Category: உலக செய்திகள்

  • பேரழிவின் விளிம்பில் பனிப் பாறைகள்..

    கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நேபாளத்தில் பனிப்பாறையில் ஏற்பட்ட வெடிப்பு பெரும் வெள்ளமாக உருவெடுத்து நேபாளத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. பனி பாறையில் ஏற்பட்ட வெடிப்புக்கு எல் நினோ, உலக வெப்பமயமாதல் போன்றவை காரணமாக கூறப்பட்டாலும், இதற்கு மனித சிறுநீரும் ஒரு காரணமாக இருப்பதாக சமீபத்தில் வெளியான Regional Environmental Change என்ற அறிவியல் ஆராய்ச்சி இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. இமயமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில்,…

  • கார்க் தீவில் தொடர் குண்டுவெடிப்பு

    ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவில் தொடர் குண்டுவெடிப்புகள் இடம்பெற்று வருவதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கார்க் தீவு அருகே பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும் ஈரானிய தனியார் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் ஈரான் அல்லது அமெரிக்கா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே,…

  • ஈரானுடனான மோதல் ‘சிறு விடயம்’ – ட்ரம்ப்

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் மோதலை “போர் அல்ல” என துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தெரிவித்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான மோதல் தங்களுக்கு “சிறு விடயம்” என தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் தற்போது இடைவிட்டு இடம்பெறுவதாகவும், இதனை பலர் போர் என அழைப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த மோதலில் இதுவரை 18 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளதுடன், அமெரிக்க வரி…

  • அமைதிப் பேச்சுக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதல்

    அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிர தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஒடேஸா மற்றும் டினிப்ரோ பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். அதேவேளை, உக்ரைன் தலைநகர் கீவ் மீது தொடர்ந்து 10ஆவது நாளாக ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், கீவ் நகர மையத்தில் உள்ள உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் உளவுப் பிரிவு தலைமையகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத்…

  • நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக அதிகரிப்பு

    நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. திபெத் – நேபாள எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவைத் தொடர்ந்து லெண்டே ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி ஆற்றில் பெருக்கெடுத்தது. இதனால் கரையோர கிராமங்கள் மற்றும் சிறு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 1,344 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4,800க்கும் மேற்பட்டோர்…

  • சீனாவில் மண்சரிவு; ஒருவர் உயிரிழப்பு – 11 பேர் மாயம்

    சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சௌடெல் சூறாவளியால் பெய்த கனமழையைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 4 மணியளவில் ஜியாங்சியின் சூச்சுவான் மாவட்டத்திலுள்ள காபிங் நகரில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்போது 12 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் மண்சரிவில் சிக்கியுள்ளதாக சீன அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

  • கச்சா எண்ணெய் திருட முயற்சி.. 37 பேர் உயிரிழந்த பயங்கரம்

    நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க ரிவர்ஸ் மாகாணத்தின் ஒக்ரிகா பகுதியில் உள்ள ஒகாரி ஜெட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு எண்ணெய் குழாயில், 200-க்கு மேற்பட்டோர் படகுகளில் சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் திருட முயன்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக உயர் அழுத்தத்தில் கச்சா எண்ணெய் வெளியேறியபோது, அதிலிருந்து பரவிய நச்சுப் புகையை அங்கிருந்தவர்கள் சுவாசித்ததாக கூறப்படுகிறது. இதில் பலர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததுடன், சிலர் ஆற்றில் விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை 37 உயிரிழந்திருப்பதாக…

  • 2027-ல் 50 ஆண்டில் இல்லாத பேராபத்து.. உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை.!

    பசிபிக் பெருங்கடலில் வழக்கத்தை விட வெப்பம் 2 டிகிரி செல்ஸியஸ் அளவு அதிகரிக்கும் நிகழ்வே ‘எல் நினோ’ என அழைக்கப்படுகிறது. அப்படி எல் நினோ உருவானால் அது உலகம் முழுவதிலும் பெரும் வானிலை மாற்றங்களையும், பேரழிவுகளையும் ஏற்படுத்தும். இந்த ஆண்டு ‘எல் நினோ’ உருவாக அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட நிலையில், கணிப்புக்கு மாறாக பசிபிக் பெருங்கடலில் வெப்பம் கடுமையாக அதிகரித்ததால் ‘சூப்பர் எல் நினோ’ (Supersized El Niño) உருவானதாக அறிவிக்கப்பட்டது. அதாவது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு…

  • சூப்பர் எல் நினோ காரணமாக பசிபிக் கடலில் அடுத்தடுத்து 3 சூறாவளிகள் உருவாக உள்ளது.

    பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வழக்கத்திற்கு மாறாக நீர் வெப்பம் அடைவதை தான் எல் நினோ என்று அழைக்கிறார்கள். எல் நினோ உருவாகி இருப்பதால், உலக அளவில் இயல்பான மழைப்பொழிவு முறையில், மிகப்பெரிய சீர்குலைவு ஏற்படுகிறது. வறட்சி, மழைப்பொழிவு ஆகிய இரண்டும் ஒருசேர அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் வறட்சியும், தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளில் கடுமையான மழைப்பொழிவையும், எல்.நினோ ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ஏற்கனவே உள்ள எல்.நினோ சூப்பர் எல்.நினோவாக மாறியதால், கடலின்…

  • நேபாள சுரங்கப்பாதையில் சிக்கிய 2 தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு மீட்பு

    நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவின் போது, ​​ஒரு நீர்மின் நிலையத்தின் நிலத்தடியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் ஒன்பது நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.  நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பயங்கரமான வெள்ளத்தில் திரிசூலி 3A (Trishuli 3A) நீர்மின் திட்டப் பகுதியும் பாதிக்கப்பட்டது. அங்குள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த இயந்திரப் foreman மற்றும் இயந்திர மேற்பார்வையாளர் (mechanical supervisor) ஆகிய இருவர் வெள்ளிக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனர். வெள்ளம்…