Category: இலங்கை செய்திகள்
-
சர்வதேச நாணய நிதியக் குழு இன்று நாட்டுக்கு
நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு இன்று (10)இலங்கை வரவுள்ளது. அந்த குழுவானது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து இந்த மதிப்பீட்டு பணிகளை முன்னெடுக்கவுள்ளது. இந்த விஜயம் குறித்து இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ தெரிவிக்கையில், சர்வதேச நாணய…
-
களுபோவில பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து கைக்குண்டு தாக்குதல்
களுபோவில – விமலசிறி மாவத்தையில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. எனினும், இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-
அர்ச்சுனா எம்.பிக்கு சபாநாயகர் கடுமையான எச்சரிக்கை
யாழ்.மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு சபாநாயகர் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போது, நிலையியற் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வி குறித்தே சபாநாயகர் இந்த விடயத்தை சுட்டிகாகாட்டினார். சபையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தால் 72, 79 நிலையியற் கட்டலைகளின் படி தண்டனை வழங்க நேரிடும் என சபாநாயகர் கூறியிருந்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய சாமர சம்பத் தசனாயக்க வெளிப்படுத்திய கருத்தொன்றை ஹன்சாட் செய்யுமாறு ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர்…
-
கொழும்பை வந்தடைந்த ஐ.என்.எஸ் போர்க்கப்பல்
இந்திய கடற்படையால் உள்நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த் போர்க்கப்பலான INS உதயகிரி, மூன்று நாள் செயல்பாட்டு இடைநிறுத்தப் பயணத்திற்காக நேற்று (08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் இடம்பெறும் நிலையில், இந்தப் போர்க்கப்பலின் வருகையும் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, இந்திய கடற்படையின் நடமாடும் பயிற்சிக் குழுவினரால் தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் அனுபவப் பகிர்வுகளை வழங்குவதன் மூலம், இலங்கை கடற்படையுடனான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த…
-
ஒரு சொட்டு நீர் இல்லை? இலங்கையைப் பந்தாடும் எல்.நினோ.. 1,15,000 மக்கள் வேதனை!
பிசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அடைவதைத்தான் எல்.நினோ என்று அழைக்கிறோம். இது பொதுவாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்வாக இருந்தாலும், இந்த ஆண்டு மிகக்கடுமையான அளவை எட்டியிருப்பதாக, வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஒருசில நாடுகளில் அதிகப்படியான வறட்சியையும், ஒரு சில நாடுகளில் அதிகப்படியான வெள்ளம், புயல் போன்ற சீற்றங்களையும், எல்.நினோ ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்தியா மாதிரியான நாடுகளில், வறட்சி மற்றும் வெள்ளம் இரண்டுமே மக்களை வாட்டி வதைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்,…
-
ஜனாதிபதியைச் சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (9) சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். நாட்டிற்கு நேற்று(8) வந்தடைந்த அவர், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் சிநேகபூர்வமான சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று மதியம் நடைபெறவுள்ளது. பின்னர், கொழும்பு கங்காராம விஹாரையில் இன்று மதியம் நடைபெறும்…
-
இலங்கையின் எல்லைக்கு அப்பால் ஈரானிய கப்பல்கள் : அமெரிக்க தூதரகம் வழங்கிய தகவல்!
இலங்கைக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் தரித்து நிற்பது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் துறைமுக அமைச்சகங்களுக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டதுடன், இலங்கை காவல்துறை மற்றும் கடற்படையினரால் குறித்த கப்பல்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர், இலங்கையிலிருந்து 24 கடல் மைல்களுக்கு…
-
நான் போர்க் குற்றவாளியல்ல, ஆதாரத்துடன் நிரூபித்தால் ஏற்றுக்கொள்ள தயார் – சவேந்திர சில்வா
இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், தன் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், சர்வதேச அளவில் தன் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கான அடிப்படை குறித்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைப் பாதுகாப்பு படையினர் புலிகளுக்கு எதிராகத் தொழில்முறை ரீதியிலேயே போரிட்டனர் என்றும், இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக்…
-
அயல்நாடுகளை எப்போதுமே மாற்ற முடியாது – இந்திய அமைச்சர் கொழும்பில் கருத்து
“வாழ்க்கையில் எல்லாமே மாறலாம், ஆனால் அயல்நாடுகளை எப்போதுமே மாற்ற முடியாது. வாழ்க்கையில் நண்பர்கள் மாறலாம், ஆனால் அயல்நாடுகள் மாறவே முடியாது” என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க தெரிவித்துள்ளார். இலங்கையை இந்தியாவின் மிக நெருங்கிய நண்பராக இந்தியா கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று இலங்கைகை வந்தடைந்தார். இந்தநிலையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற சமூகம் சார்ந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், இலங்கை எதிர்கொள்ளும்…
-
துபாயில் இருந்து அழைத்து வரப்பட்ட ‘கொண்ட ரஞ்சித்’ கைது
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ‘கொண்ட ரஞ்சி’ இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோதே கடந்த ஜனவரி 09 ஆம் திகதி டுபாயில் கைது செய்யப்பட்டிருந்தார். அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் அவருடன் இணைந்து அவரது மனைவியும் குழந்தைகளும்…