Category: உலக செய்திகள்
-
ரஷ்யா மீது ஜெலன்ஸ்கி முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு
ரஷ்யா–உக்ரைன் போரில் 47 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81-வது கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய ஜெலன்ஸ்கி, இந்தியா, நேபாளம், கானா, தஜிகிஸ்தான், ஏமன், கென்யா, ஜிம்பாப்வே, கியூபா, பெலாரஸ், சூடான் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 47 நாடுகளின் குடிமக்கள் ரஷ்யாவின் போரில் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார். வெளிநாடுகளைச் சேர்ந்த சிலர் “ஏமாற்று முறைகள் மற்றும் தந்திரங்கள்” மூலம் ரஷ்யாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் சிலர் போர்க்களத்தில் உயிரிழப்பதாகவும்…
-
உலக நாடுகளுக்கு சீனா கொடுத்த அதிர்ச்சி!
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் கம்யூனிஸ்ட் நாடான சோவியத் மற்றும் அமெரிக்கா ஆகியவை உலகின் வல்லரசுகளாக உருவெடுத்தன. சுமார் 40 ஆண்டுகள் இந்த இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்த பனிப்போர் 1990களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்தது. இதனால் உலகின் ஒரே வல்லரசாக அமெரிக்கா திகழ்ந்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் மற்றொரு வல்லரசாக சோவியத்தின் இடத்தில் மற்றொரு கம்யூனிச நாடான சீனா உருவாகியுள்ளது. சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக…
-
வரலாற்றில் இல்லாத அளவில் வைரத்தின் விலை கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
உலகின் மதிப்பு மிக்க பொருள்களில் ஒன்றாக வைரங்கள் திகழ்ந்து வருகிறது. உலக அளவில் மிக குறைந்த அளவில், சில இடங்களில் மட்டுமே இந்த வைரங்கள் கிடைத்து வந்ததால் அதன் விலை சாமானியர்களுக்கு எட்டாத வகையிலேயே இருந்து வந்தது. ஆனால் 1950-களில் அமெரிக்காவில் செயற்கை வைரங்கள் உருவாக்கப்பட்டது ஒரு புரட்சியாகவே கருதப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரங்கள் சந்தையில் விற்பனைக்கும் கொண்டுவரப்பட்டது. தொடக்கத்தில் செயற்கை வைரங்களும் இயற்கை வைரங்களுக்கு இணையான விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால்…
-
சீன அதிபரை புகழ்ந்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?
சீன அதிபர் XI ஜின்பிங்கை, டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், ’சிறந்த தலைவர்’ எனப் பாராட்டியுள்ளார். சீன அரசு தொலைக்காட்சியான CCTV-க்கு அளித்த பேட்டியில் மஸ்க் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார். Xi ஜின்பிங்கின் தலைமையின் கீழ் சீனா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக மஸ்க் கூறினார். சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், அந்நாட்டு மக்களின் சராசரி வாழ்க்கையில் தரமும் செழிப்பும் அதிகரித்திருப்பது தெரிகிறது எனத் தெரிவித்தார்.…
-
ஷார்ஜாவில் கொடூரம்.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட இந்தியரின் உடல்.. மனைவி, மகன் மாயம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் 9 துண்டுகளாக வெட்டப்பட்டுக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தக் கொலைக்குப் பிறகு அவரது மனைவியும், மகனும் ஷார்ஜாவை விட்டு வெளியேறி இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபூரைச் சேர்ந்தவர் ஆல்வின் பிரகாஷ் குந்தர் (38). இவர் கடந்த 14 ஆண்டுகளாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா விமான நிலையத்தில்…
-
அமெரிக்காவுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் – ஐ.நா. உரையில் ஈரான் ஜனாதிபதி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான சுமார் ஏழு மாதகால யுத்தத்தின் மத்தியில் ஈரான் ஒருபோதும் மண்டியிடாது என்றும், எனினும் மோதலுக்கு இராஜதந்திர தீர்வை எட்டத் தயார் என்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். ஏதேனுமொரு உடன்பாட்டை எட்டத் தவறினால் இஸ்லாமியக் குடியரசை நிர்மூலமாக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலுக்குப் பதிலளித்த பெசெஷ்கியன், தடைகள், அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரானிய மக்களின் எதிர்ப்புறுதி மேலும் அதிகரிக்கும் என்பதை…
-
சவூதியைவிட்டு வெளியேறும் படைகள்? சிக்கலில் இத்தாலி!
மத்திய கிழக்கில் ஏற்கெனவே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஏமனின் ஹவுதி அமைப்பின் தாக்குதல்கள் பிராந்திய பாதுகாப்பு நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன. சவூதி அரேபியாவில் ஹவுதிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இடைமறிக்கப்பட்ட ட்ரோனின் சிதைவுகள் சவூதி நகரப் பகுதியில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், காயமடைந்தவர்களில் சவூதி பெண் மற்றும் பாகிஸ்தான் நாட்டவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த குறிப்பிட்ட தாக்குதலுக்கு ஹவுதிகள் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஆனால், சவூதி அதிகாரிகள்…
-
புத்தகம் வாசிப்பவர்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை சிங்கப்பூர் அரசு முன்னெடுத்துள்ளது.
சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் ஸ்மார்ட் போனில் அதிக நேரங்களை செலவிடுவதால், வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டதாக கருதப்படுகிறது. இதனால் வாசிப்பு பழக்கத்தை மீட்டெடுக்க, வாசிப்பில் ஈடுபடுபவர்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை சிங்கப்பூர் அரசு முன்னெடுத்துள்ளது. சிங்கப்பூரின் தேசிய நூலக வாரியம், இதற்காக 5 ஆண்டு கால தேசிய வாசிப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதிபெற ஒரு வாசிப்பு அமர்வு குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் நீடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு அமர்வு…
-
அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கு கிடைத்த கௌரவம்
அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவிற்கு, சிறப்பு தபால் தலை வெளியிட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். 1976 ஆம் ஆண்டில் அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, மொத்தமாக 1500 க்கும் மேற்பட்ட படங்களில், சுமார் 7,000 மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜா கடந்த சில மாதங்களாக, வெளிநாடுகளில் இசை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் அவுஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் நிலையில், முதல் நிகழ்ச்சி செப்டம்பர் 19 ஆம் திகதி மெல்போர்னில் நடைபெற்றுள்ளது. செப்டம்பர் 24 ஆம்…
-
ஐ.நா. பொதுச்சபையில் Instagram reels பார்த்துக்கொண்டிருந்த சிரியா ஜனாதிபதி
ஐ.நா. பொதுச்சபையில் சிரியா ஜனாதிபதி Instagram reels பார்த்துக்கொண்டிருந்த வீடியோ வைரலாகிவருகிறது. நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA) கூட்டத்தில், சிரியா ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா (Ahmed al-Sharaa), துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) உரையாற்றும் நேரத்தில் தனது கைப்பேசியில் Instagram-இல் வீடியோக்களை (Reels) ஸ்க்ரோல் செய்த காட்சி கமெராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. பலரும், இது மிகவும் தங்களுடன் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய (relatable)…