Category: உலக செய்திகள்
-
அமெரிக்காவிலிருந்த தங்கத்தை திடீரென லண்டனுக்கு மாற்றிய நெதர்லாந்து!
உலகளாவிய அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில், நெதர்லாந்து மத்திய வங்கி தனது தங்கக் கையிருப்பில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 2026 மார்ச் முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில், அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் கனடாவின் ஒட்டாவாவில் வைக்கப்பட்டிருந்த 86 டன் தங்கம் லண்டனுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நெருக்கடி நிலைமைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதாக நெதர்லாந்து மத்திய வங்கி (DNB) தெரிவித்துள்ளது. உலகளாவிய நம்பிக்கைக்குரிய சொத்தாகக் கருதப்படும் தங்கம்,…
-
ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக கடல்வழிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்றம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது ‘Truth Social’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதன் காரணமாக அது முன்னர் இருந்ததைவிட “மிகவும் சூடாக” இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஹோர்முஸ் நீரிணை முக்கிய பங்கு…
-
குற்ற ஒப்புதல் அளித்தார் டைகர் வுட்ஸ்; ஓட்டுநர் உரிமம் 5 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம்!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வீதி விபத்துத் தொடர்பில், பிரபல கோல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ் ‘கட்டுப்பாடற்ற முறையில் வாகனம் செலுத்தியமை’ தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். மார்ட்டின் கவுண்டி நீதிமன்றத்தில் முன்னிலையான 50 வயதான டைகர் வுட்ஸ், ‘போதையில் வாகனம் செலுத்தியமை’ என்ற ஆரம்பக் குற்றச்சாட்டுக்கு பதிலாகக் குறைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டினைக் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவரது ஓட்டுநர் உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு இடைநிறுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். ஜூபிட்டர் தீவில் உள்ள வீதியொன்றில் டைகர்…
-
எகிப்தில் பேருந்து விபத்து – 16 பேர் உயிரிழப்பு
எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர். தஹாப்–நுவைபா வீதியில், அல்-சாதா பகுதிக்கு முன்னதாக நுவைபா நோக்கிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததாக எகிப்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 20 அவசர ஊர்திகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த 16 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களுக்கு தேவையான வைத்திய சிகிச்சை,…
-
சீனாவின் புஜியானில் கனமழை – பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு
சீனாவின் புஜியான் மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் நேற்று (02) பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழையைத் தொடர்ந்து வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மேலும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் அதிகாரிகள் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
-
துருக்கி அருகே இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்து – 10 மாலுமிகள் மாயம்
துருக்கியின் இஸ்தான்புல் நகரின் சிலிவ்ரி மாவட்டக் கடற்பகுதியில் இன்று அதிகாலை இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில், 10 மாலுமிகள் காணாமல் போயுள்ளனர். கோகோவெலியில் இருந்து அலியாகா நோக்கிச் சென்ற ‘அல்சு’ என்ற கப்பலும், இஸ்கெண்டருன் துறைமுகத்திலிருந்து கராடெனிஸ் எரேக்லி நோக்கிச் சென்ற ‘துக்பெர்க் இமாமோக்ளு’ என்ற கப்பலும் அதிகாலை 3 மணியளவில் மோதியதாக இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மோதலில் ‘அல்சு’ கப்பலுக்கு சிறியளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ‘துக்பெர்க் இமாமோக்ளு’ கப்பல் குறிப்பிடத்தக்க அளவில்…
-
நேபாள வெள்ளத்தில் நெஞ்சம் பதறும் கொடூரம்
பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாள மலைப்பகுதிகளில், வான்வழிப் புகைப்படம் மற்றும் நிலவரைபடம் தயாரிப்பது போன்ற வழக்கமான பணிகளைத் தாண்டி, Drone-கள் தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் பணியிலும் ஈடுபட்டுள்ளன. மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாகச் செல்ல முடியாத ஆபத்தான நிலப்பரப்பு காரணமாக, நுவாகோட் மாவட்டத்தின் தேவிகாட்-3 பகுதியில் இருந்து இந்த வாரம் மட்டும் 7 உடல்கள், Drone-கள் மூலம் தேவிகாட்-5 பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக ‘காத்மாண்டு போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. நேபாள காவல்துறை, ராணுவம் மற்றும்…
-
CO₂ உமிழ்வில் முன்னணியில் இருக்கும் நாடுகள்
பூமியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவது, பனிப்பாறைகள் உருகுவது, கடல் மட்டம் உயர்வது, கடுமையான வெப்ப அலைகள், வறட்சி, கனமழை, வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிப்பது என காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமடைந்து வருகின்றன. இந்த மாற்றங்களுக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும், மனிதனால் ஏற்படுத்தப்படும் கார்பன் டைஆக்சைடு (CO₂) உள்ளிட்ட பல்வேறு வாயுக்களின் அதிகரிப்பே உலக வெப்பமயமாதலின் முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. தொழிற்சாலைகள், வாகனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள்…
-
போராட்டங்கள் நடத்தத் தடை.. அது மக்களாட்சிக்கானது.. வித்தியாசமான காரணம் கூறும் தாலிபான்!!
ஆப்கானிஸ்தானில் 2021-ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, பெண்களின் உரிமைகள், கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான், கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி, தலிபான் நீதித்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ அரசிதழில் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ‘ஷுர்தா சட்டம்’ (Shurta Law) இயற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா-வால் (Hibatullah Akhundzada) அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சட்டத்தின் 50-வது பிரிவில்,…
-
உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஏஐ
ChatGPT, Gemini, தானியங்கி வாகனங்கள், AI ரோபோக்கள் என செயற்கை நுண்ணறிவு இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. ஆனால், “Artificial Intelligence” என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது 1955-ம் ஆண்டில்தான். அமெரிக்காவின் டார்ட்மத் கல்லூரியில் (Dartmouth College) நடைபெற்ற கோடைக்கால ஆய்வுத் திட்டத்துக்கான ஒரு முன்மொழிவில், Artificial Intelligence என்ற வார்த்தை முதன்முறையாக இடம்பெற்றது. கணினி விஞ்ஞானி ஜான் மெக்கார்த்தி (John McCarthy) இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். இவரே பின்னாட்களில் செயற்கை நுண்ணறிவின்…