Category: உலக செய்திகள்
-
ஜெர்மனிய துாதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டது ரஷ்யா!
செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரில் (St Petersburg) அமைந்துள்ள ஜெர்மன் துணைத் தூதரகத்தை மூடுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. அத்துடன், செப்டம்பர் 18-க்குள் தூதரகம் தன் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் அறிவித்தல் விடுத்துள்ளது. ஜெர்மனி கடந்த வாரம் தனது நாட்டில் இருந்த இரண்டு ரஷ்ய தூதரகங்களை மூடியதற்கு பதிலடியாகவே ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. லீப்ஜிக் வானுார்தி நிலையத்தின் (Leipzig Airport) மீது நடத்தப்பட்ட தோல்வியுற்ற ஆளில்லா வானுார்தி தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம்…
-
அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட இஸ்லாமிய நாடுகளை அழைக்கும் ஈரான்!
அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என ஈரான் கோரியுள்ளது. ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். OIC என்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் புதிய பொதுச் செயலாளரான இஸ்மாயில் உல்ட் ஷெய்க் அகமதுடன் (Ismail Ould Cheikh Ahmed) தொலைபேசியில் உரையாடியபோது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்தும், ஈரானின் இறையாண்மைக்கு…
-
கனேடிய வானுார்திகளை அமெரிக்காவில் தயாரிக்குமாறு அறிவித்துள்ள ட்ரம்ப்!
அமெரிக்காவில் தமது வானுார்திகளை விற்பனை செய்ய வேண்டுமானால் கனடாவைச் சேர்ந்த ‘போம்பார்டியர்’ (Bombardier) நிறுவனம் அமெரிக்காவிலேயே தனது வானுார்திகளை தயாரிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க சந்தை வேண்டுமெனில் அவர்கள் இங்குதான் உற்பத்தி செய்ய வேண்டும், அமெரிக்காவை ஒரு ‘பிக்பேங்க்’ (piggybank) என்ற சொந்த சொத்து போன்று நடத்துவதை நிறுத்த வேண்டும்” என்று சமூக வலைத்தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே வர்த்தக மோதல்கள் வெடித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு…
-
“பாதி உள்ளே, பாதி வெளியே முடியாது”: ஹரி மற்றும் மேகன் நிலை குறித்த மன்னர் சார்லஸின் கடிதம் !
பிரித்தானியாவுக்கு திரும்பியுள்ள இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கெல் ஆகியோர், அரச குடும்பத்தின் சார்பில் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ளும் “செயலில் உள்ள அரச குடும்ப உறுப்பினர்கள் அல்ல என்று அரண்மனை தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மன்னர் சார்லஸ் சார்பில் லோர்ட் சேம்பர்லைன் அனுப்பியுள்ள இந்த கடிதம், ஹரி மற்றும் மேகனின் தற்போதைய நிலைமையை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, ஹரி மற்றும் மேகன் தொடர்ந்து “தனியார் குடிமக்களாகவே” கருதப்படுவார்கள் என்றும், “ஹிஸ் அண்ட் ஹர் ரோயல் ஹைனஸ்” (His…
-
செம்மணி புதைகுழி விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு
செம்மணி மனிதப் புதைகுழி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் பிரித்தானியத் தமிழர்கள் இன்று லண்டனில் உள்ள Primrose Hillல் ஒன்றுதிரண்டனர். தமிழர் தாயகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழிகளில் ஒன்றான செம்மணி புதைகுழியில் தோண்டி எடுக்கப்பட்ட 583 மனித எச்சங்களை அடையாளப்படுத்தும் விதமாக, நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் வெள்ளைத் துணிகளால் தங்களை மூடிப் படுத்து இறந்த உடல்கள் போல் காட்சி அளித்தனர். செம்மணியில் புதைக்கப்பட்டிருந்த உடல்களைக் கண்டுபிடிப்பதற்கு வழிகோலிய 18 வயது…
-
மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்ற தமிழ் பெண்!
மிஸ் வேர்ல்ட் பட்டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (வயது 24), வென்றுள்ளார். ஸ்பெயினைச் சேர்ந்த எலிசபெத் 2 ஆம் இடத்தையும், மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான தனுசியா செட்டி 3 ஆம் இடத்தையும் பிடித்தனர். வியட்நாமின் காங் ஹோவா மாகாணம், நியா ட்ராங் நகரில் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் திகதி மிஸ் வேர்ல்டு உலக அழகிப் போட்டி தொடங்கியது. இதில் இந்தியாவைச் சேர்ந்த நிகிதா போர்வால் உட்பட 111 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள்…
-
கொலை மிரட்டல் வழக்கில் பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதிக்கு பிணை
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், துணை ஜனாதிபதி சாரா டுடர்தேவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு மாநாடு ஒன்றில் பேசிய சாரா டுடர்தே, தான் கொலை செய்யப்பட்டால் ஜனாதிபதி பெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர், அவரது மனைவி மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தலைவர் மார்ட்டின் ருமுல்டெஸ் ஆகியோரை கொலை செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக மிரட்டல் விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில்…
-
நேபாள பெருவெள்ளம் – 5,000 பேர் மாயம்
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், சுமார் 5,000 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை. அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ரசுவா, நுவாகோட், சித்வன் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 1,344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களில் சுமார் 600 பேர் வெளிநாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 275 பேர் இந்தியர்களாவார். நேபாள…
-
ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்கும் உக்ரைன்?
ரஷ்யாவுக்கு எதிரான போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், கூடுதல் வருவாயை திரட்ட உக்ரைன் அரசு மேற்கொள்ளும் ஒரு வித்தியாசமான முயற்சி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. நாட்டில் தற்போது சட்டவிரோதமாகக் கருதப்படும் ஆபாச உள்ளடக்கத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை சட்டப்பூர்வமாக்கி, அதற்கு வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயை போருக்குப் பயன்படுத்தும் திட்டம் குறித்து உக்ரைன் நாடாளுமன்றத்தில் பரிசீலனை நடைபெற்று வருகிறது. உக்ரைனில் ஆபாசப் படங்களைத் தயாரித்தல் மற்றும் விநியோகித்தல் உள்ளிட்டவை தற்போது குற்றமாகக் கருதப்படுகின்றன. இதற்கு…
-
“October 7- Attack” பாணியில்.. இஸ்ரேல் மீது பலமுனைத் தாக்குதல்.? ஈரானின் அதிரடித் திட்டம்?
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான சமீபத்திய போருக்கு தொடக்கமாக அமைந்தது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல். அன்று ஹமாஸ் தலைமையிலான ஆயுதக் குழுக்கள் கசா எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதலை நடத்தின. அதே நேரத்தில், ஹமாஸ் போராளிகள் காசா இஸ்ரேல் எல்லைப் பாதுகாப்பு தடைகளை உடைத்து, பல இடங்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்ததுடன் எல்லைக்கு அருகிலிருந்த கிராமங்களில் உள்ள குடியிருப்புகள் மற்றும் ராணுவ…