு மத்தியில், நியூயார்க்கின் கார்டன் சிட்டியில் உள்ள நாசாவ் கவுண்டி காவல் அகாடமியில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துக்கள் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஈரானியப் படைகளைத் தோற்கடித்த பிறகு, மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) “விரைவில்” அமெரிக்க பிராந்தியமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். அந்தப் பகுதியில் அமெரிக்க கடற்படை ஒரு “எஃகுச் சுவர்” (wall of steel) போன்ற முற்றுகையை…
-
இத்தாலி காவல்துறையால் மீட்டெடுக்கப்பட்ட திருடப்பட்ட ஓவியங்கள்
இத்தாலியின் பார்மா நகருக்கு அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் கடந்த மார்ச் மாதம் திருடப்பட்ட பிரெஞ்சு ஓவியர்களான போல் செசான், ஹென்றி மட்டீஸ் மற்றும் பியர்-ஒகஸ்ட் ரேனோயர் ஆகியோரின் மூன்று அரிய ஓவியங்களை இத்தாலிய கலாச்சார பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவு காவல்துறை வெற்றிகரமாக மீட்டுள்ளது. பார்மா நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் இந்த ஓவியங்கள் மீட்கப்பட்டன. இத்திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய 9 மோல்டோவா (Moldovan) நாட்டவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. மார்ச் 22-23 இரவில் மாமியானோ…
-
மிச்சிகனில் துப்பாக்கிச்சூடு – சந்தேகநபரும் சடலமாக மீட்பு
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் ஐந்து பேரைச் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், தீவிர தேடுதலின் பின்னர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மிச்சிகன் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிசாக்கி கவுண்டியில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக கிடைத்த தகவலையடுத்து, நேற்று (14) காலை சுமார் 11.40 மணியளவில் பொலிஸார் அங்கு சென்றுள்ளனர். அங்கு மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதுடன், நான்காவது நபர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.…
-
என்ஜின் பாகங்கள் தாக்கி ரியானேர் விமானத்தின் ஜன்னல் உடைந்தது: பயணி வெளியே இழுக்கப்பட்டதாக NTSB தகவல்
கடந்த மாதம் ரியானேர் (Ryanair) விமானத்தில் ஏற்பட்ட என்ஜின் கோளாறு காரணமாக, அதன் பாகங்கள் சிதறி காக்பிட் சன்னலை உடைத்ததில் ஒரு பயணி பகுதி அளவு வெளியே இழுக்கப்பட்ட சம்பவத்தில், என்ஜின் விசிறி பிளேடில் உலோகம் பலவீனமடைந்ததற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க வான் பாதுகாப்பு புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) வெளியிட்டுள்ள பூர்வாங்க அறிக்கையில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. ஜூலை 10 அன்று கிரீஸ் நாட்டின் தெசலோனிகியிலிருந்து ஜெர்மனியின் மெம்மிங்கன் நோக்கி மால்டா…