Category: உலக செய்திகள்
-
ஐந்து லெபனானிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது
கடந்த சில மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து லெபனானிய பொதுமக்களை (ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல) இஸ்ரேல் விடுவித்துள்ளது. 1980களின் நடுப்பகுதியில் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட லெபனானின் யூத சமூகத் தலைவர்களின் (“12 ராஜரீக தியாகிகள்”) உடல்களைத் தேடித் கண்டுபிடித்து மீட்கும் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரோமில் நடைபெற்ற இந்தத் பேச்சுவார்த்தைகளில், இஸ்ரேல் மற்றும் லெபனானின் உயர்மட்ட அதிகாரிகள், அமெரிக்கத் தூதர் மைக்கேல் இசா மற்றும் இஸ்ரேலிய தரப்பில் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும்…
-
எபோலா தொற்று – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ குடியரசில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் எபோலா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000யை கடந்துள்ளது. அரசு தரவுகளின்படி, கடந்த மே மாதம் மத்தியில் பரவத் தொடங்கிய இத்தொற்றால் இதுவரை 6,186 பேர் பாதிக்கப்பட்டு, அவர்களில் 3,007 பேர் உயிரிழந்தனர். கொங்கோவில் தற்போது பரவி வரும் ‘புண்டிபுக்யோ’ வகை எபோலா தீநுண்மிக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ, தடுப்பூசியோ ஏதுமில்லை. இருப்பினும், எபோலாவுக்கு சிகிச்சையளிக்க உதவும் எர்வெபோ தடுப்பூசி, இந்தத் தீநுண்மிக்கு எதிராகவும் ஓரளவு பாதுகாப்பை அளிக்கக்கூடும்…
-
இந்தோனேசியாவில் தீவிரமடையும் காட்டுத்தீ
இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் கலிமந்தான் பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ள நிலையில், பல பகுதிகளில் நச்சுப் புகை பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ காரணமாக உருவாகியுள்ள அபாயகரமான புகைமூட்டத்தால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தோனேசியாவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் ஆயிரக்கணக்கானோர் சுவாச நோய்த்தொற்றுகளுக்காக வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயிலிருந்து வெளியேறும் புகை மற்றும் புகைமூட்டம் மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளின் சில பகுதிகளிலும் பதிவாகியுள்ளது. சில பகுதிகளில் காட்டுத்தீ வாரக்கணக்கில் தொடர்ந்து எரிந்து வருவதுடன்,…
-
நியூயோர்க் பாடசாலை மாணவர்கள் ஏஐ பயன்படுத்த தடை!
நியூயோர்க் நகரப் பாடசாலைகளில் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் சுயமாக சிந்திக்கும் திறன், தனித்திறன்கள் மற்றும் மனநலனில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் நகர மேயர் ஸோரான் மம்தானி தெரிவித்துள்ளார். இந்தத் தடை அடுத்த ஓராண்டுக்கு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 9ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும் மாணவர்கள் குறிப்பிட்ட தேவைகளுக்காக…
-
வியட்நாமின் பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு – 11 பேருக்கு மரண தண்டனை
வியட்நாமில் இடம்பெற்ற பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில், 11 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மொத்தம் 227 பேர் குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கில், ஏனையவர்களுக்கு 18 மாதங்கள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில், பிரான்சிலிருந்து வியட்நாமுக்கு போதைப்பொருட்களை கடத்த ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் வலையமைப்பின் முக்கிய நபரான ஹா டான் நாம் என்பவரும் அடங்குகிறார். 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த…
-
சீன ஜனாதிபதி எகிப்து பயணம்
மேற்காசிய பிராந்தியத்தில் தனது அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சீன ஜனாதிபதி சீ சின்பிங் எகிப்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். கெய்ரோவில் எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா எல்-சிசியை சந்தித்த சீ சின்பிங், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், சர்வதேச அரங்கில் ஆதிக்கம் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இணைந்து செயல்பட…
-
ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை – மார்கோ ரூபியோ எச்சரிக்கை
ஈரானுக்கு உதவும் வகையில் செயற்படும் நாடுகள் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க கிர்கிஸ்தான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனை கடந்த புதன்கிழமை (02) சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மார்கோ ரூபியோ, இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தாம்…
-
நேபாளத்தில் சடலங்கள் கிடைக்காததால் வினோதமான முடிவெடுத்த உறவினர்கள்!
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தில் பல கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் இதுவரை 1,114 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சீனாவில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1,130 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,462 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 30-க்கும் மேற்பட்ட…
-
ஐ.நாவுக்கு ஈரான் எச்சரிக்கை
ஈரான் மற்றும் அமெரிக்க இடையே 6 மாதத்துக்கும் அதிகமாக தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், ஈரானின் குசிஸ்தான், சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான், ஹோர்மொஸ்கான் மற்றும் கெர்மான் ஆகிய மாகாணங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், சேவை மையங்கள் மற்றும் தகவல் தொடர்பு கோபுரங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ஈரானின் ஹோர்மொஸ்கான் மாகாணத்தின் சிரிக்கு மாவட்டத்தில் உள்ள கூஹெஸ்டாக்…
-
ஃபுளோரிடா மாநிலத்தில் நடைபெற்ற பரபரப்பான கொலை வழக்கில் ஜூரி தனது இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது:
22 வயதான அலானா சிம்ஸ் (Alana Sims) மற்றும் அவரது கருவிலுள்ள குழந்தையைக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராப்பர் பில்லி ஆடம்ஸ் III (Billy Adams III – Ace NH) என்பவருக்கு, கருவிலுள்ள குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக 8-4 என்ற வாக்கு வித்தியாசத்தில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று ஜூரி பரிந்துரைத்துள்ளது. அதே நேரத்தில், தாயான அலானா சிம்ஸின் கொலைக்கு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என வாக்களித்துள்ளது. ஜூரியின் இந்தத்…