Category: இந்திய செய்திகள்
-
இந்திய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த நிலையில்,இந்திய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார். நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி இயக்கத்தினர் 35 நாட்களாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் மத்திய அரசு அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டக்காரர்களுக்கு பிரதமர்…
-
தமிழ் நாட்டில் தொடரும் லாக்கப் மரணங்கள்
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் டாஸ்மாக் பார் ஊழியர் அருணாச்சலம் (24). காவல்துறையினர் தாக்கியதில் தலையில் காயம் அடைந்து உயிரிழந்திருக்கிறார் என்ற குற்றசாட்டு எழுந்திருக்கிறது. திமுக ஆட்சியில் லாக்கப் மரணம் அடைந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்… இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் ஸ்டாலின், தமிழக மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும்… இது 2025-ம்…
-
நிலவில் 250 முறை நில அதிர்வு ஏற்பட்டதை, ‘பிரக்யான் ரோவர்’ பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்த இல்ஸா (ILSA – Instrument for Lunar Seismic Activity) என்ற அதிர்வு அறியும் அதிநவீனக் கருவி, நிலவின் தென் துருவத்தில் 250-க்கும் மேற்பட்ட நில அதிர்வு சிக்னல்களைப் பதிவு செய்துள்ளது. பதிவு செய்யப்பட்ட 250+ அதிர்வுகளில், சுமார் 200 அதிர்வுகள் நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் நகர்ந்தபோது ஏற்பட்ட அதிர்வுகள் மற்றும் பிற அறிவியல் கருவிகளின் செயல்பாடுகளோடு தொடர்புடையவை ஆகும். மீதமுள்ள 50 அதிர்வுகள் எந்தவொரு ரோவர்…
-
டெல்லி போராட்டம்: மாணவர்களுக்காக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர், ஆலியா பட் ஆதரவு
இந்தியாவின், டெல்லி – ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய நடிகை ஆலியா பட் ஆகியோர் கண்டனம் தெரிவித்து மாணவர்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாணவர்களின் கடின உழைப்பு அங்கீகரிக்கப்படாத போது அவர்கள் ஏமாற்றமடைவது இயல்பானதே. இத்தகைய நிலை மீண்டும் அவர்களுக்கு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய…
-
நீட் விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி!
நீட் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதில் அளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஏற்பட்ட பிறகு இந்திய மருத்துவ சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி நரசிம்மா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. குறிப்பாக நீட் மோசடியை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தற்போது மத்திய அரசிற்கு மறு உத்தரவை பிறப்பித்துள்ளது. தற்போது வரையிலும் இந்த விவகாரம் தொடர்பாக பதில் மனு மத்திய…
-
இந்தியாவில் உண்ணாவிரதம் முடிந்தது..
இந்தியாவில் Neet மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் மற்றும் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, டெல்லி ஜாந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது 26 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ உத்திரவாதங்களைத் தொடர்ந்து,…
-
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு – இந்தியப் பிரதமர் மோடி
நீட் (Neet) வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்தை விட முக்கியமானது எதுவுமில்லை என வலியுறுத்திய அவர், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும், வினாத்தாள் கசிவு போன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த பிரதமர் மோடி, இளைஞர்களின்…
-
போராட்டத்தின்போது பர்கர் சாப்பிட்ட பேச்சாளர் நீக்கம் – கரப்பான் பூச்சி கட்சி அதிரடி!
டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற போராட்டத்தின் போது, அதில் பங்கேற்காமல் உணவகத்தில் பர்கர் சாப்பிட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேச்சாளர் அந்தப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். சி.ஜே.பி சார்பில் டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மற்றும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையைப் பிரயோகித்த நேரத்தில், கட்சியின் பேச்சாளர் அருகிலுள்ள உணவகத்தில் பர்கர் சாப்பிட்டபடி, விமர்சிப்பவர்களைக் கேலி செய்யும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இதுகுறித்து…
-
இந்திய ரெப் பாடகர் அறிவு கைது
பிரபல தமிழ் ரெப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நீட் (Neet) தேர்வுக்கு எதிராக திடீர் போராட்டம் நடத்தியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடகர் அறிவு தனது ஆதரவாளர்கள் 4 பேருடன் சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழைந்து, ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என முழக்கமிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து கோஷமிட்டதால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி,…
-
ராகுல் காந்தி கைது: டெல்லியில் பரபரப்பு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் இன்று (ஜூலை 21, 2026) காவல் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் (Neet) வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்து, பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே இளைஞர்களுக்கு எதிராகச் செயல்படும் ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான் என்று ராகுல் காந்தி…