Category: உலக செய்திகள்
-
ஆட்டம் காணப்போகும் அமெரிக்கா.. ஓரங்கட்டப்படும் டாலர்?
உலக வர்த்தகம் மற்றும் நிதித்துறையில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைப்பது குறித்து BRICS நாடுகளிடையே தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. குறிப்பாக, டாலருக்கு மாற்றாக புதிய பொதுவான நாணயத்தை உருவாக்க BRICS முயற்சி செய்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், டெல்லியில் நடைபெற்ற 18-வது BRICS உச்சி மாநாட்டில் அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதற்குப் பதிலாக, உள்ளூர் நாணயங்களில் நிதியுதவி வழங்குவதை அதிகரிக்க New Development Bank என்று சொல்லப்படும் NDB-யை BRICS தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.…
-
ஈரானுக்கு உதவி செய்த சீனா? உலகையே உலுக்கும் புதிய தகவல்!
ஈரான்–அமெரிக்கா இடையேயான மோதலில் சீன நிறுவனங்கள் பொருளாதார மற்றும் ராணுவ ரீதியாக ஈரானுக்கு மறைமுகமாக உதவியுள்ளன என்பது பல்வேறு சர்வதேச ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் (Drones) தயாரிப்பதற்குத் தேவையான செமிகண்டக்டர்கள், சென்சார்கள் போன்ற இரட்டைப் பயன்பாட்டு (Dual-use) தொழில்நுட்பக் கூறுகளை சீன நிறுவனங்கள் வழங்கியிருந்தது. மேலும் தோளில் வைத்துச் சுடும் ஏவுகணைகள் (MANPADS) போன்ற ஆயுதங்களை ஈரான் வாங்குவதற்கு சீனாவைச் சேர்ந்த தரகர்கள் உதவியதாகக் கண்டறியப்பட்டிருந்தது. இதனால்…
-
ஆயுதங்கள் காலி.. நெருக்கடியில் ட்ரம்ப்!
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா ராணுவ ரீதியாக வெற்றி பெற்றதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அமெரிக்க ராணுவத் தளபதிகளிடம் இருந்து வரும் தகவல்கள் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளபதிகளிடம் நேரடியாக போரின் நிலவரம் குறித்து கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. வழக்கமான பென்டகன் அறிக்கைகளை மட்டுமே நம்பாமல், களத்தில் இருக்கும்…
-
அடுத்தடுத்து வெடித்து சிதறும் NATO ஆயுதக் கிடங்குகள்! அச்சத்தில் ஐரோப்பா
NATO கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்கேரியாவில் ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ மற்றும் வெடிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தின் காட்சிகள், இரவு வானமே தீப்பிழம்புகளால் ஒளிரும் அளவுக்கு பதற்றமாக இருந்துள்ளது பல்கேரியாவின் மத்திய பகுதியில் உள்ள Tarva Levada கிராமம் அருகே இந்த ஆயுத சேமிப்பு தளத்தில் தீ ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ ஒரு கிடங்கிலிருந்து மற்றொரு கிடங்குக்கு பரவியதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து வெடிப்புகள் ஏற்பட்டபோதிலும், இதுவரை உயிரிழப்புகள் அல்லது…
-
டொனால்ட் ட்ரம்பின் வருகை: அயர்லாந்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அயர்லாந்து வருகையையொட்டி, அந்த நாட்டு வரலாற்றிலேயே மிகப்பாரிய பாதுகாப்பு மற்றும் காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் டப்ளின் மற்றும் கிளேர் பகுதிகளில் காவல் துறையினர் 10,000-க்கும் மேற்பட்ட 12 மணி நேர பணிச் சுழற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர். இந்த பயணத்துக்காக, சிறப்புப் பணி ஒதுக்கீடுகள், மேலதிக நேர வேலைகள் மற்றும் பிற மாவட்ட காவல் படையினரை இங்கு வரவழைக்கும் வகையில் ‘சிறப்பு…
-
மத்திய கிழக்கில் அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை – ஈரான் ஜனாதிபதி
மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக 11 முக்கிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் இந்தியா சென்றுள்ள நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். தொடர்ந்து இன்று மலேசியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த ஈரான் ஜனாதிபதி, ஈரான் மற்றும் அதன் பிராந்திய நாடுகளின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை…
-
ரொபோக்களின் விநோத போராட்டம்
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், வேலை வாய்ப்புப் பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்களை இயற்றுமாறு கோரி போலந்தின் வார்சோ நகரில் விநோதமான போராடமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. போலந்தின் டிஜிட்டல் விவகார அமைச்சுக்கு அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பல்வேறு வகையான 30-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனித வடிவிலான (Humanoid) ரோபோக்கள் மற்றும் நான்கு கால் விலங்குகளைப் போன்ற (Quadrupeds) ரோபோக்களை உள்ளடக்கிய இந்தக் குழுவினர்,…
-
நோர்வேயில் இலங்கை வம்சாவளி பெண்ணுக்கு கிடைத்த உயர் பதவி
இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவரும் நோர்வேயின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தருமான கம்சி குணரட்ணம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நோர்வே மன்னர் தலைமையில் நடைபெற்ற அரசாங்க சபைக் கூட்டத்தில், 2026 செப்டெம்பர் 11ஆம் திகதி கம்சி குணரட்ணம் போக்குவரத்து அமைச்சராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் நோர்வே அரசியலில் முக்கியமான அமைச்சுப் பதவியை வகிக்கும் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட அரசியல்வாதியாக கம்சி குணரட்ணம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இளம் வயதிலேயே அரசியலில்…
-
“நாங்கள் யாருக்கும் தலைவணங்க மாட்டோம்” – ஈரான் அதிபர் உறுதி!!
அமெரிக்கா ஈரான் இடையேயான போர் கடந்த 6 மாதங்களைத் தாண்டியும் நீடித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் வணிகம் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதற்கிடையில் தான், இந்தியாவில் இன்று தொடங்கவுள்ள பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாட்டிற்காக ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன் இந்தியா வந்திருக்கிறார். தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் பெஷஷ்கியன் இடையே இருதரப்பு பேச்சு வார்த்தையும் நேற்று நடைபெற்றாது. தொடர்ந்து, டெல்லியில் இந்திய மதத் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் முன்னிலையில்…
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவை அண்மித்த கடற்பகுதியில் இன்று (12) அதிகாலை 6.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.23 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, ஜகார்த்தாவின் ஆயிரம் தீவுகள் பகுதிக்கு வடகிழக்கே 69 கிலோமீட்டர் தொலைவில், ஜாவா கடலில் 368 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக இந்தோனேசிய வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் முகமை (BMKG) தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் 5.9 ரிச்டர் அளவாக பதிவான நிலநடுக்கத்தின் அளவு, மேலதிக ஆய்வுகளுக்குப்…