Category: உலக செய்திகள்
-
நேபாளத்தில் 10 நாட்களுக்குப் பின்னர் மேலும் 2 பேர் உயிருடன் மீட்பு
நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் 10 நாட்களுக்குப் பின்னர் 2 பேர் நேற்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினரும், ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெருவெள்ளம் ஏற்பட்டு 9 நாட்களுக்குப் பின்னர் நேற்று முன்தினம் 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் 2 பேரை நேற்று நேபாள ராணுவத்தினர் உயிருடன் மீட்டனர். இதுகுறித்து நேபாள ராணுவ…
-
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவம்: ஒரு வாரத்துக்கு முன்பே எச்சரித்த வெள்ளை மாளிகை அதிகாரி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001-ம் ஆண்டு செப்.11-ம் தேதி, அல்காய்தா தீவிரவாதிகள் 2 பயணிகள் விமானத்தை கடத்திச் சென்று அங்கிருந்த இரட்டை கோபுர கட்டிடங்கள் மீது மோதினர். இதில் அந்தக் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்து இடிந்து தரைமட்டமானது. இந்த சம்பவத்தில், அந்தக் கட்டிடத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாது, 19 தீவிரவாதிகள், 300 தீயணைப்பு வீரர்கள் உட்பட மொத்தம் 2,996 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு,ஒசாமா பின் லேடனின் அல் காய்தா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானில் பதுங்கி…
-
சீனாவில் பயங்கர நிலச்சரிவு.. 10 பேர் மாயம்.. 2 பேர் உயிரிழப்பு
சீனாவின் ஜியாங்சி மாகாணம் சுய்ச்சுவான் கவுண்டி காவோபிங் நகரில், ‘சௌடெல்’ புயல் காரணமாக பெய்த கனமழையால் அதிகாலை 4 மணிக்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 11 பேர் காணாமல் போயுள்ளனர். 12 வீடுகள் கடுமையாக சேதமடைந்த நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 11 பேர்…
-
பாகிஸ்தானின் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் தலைமை தளபதியாக அசிம் முனீர் இன்று பொறுப்பேற்றுள்ளார்
பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக முப்படைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் தலைமை தளபதியாக அசிம் முனீர் பொறுப்பேற்றுள்ள நிலையில், இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பல முறை ராணுவ தளபதிகள் புரட்சி மூலம் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் அப்படி ஒரு நிலை வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. அந்நாட்டின் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் ராணுவத்தின் பங்கு இருந்ததாக விமர்சனம் எழுந்தது. மேலும் அடுத்த வந்த புதிய ஆட்சியாளர்கள் ராணுவத்துக்கும், ராணுவ தளபதிக்கும் அதிக அதிகாரங்களை…
-
கேள்விக்குறியாகும் புதினின் அறிவிப்பு!
உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்ந்து 4 ஆண்டுகள் கடந்தும் இன்னும் முடிவடையாமல் தொடர்ந்து கொண்டே செல்கிறது. தொடக்கத்தில் ரஷ்யாவின் விரைவான முன்னேற்றம் தடுக்கப்பட்டு, தற்போது இரு தரப்புக்கும் சாதகம் இல்லாமல் நிலுவை நிலையிலேயே போர் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் இரண்டு மாகாணங்களையும், முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில், போர் நிறுத்தத்துக்கு இரண்டு தரப்பும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரஷ்யா கூடுதல் நிலப்பரப்பை கோரும் நிலையில், உக்ரைனோ ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகளை திரும்பத்தரவேண்டும் என்று…
-
ராணுவத்தை சந்தேகிக்கும் அமெரிக்க அரசு : உயர் அதிகாரிகளுக்கு ‘பாலிகிராப்’ சோதனை!
கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. போரின் முதல் வாரத்தில் இந்த கூட்டணிக்கு பெரிய அளவிலான வெற்றிகள் கிடைத்தன. முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய அரசியல், ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்டனர். ஆனால், இந்த பாதிப்பில் இருந்து ஈரான் விரைவில் மீண்டு அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை தாக்க தொடங்கியது. மேலும் உலக வர்த்தகத்தின் உயிர்…
-
பாகிஸ்தானில் அசிம் முனீருக்கு முப்படைகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது..
பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதன்முறையாக முப்படைகளையும் ஒரே அதிகாரியின் கீழ் கொண்டு வரும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் நிறைவேற்றிய சட்டம் மூலம் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு ஏற்கனவே இருந்து வந்த அமோக செல்வாக்கு அதிகாரப்பூர்வமாக அவரது கைக்கு வந்துள்ளது. சர்வதேச நாடுகளின் செல்லப் பிள்ளையாக திகழும் அசிம் முனீருக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் ஷெரிஃப்பைவிட அதிக முக்கியத்துவம் தருகிறார். 2025ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப்…
-
நெதர்லாந்து நாடு செய்த காரியத்தால் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
காகித பணம் தான் மனிதன் உருவாக்கியது. ஆனால், தங்கத்தை கடவுளின் பணம் என்று தான் சொல்வார்கள். அவ்வளவு மதிப்பு மிக்க தங்கம், உலக பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் மிகமுக்கிய பங்கு வகித்து வருகிறது. தங்கத்தில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட, உலக நாடுகளின் அரசுகள் தொடங்கி, சாமானிய மக்கள் வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. நிலைமை இப்படியாக இருக்க, ஒரு நாடு மேற்கொண்ட நடவடிக்கையால், தங்கத்தின் விலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அமெரிக்கா,…
-
ஈரானில் எரிபொருள் டேங்கர் வெடித்து 11 பேர் உயிரிழப்பு
ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தில் எரிபொருள் டேங்கர் லொறி விபத்துக்குள்ளாகி வெடித்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சனந்தாஜ் – ஹமேதான் நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். டேங்கர் லொறியின் பிரேக்கிங் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ அருகிலிருந்த வாகனங்களுக்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
11 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 60 வயது மூதாட்டி
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் வீடு இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 60 வயது மூதாட்டி ஒருவர் 11 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தீவிர மீட்புப்பணி நடைபெற்று வருகையில், நுவாகோட் மாவட்டத்தில் உள்ள பெட்ராபதியில், நான்கு மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த வீட்டின் மேல் தளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார். ஆயுதப் படை குழுவினரால் மீட்கப்பட்ட குறித்த மூதாட்டி, முதலுதவி சிகிச்சைக்காக ஹெலிக்கொப்டர் மூலம் திரிசூலியில் உள்ள நேபாள இராணுவத்தின் மைதிலி முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.