Category: உலக செய்திகள்

  • வடகொரியா மறுபடியும் ஒரு புதிய ஏவுகணையை சோதித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வடகொரியா மறுபடியும் ஒரு புதிய ஏவுகணையை சோதித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… இந்த முறை சாதாரண ஏவுகணை இல்லை. ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடியதாக கூறப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இந்த சோதனையை அதிபர் கிம் ஜாங் உன் தனது மகள் கிம் ஜூ ஏவுடன் நேரிலேயே சென்று பார்வையிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 20-ம் தேதி கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள வான்சான் பகுதியிலிருந்து 2 ஏவுகணைகள்…

  • மொத்த ஆசியாவையும் அலறவிட்ட வடகொரியா.. ஜப்பானில் மிரட்டலான சாதனை!

    ஜப்பானில் நடைபெற்று வந்த ஆசிய விளையாட்டு போட்டியில், வடகொரிய வீராங்கனை தங்கப்பதக்கம் பெற்றிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. சோத்துக்கே வழியில்லை.. கெடுபிடியான நாடு, ராணுவ ஆட்சி.. இப்படியெல்லாம் பேசப்பட்ட நாடுதான் தங்கம் பெற்று அசத்தியிருக்கிறது. வடகொரியா என்று சொன்னவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, சைட் கிராப் வெட்டப்பட்ட குட்டை மனிதரான கிம் ஜாங் உன்-தான். அதெல்லாம் ஒரு நாடே கிடையாது.. அங்கெல்லாம் மக்கள் எப்படிதான் வாழுறாங்களோ! என்று மொத்த உலகமும் பேசி வருகிறது. ஆனால் அங்கிருந்துதான்…

  • தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

    தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு அருகிலுள்ள குவாமகுதா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு வீடொன்றுக்குள் புகுந்த ஆயுதமேந்திய மூவர், அங்கிருந்த 14 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நால்வர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்களில் கர்ப்பிணியாக இருக்கலாம் எனக் கருதப்படும் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கான…

  • ஈரானிய வெளியுறவு அமைச்சர் அமெரிக்க பிரதிநிதி இடையில் சந்திப்பு

    ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சிக்கும் அமெரிக்க பிரதிநிதி ஸ்டீவ் விட்கோஃப்பிற்கும் இடையே நடைபெற்ற சந்திப்பை ஈரானின் அரசுத் தொலைக்காட்சி நேற்று உறுதிப்படுத்தியது. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான ஈரானின் நிபந்தனைகளைத் தெளிவுபடுத்துவதும் அவற்றை எடுத்துரைப்பதுமே இச்சந்திப்பின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் நிபந்தனைகளும் கோரிக்கைகளும் மாறவில்லை என்று தூதரக மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த பல்வேறு ஈரானியத் தரப்புகள் தெரிவிக்கின்றன. ஈரானின் கோரிக்கைகள் தொடர்பான தனது கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றினால் மற்றும் போதுமான நடைமுறை…

  • போர்நிறுத்தம் நீடிக்கும் நிலையிலும் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்!

    காசாவில் போர்நிறுத்தம் அமலில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஒரு வாகனம் குறிவைக்கப்பட்டதாக உள்ளூர் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் முஹம்மது அபு அல்வான் எனவும், அவர் ஹமாஸ் அமைப்பின் நிதிப் பிரிவின் தலைவராக இருந்ததாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த அடையாளம் மற்றும்…

  • ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த சரக்கு கப்பல் மீது தாக்குதல்

    ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெற்ற ஒரு சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு(UKMTO) தெரிவித்துள்ளது. அதன்படி, அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்று சரக்குக் கப்பலைத் தாக்கியதில், அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்ததுடன், கட்டுப்பாடின்றி கடலில் மிதந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இருவர் உயிரிழந்ததாகவும் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், சுற்றுச்சூழலுக்கு…

  • தெற்கு லெபனானில் அமைதி எட்டாக்கனியாகவே உள்ளது! UNIFIL தெரிவிப்பு

    தெற்கு லெபனானில் அமைதி எட்டாக்கனியாகவே உள்ளது என்று லெபனானுக்கான ஐ.நா.இடைக்காலப் படை (UNIFIL) கூறியுள்ளதுடன், மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் அரசியல் உறுதிப்பாடு தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச அமைதி தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் இந்தக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. தெற்கு லெபனானின் நக்கூரா நகரில் உள்ள தனது தலைமையகத்தில், UNIFIL நேற்று(21) ஒரு விழாவுடன் இந்த தினத்தைக் கொண்டாடியது. இதன்போது,லெபனானுக்கான ஐ.நா.இடைக்காலப் படை…

  • ஜப்பானில் சக்திவாய்ந்த புயல் – இருவர் உயிரிழப்பு

    ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த புயல், தலைநகர் டோக்கியோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக, 16 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வெளியேற்ற அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. Dujuan புயல் மணிக்கு சுமார் 144 கிலோமீட்டர் (89 மைல்) வேகத்தில் காற்றுடன், டோக்கியோவுக்கு அருகிலுள்ள கட்சூரா (Katsuura) நகருக்கு தெற்கே 130 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்தது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று அதிகாலையில், புயல் கடற்கரையை விட்டு விலகி,…

  • போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா – உக்ரைன் விரைவில் ஒப்பந்தம்: ட்ரம்ப் நம்பிக்கை!

    நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்யாவும் உக்ரைனும் விரைவில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்துப் பேசிய பின் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இரு நாடுகளுமே போரை நிறுத்துவதில் ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டார். “போரில் ஏராளமான உயிர்கள் பலியாகி வருகின்றன. இரு தரப்புமே இந்த நிலை நீடிப்பதை விரும்பவில்லை. எனவே விரைவில் ஒரு தீர்வு எட்டப்படும் என நம்புகிறேன். இது…

  • அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா – ஈரான் ரகசியத் திட்டம்!

    அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா–ஈரான் இடையேயான நீண்டகால ஒத்துழைப்பு குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அரசு தயாரித்ததாகக் கூறப்படும் 44 பக்க ஆவணம் ஒன்று தற்போது கவனம் பெற்றுள்ளது. இந்த ஆவணத்தின்படி, அமெரிக்கா–ஈரான் போர் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பே, ரஷ்யாவும் ஈரானும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, பொருளாதாரம், எரிசக்தி, நிதி மற்றும் அணுசக்தி துறைகளில் இணைந்து செயல்பட திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணம் 2024 செப்டம்பர்…