Category: இலங்கை செய்திகள்

  • ஐந்தில் இரு பெண்களுக்கு கணவர்களால் துன்புறுத்தல் – ஆய்வில் வெளியான தகவல்

    இலங்கையிலுள்ள பெண்களில் ஐவரில் இருவர் (நூற்றுக்கு 39.8 சதவீத) அவர்களின் வாழ்நாளில் வாழ்க்கைத் துணைவர்களால் சரீர, பாலியல், உள மற்றும் பொருளாதார ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக புதிய ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதேபோன்று, இலங்கையிலுள்ள பெண்களில் நால்வரில் ஒருவர் 15 வயதிலிருந்தே சரீர மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக அந்த ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 08 மாவட்டங்களில் 888 பெண்கள் மற்றும் 109 பணியாளர்களூடாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் அவர்களின் அனுபவங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கையில், இலங்கையில்…

  • இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதில் சட்டரீதியான தடை

    சிங்கப்பூரின் குடியுரிமை பெற்ற இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதற்குச் சட்டரீதியான தடை நிலவுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். எனினும், அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார். சிங்கப்பூரில் வசித்து வரும் அர்ஜுன மகேந்திரன் தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளதாக விஜேபால குறிப்பிட்டார். “அவரை நாட்டிற்கு நாடுகடத்துவதில் சட்டரீதியான தடை உள்ளது” என்று தெரிவித்த அமைச்சர், எனினும்…

  • இலங்கை ஜனாதிபதி வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தளதா மாளிகையில் வழிபாடு

    வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தளதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (27) பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தளதா மாளிகைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். அத்துடன், பெரஹரா விழாவை முன்னிட்டு தளதா மாளிகைக்கு வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களின் மத்தியிலும் சென்ற ஜனாதிபதி, அவர்களின் நலன்களையும் கேட்டறிந்தார். மத்திய மாகாண ஆளுநர் நிபுணத்துவ வைத்தியர் ஹர்ஷ சுரங்க உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில்…

  • நேபாள வெள்ள நிவாரணத்திற்கு உதவ இலங்கை தயார்

    நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் நிலைமை தொடர்பில், நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானலுடன் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு தேவையான உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். பேரழிவைத் தொடர்ந்து நேபாளத்திற்கு தேவையான உதவிகளை அடையாளம் கண்டு வழங்குவதற்காக, இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையங்கள் நேபாள அதிகாரிகளுடன் நெருக்கமாக…

  • இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கையர்களுக்கு நாடு திரும்ப சட்டரீதியான தளர்வு

    இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கும் அல்லது கைதுகளுக்கும் உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். யுத்த காலத்தில் உயிரைப் பாதுகாப்பதற்காக முறைசாரா வழிகளில் நாட்டை…

  • செம்மணி குறித்து சுயாதீன விசாரணைக்கு அவுஸ்திரேலியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தல்!

    யாழ்ப்பாணம் – செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் முறையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது இதனைக் குறிப்பிட்ட அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இந்த விவகாரத்தை தீவிரமாக எழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதற்குத் தனது ஆதரவை வழங்கும்…

  • தியாகி பொன் சிவகுமாரனின் 76 ஆவது பிறந்தநாள் நினைவு தினம் அனுசரிப்பு!

    தியாகி பொன் சிவகுமாரனின் 76 ஆவது பிறந்தநாள் நினைவு தினம் உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலையில் இன்று காலை உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வு தியாகி பொன் சிவகுமார் நினைவேந்தல் குழு உறுப்பினர் எஸ்.செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது. நினைவு தினத்தை முன்னிட்டு உரும்பிராயிலுள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தியாகி பொன் சிவகுமாரனின் தியாகங்களை நினைவு கூர்ந்து சிறப்பு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

  • செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா – இராணுவத்தினர் வழங்கிய அனுமதி

    செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா, தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு, பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் பலாலி வீதியில், கடந்த வருடம் நடந்து செல்வதற்கோ , வாகனங்களில் தரித்து நிற்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்டு, நேர கட்டுப்பாட்டுடன் வீதி திறந்து விடப்பட்டது. இந்நிலையில், செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா நாளையதினமும் (27) மற்றும் தீர்த்த திருவிழா நாளை மறுதினம் (28) நடைபெறவுள்ள நிலையில், ஆலயத்திற்கு செல்லும் காவடிகள், பாத யாத்திரைகளுக்காக…

  • ”கோபாலா நீ வாடா” – மனதை உருக்கும் தாயின் பிரார்த்தனை

    யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டப வாயிலில் காணப்பட்ட பதாகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது பிரார்த்தனையை எழுதி காட்சிப்படுத்தியுள்ளனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மண்டப வாயிலில் உள்ள பதாகையில் தமது பிரார்த்தனை துண்டு சீட்டுக்களை இவ்வாறு காட்சிப்படுத்தியுள்ளனர்.

  • ஜனாதிபதியின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி!

    உலகவாழ் முஸ்லிம்கள், தியாகத்தை முன்நிறுத்தி மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் ஜனனதின கொண்டாட்டமான மீலாதுன் நபி விழா சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட தினம், வெறும் விழாவிற்கும் அப்பால் ஆழமான ஆன்மீக வடிவத்தை எதிர்பார்க்கும் ஒரு கொண்டாட்டமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். முஸ்லிம்களினால் கொண்டாடப்படும் புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு,ஜனாதிபதி வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாழ்த்து செய்தியில்,…