Category: உலக செய்திகள்
-
மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் பெரிய விமானம் சோதனை வெற்றி
முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் மிகப்பெரிய விமானமான ‘எக்ஸ்1’-யை வெற்றிகரமாக பறக்கவிட்டு அமெரிக்காவின் ஹார்ட் எயாரோஸ்பேஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. நியூயோர்க் விமான நிலையத்தில் நடந்த சோதனையின்போது அந்த விமானம் 1,100 அடி உயரம் வரை சென்று 27 நிமிடங்கள் பறந்து தரை இறங்கியது. இதற்கு வெறும் ரூ.477 மதிப்புள்ள மின்சாரம் மட்டுமே செலவானதாக அந்த நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவே தற்போது உலகின் மிகப்பெரிய மின்கலத்தில் இயங்கக்கூடிய மின்சார விமானம் என்ற சாதனையை பெற்றுள்ளது.…
-
பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் எங்களுடனேயே வாழ விரும்புகிறார்கள்” – பாகிஸ்தான் ஜனாதிபதி பேச்சு!
பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்துக்கள் இந்தியாவுக்குச் செல்வதை விட, பாகிஸ்தானிலேயே தொடர்ந்து வசிப்பதற்கு விரும்புவதாக அந்த நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றிய அவர் “இந்தியர்கள் ‘அகண்ட பாரதம்’ என்ற எண்ணத்தை நம்புகிறார்கள். ஆனால் நாங்கள் சகிப்புத்தன்மை கொண்ட மனப்பான்மையைக் கொண்டவர்கள். பாகிஸ்தானில் 4 சதவீதம் இந்துக்கள் வாழ்கின்றனர்.உலகளாவிய ரீதியில் மற்ற இடங்களில் இருப்பதைப் போலவே அவர்களும்…
-
தாய் மற்றும் தம்பியின் உயிரை பறித்த 17 வயதுச் சிறுவன்: ‘ChatGPT’ செயலியைக் கொண்டு திட்டம் தீட்டியமை அம்பலம்!
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் தனது தாயார் மற்றும் சகோதரின் உயிரை பறித்த குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுச் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அர்ஜுன் அரவிந்த் என்ற 17 வயதுடைய சிறுவன் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்த விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவன் இந்த குற்றத்தை புரிவதற்கு முன்னதாக ‘ChatGPT’ செயற்கை நுண்ணறிவுச் செயலியைப் பயன்படுத்தித் தனது குடும்பத்தினரை மரணிக்க செய்வது தொடர்பான கதைகள் மற்றும் கற்பனைக் காட்சிகளை உருவாக்கியுள்ளதாக மாவட்ட அரச…
-
வடகொரியாவுடனான போரை முறைப்படி முடிவுக்குக் கொண்டுவர தென்கொரியா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung), வடகொரியாவுடன் அதிகாரப்பூர்வமாக போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையான படைநீக்கப்பட்ட மண்டலத்தில் பதற்றங்களைத் தவிர்க்கவும், வடகொரியாவின் அணுஆயுதத் திட்டங்களை நிறுத்துவதற்கான வழிகளைக் கண்டறியவும் “பன்முகப் பாதுகாப்பு அமைப்பை” உருவாக்க அதிபர் லீ முன்மொழிந்துள்ளார். 1953-ல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானபோதிலும், அமைதி ஒப்பந்தம் எதுவுமில்லை என்பதால் இரு நாடுகளும் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் போரிலேயே உள்ளன. கொரிய…
-
கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்களின் சராசரி விந்தணு எண்ணிக்கை 50% மேல் கணிசமாகக் குறைந்துள்ளதாகஆய்வு
“ஸ்பெர்மாகெடான்” என்ற சொல், உலகம் முழுவதும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை மற்றும் ஒட்டுமொத்த கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாகக் கூறப்படுவது குறித்து எழுந்துள்ள பொது மற்றும் அறிவியல் ரீதியான கவலைகளைக் குறிக்கிறது. தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஷானா ஸ்வான் தலைமையிலான ஆய்வுகள் உட்பட பல முக்கிய ஆராய்ச்சிகள், கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்களின் சராசரி விந்தணு எண்ணிக்கை 50% மேல் கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கூறுகின்றன. 2000-ம் ஆண்டிற்குப் பிறகு இந்த சரிவின் வேகம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அன்றாட…
