Category: உலக செய்திகள்

  • தெற்குலகில் ஒருங்கிணைந்த பெரும் சந்தையை உருவாக்க வேண்டும் – சீன ஜனாதிபதி

    தெற்குலகில் வளரும் பொருளாதார நாடுகளை ஒருங்கிணைத்து, பெரிய சந்தையை உருவாக்கும் வகையில் பிரிக்ஸ் அமைப்பு செயல்பட வேண்டும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். டில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் நிறைவு அமர்வில் உரையாற்றிய அவர், வர்த்தகம், உற்பத்தி, முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட 5 அம்ச செயல்திட்டத்தை முன்வைத்தார். இதன் கீழ், அனைவரும் அணுகக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்குவதில் சீனா தலைமை வகிக்கும் என்றும் அவர் அறிவித்தார். சர்வதேச விதிமுறைகள்…

  • RICS நாடுகளுக்காக புதிய AI திட்டம் – சீன ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

    விரிவாக்கப்பட்ட “Greater BRICS” நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping) பல புதிய திட்டங்களை முன்மொழிந்துள்ளார். நியூடெல்லியில் நடைபெற்ற BRICS உச்சி மாநாட்டின் நிறைவு அமர்வில் உரையாற்றிய ஷி ஜின்பிங், அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புடன் பொருளாதாரம், வர்த்தகம், நிதி மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதன் ஒரு முக்கிய அம்சமாக, BRICS AI Open Source Zone…

  • ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

    ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சென்றுகொண்டிருந்த ஈரான் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு மாலுமிகள் படுகாயமடைந்துள்ளனர். ஈரானின் குவாசம் தீவு அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், தாக்குதல் தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகவில்லை. மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்கும்…

  • ஈரான் இராணுவ தலைவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் நாட்டிற்கு எதிராக செய்யும் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் உடனடி கடுமையான மற்றும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் இராணுவத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். ஈரானிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி பேசுகையில், ஈரானிய இராணுவமும் ஈரானிய புரட்சிகர காவல்படையும் (IRGC) இணைந்து எத்தகைய எதிரி நடவடிக்கையையும் முறியடிக்க தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார். இரு படைகளுக்கும் இடையிலான ஒற்றுமை, நாட்டின் எதிரிகளின் சதித்திட்டங்களிலிருந்து பாதுகாக்கும் “இரும்புக் கேடயமாக” செயல்படுகிறது என…

  • வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

    வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும், தங்கள் நாட்டின்…

  • பாகிஸ்தானில் தொடரும் அவலம் ; 10 நாட்களில் 6 ஹிந்து சிறுமிகள் கடத்தல்

    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்யப்படும் அவலம் தொடர்கிறது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து பெண்கள், குறிப்பாக கோலி, பீல், மேக்வார் போன்ற ஏழை சமூகத்தைச் சேர்ந்த சிறுமியர் அடிக்கடி காணாமல் போகின்றனர். இவர்கள் கடத்தப்பட்டு, கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, பின் திருமணம் செய்து வைக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. இந்தத் திருமணங்கள் சட்டவிரோதமானவை என சிறுபான்மையினர் நல அமைப்புகள் குரல் கொடுத்தும், இதுபோன்ற அவலங்கள் தொடர்கின்றன. அந்த…

  • ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்: ஒருவர் பலி; மூவர் காயம்

    ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக மோதல் நிலவி வரும் வேளையில், அங்கு வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர். ”ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஹெங்காம் மற்றும் கெஷ்ம் தீவுகளின் கடற்கரைக்கு அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒருவர் பலியானார். மூவர் காயமடைந்துள்ளனர்” என கெஷ்ம்…

  • ஜாவா கடலில் காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு

    இந்தோனேசியாவுக்குச் சொந்தமான ஜாவா கடல் பகுதியில் இன்று (13) காலை காணாமல் போன பயணிகள் கப்பலை மீட்புக் குழுவினர் தற்போது கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, மீட்புக் குழுவினர் இதுவரை 103 பயணிகளை மீட்டுள்ளனர். எவ்வாறாயினும், விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 140 பயணிகள் காணாமல் போயுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுரபயா நகரிலிருந்து பன்ஜர்மசின் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தக் கப்பலில் விபத்து நேர்ந்தபோது 243 பயணிகள் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இந்தோனேசியாவில் பயணிகள் கப்பல் விபத்து- 140 பேர் மாயம்,103 பேர் மீட்பு

    இந்தோனேசியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பயணிகள் உயிரிழந்தனர். வடக்கு இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் கே.எம். பார்சிலோனா 5  கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது கப்பலில் 280 பயணிகள் இருந்தனர், மேலும் தீயில் இருந்து தப்பிக்க அவர்கள் கப்பலில் இருந்து கடலுக்குள் குதிக்கும் காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

  • ஆட்டம் காணப்போகும் அமெரிக்கா.. ஓரங்கட்டப்படும் டாலர்?

    உலக வர்த்தகம் மற்றும் நிதித்துறையில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைப்பது குறித்து BRICS நாடுகளிடையே தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. குறிப்பாக, டாலருக்கு மாற்றாக புதிய பொதுவான நாணயத்தை உருவாக்க BRICS முயற்சி செய்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், டெல்லியில் நடைபெற்ற 18-வது BRICS உச்சி மாநாட்டில் அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதற்குப் பதிலாக, உள்ளூர் நாணயங்களில் நிதியுதவி வழங்குவதை அதிகரிக்க New Development Bank என்று சொல்லப்படும் NDB-யை BRICS தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.…