-
கேம்பிரிட்ஜ் பேராசிரியர் உயிரிழப்பு – ‘தொடர் அவதூறுகளை எதிர்கொண்டார்’ என குடும்பத்தினர் ஆதங்கம்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மிக இளைய கருப்பின பேராசிரியரான ஜேசன் ஆர்டே (Jason Arday – 41), லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது கல்விச் சான்றுகள், ஆராய்ச்சிகள் மற்றும் அறக்கட்டளைப் பணிகள் குறித்து முறைகேடு மற்றும் திருட்டு (Plagiarism) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மாதத் தொடக்கத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜேசன் ஆர்டேவின் மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “கேம்பிரிட்ஜ் பேராசிரியராகப் பொறுப்பேற்றது முதல் கடந்த…
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு
இந்தோனேசியாவின் புளோரஸ் (Flores) தீவுப் பகுதியில் சனிக்கிழமை காலை 6:00 மணியளவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது என்டே (Ende) நகரத்திலிருந்து 68 கி.மீ வடமேற்கே மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை குறைந்தது 47 பேர் உயிரிழந்துள்ளனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுப் பின்னர் திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும் என்டே பகுதியின் மவ்ரோல் (Maurole) கடற்கரையில்…
-
மேற்குக்கரையில் யூதக் குடியேற்றவாசிகளின் முற்றுகையில் பாலஸ்தீனக் குடும்பங்கள்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள குஸ்ரா (Qusra) கிராமத்தில், பாலஸ்தீனக் குடும்பங்களின் வீடுகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் இஸ்ரேலிய யூதக் குடியேற்றவாசிகள் குன்றின் மீதிருந்த வீடுகளைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டுள்ளனர். குடியேற்றவாசிகள் கூடாரம் அமைத்து, குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளைத் துண்டித்ததுடன், சாலைகளையும் மறித்துள்ளனர். இதனால் வீடுகளுக்குள் சிக்கியுள்ள குடும்பங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடக்கத்தில் ராணுவ வீரர்கள் குடியேற்றவாசிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பின்னர் அவர்களைக் கலைக்க முயன்றனர். இருப்பினும்,…
-
பிறந்த குழந்தைக்கு சொந்தம் கொண்டாடிய வாடகை தாய்
அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்த பெற்றோர்கள், ஒரு கட்டத்தில் வாடகை தாயிடம் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதை தொடர்ந்து, குழந்தை பெற்றுக்கொண்ட அவர் குழந்தை தனக்கு தான் சொந்தம் என்று கூறி நீதிமன்றத்தை நாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த தம்பதிகளான ஓமர் அகமது மற்றும் நெளஷீன் கில்கர் ஆகியோர், செவிலியரான மெக்கென்னா வெஸ்ட் என்ற வாடகை தாயை அணுகி, தங்களது குழந்தையை பெற்றுத் தருமாறு கூறியுள்ளனர். அவர்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட…
-
சீன ராக்கெட் ஏவப்பட்ட சில வினாடிகளில் வெடித்துச் சிதறியது
ஆகஸ்ட் 10 அன்று, சீனாவின் ஹைனான் தீவில் உள்ள வென்சாங் (Wenchang) விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட லாங்மார்ச் 7ஏ (Long March 7A) ராக்கெட், கிளம்பிய 85 வினாடிகளில் காற்றில் வெடித்துச் சிதறியது. உலகளவில் ரேடியோ, தொலைக்காட்சி மற்றும் தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஜோங்சிங்-4பி (Zhongxing-4B) என்ற செயற்கைக்கோளை இந்த ராக்கெட் சுமந்து சென்றது. ராக்கெட் ஏவப்பட்டு 3 மணி நேரத்திற்குப் பிறகு, “பயணத்தின் போது கோளாறு ஏற்பட்டது” எனச் சீன அரசு செய்தி…